விலங்கியல்

வால் காக்கை (Rufous Treepie)

இந்தியா முழுவதும் காணப்படுகிற இப்பறவையின் Dendrocitta Vagabunda என்னும் அறிவியல் பெயரின் பொருள் மரங்களுக்கு இடையே அலைபவன் (Wanderer amongst trees) என்பதாகும். காகத்தை போலவே தடித்த அலகும், கருப்பு தலையும், கருப்பு, வெள்ளை, சாம்பல் நிறத்தில் இறக்கையும், இறக்கையில் வெள்ளை பட்டை காணப்படும் மைனாவின் அளவில் இருக்கும் இவற்றின் நீண்ட வால் சாம்பல் நிறம் மற்றும் கருமை முனையுடையது. இப்பறவை தமிழில் வால் காக்கை என அழைக்கப்படுகின்றது. இவற்றின் உணவு பழம், பூச்சிகள், சிறு பல்லிகள், பிற பறவைகளின் முட்டை,குட்டிகள் என்ற கலவையாக இருக்கும் . கூட்டமாக காடுகளிலும் நகரப்பகுதிகளிலும் வீடுகளுக்கு அருகிலும் இவை வசிக்கும். இதன் ஆண் பெண்பறவைகள் வேறுபாடுகளின்றி ஒன்று போலவே இருக்கும்.

ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை இவற்றின் இனப்பெருக்க காலத்தில் நான்கு முதல் ஐந்து வெண் சிவப்பு நிறத்திலான முட்டைகளை இடும்.. தனது கூட்டை மரத்தின் உயரத்தில் இலைகளுக்கு நடுவில் மறைவாக அமைக்கும். இதன் பிற பெயர்கள்; மாம்பழத்தான் ,அவரை கன்னி ,ஓலை நாலி ,முக்குருணி ,அரிகாடை.

This writing is the work of Rahul Tharun, who is solely responsible for its content. The views in it are the author's own and not those of NEERMAI. Writer responsibility · Report a concern

Encourage the writer

Enjoyed it? Share it with a friend
Writing prompt

This week: write about a letter you never sent

A poem, a story or a few honest lines. Every entry is read by our team.

Start writing

Comments

Your voice belongs here

Have a story of your own?

Join 163 writers sharing stories, poems and articles on NEERMAI. Write in any language, from your phone, in a safe and kind community.

  • Your own writer profile
  • Readers, followers and kind words
  • Every post checked with care
Become a writerFree. It takes about three minutes.

More from Rahul Tharun

RTRahul Tharun27 Aug 2020

பற்றுக்கொடிச்சுருள் (Tendrils)

பேஷன் பழக்கொடியின் பற்றுக்கொடிச்சுருள். பலஹீனமானதண்டுகளையுடைய , பற்றிப்படரும் தாவரங்கள் பிற வலுவான துணையொன்றீன் மீது படர ஏதுவாக இருபவையே கொடிச்சுருள்கள். இவை  கிளைத்தும், கிளைகளின்றியும் பல்வேறு நீளங்களிலும் காணப்படும்.    

தாவரவியல்1 min read
RTRahul Tharun20 Aug 2020

நீலகிரி வரையாடு (Nilgiri Tahr)

வரையென்றால் மலை அல்லது குன்று ஆகிய இடங்களில் வாழும்காட்டு வரையாடு. மேற்குத் தொடர்ச்சி மலைகளுக்கே உரிய சிறப்பினங்களில் ஒன்றான இவை  4000 அடி உயரத்திற்கு மேலேயுள்ள மலைமுடிகளில் மட்டும் வாழும். அழிந்துவரும் இனங்களில் ஒன்றான இவ்விலங்கு…

விலங்கியல்1 min read
RTRahul Tharun4 Aug 2020

பாம்புக்கற்றாழை மீது நீண்ட உணர்கொம்புகளுடன் சிறுபூச்சி

சிறுபூச்சி இனங்கள் தொடு உணர்வு,சுவை மணம் மற்றும் ஒலியதிர்வுகளை அறிதல், வெப்பமுணர்தல் மற்றும் நகர்தலின் பொருட்டு பெரும்பாலும் உடலின் முன்பகுதியில் கொண்டிருக்கும் நீண்ட இழைபோன்ற அமைப்புக்களே உணர்கொம்புகள் எனப்படும்.         

புகைப்படங்கள்1 min read
RTRahul Tharun31 Jul 2020

கோமாளிவண்ண வெட்டுக்கிளி (Clown grasshopper)

வெட்டுக்கிளிகளில் சுமார் 11 ஆயிரத்திற்கும் அதிகமான வகைகள் உள்ளன. இவை பொதுவாக புல்வெளிகளிலும் வயல்வரப்புக்களிலும் காடுகளிலும் காணப்படுகின்றன. வெட்டுக்கிளிகள் கால்களின் முழங்கால் போன்ற பகுதியை மடக்கி தாவி  வேகமாக குதிக்கும் தன்மைகொண்டவை. தாய்லாந்து, ஜப்பான் சீனா…

விலங்கியல்1 min read

More in விலங்கியல்

See all
0
Would love your thoughts, please comment.x
()
x