கவிதை - ஜூன் 2020

வெளிச்ச வீடவள்

“அதிக காற்று – கடலில்
மீன்பிடிக்குச் செல்ல வேண்டாம்”
கூறியது வானொலி – இது
என்னைக் கூறிட்ட வானிடி

செல்பவனை தடுத்திடலாம் – பலத்த
காற்றாம் போகாதே என்று
சென்றவனை வரவழைக்கும் உத்தி
ஏதும் நான் அறியேன்


ஆழி அன்னை சாட்சியாக
தாலி பெற்ற நாளன்று
வாழி! என்ற கூற்று எல்லாம்
போலியாகிப் போய்விடுமோ?

கடலம்மா உன்னைக் கைகூப்பி
வேண்டுகின்றேன்
கரம்பிடித்தான் உன்னிடத்தே காணா தூரம் வந்து விட்டான்
காற்றின் பிடி சிக்கிடாமல் பக்குவமாய்
கரைசேர்ப்பாய்.

மீன்மகளைஅள்ளி வரும்
வேட்கையோடு சென்ற அவன் – இப்
பாவிமகள் துன்பம் தீர
ஆவியோடு மீள வேண்டும்.


காய வைத்த கருவாடாய் வாடிக்
கரையில் காத்திருக்கேன்
இவள் உப்பாய் கரையும் முன்பு
உவப்பாய் தோன்றிடையா!

கையில் லாம்பு ஏந்தி நிற்கிறேன்
உன் வெளிச்ச வீடாய்
உதயம் காட்டிடுவாய் கடல் மடியில்
புலரிப் பொழுதாய்

வெளிச்சம் தெரிகிறது கடல் வழியே
கண்டு கொண்டேன்
இதோ!
என் வேண்டுதல் யாவும்
கைகூடிச் சேர்ந்திடுமோ?
காணல் நீராய் போய் விடுமோ?…

This writing is the work of வஞ்சிமறவன், who is solely responsible for its content. The views in it are the author's own and not those of NEERMAI. Writer responsibility · Report a concern

Encourage the writer

Comments 1

Join the conversation

Become a reader on NEERMAI, free, and be part of a kind and safe community of writers and readers.

  • Leave kind comments and replies
  • Encourage writers with kind words
  • Follow the writers you love
  • Chat with writers, safely
Join free as a readerSign inFree, and it takes about a minute.

Enjoyed it? Share it with a friend
Writing prompt

This week: write about a letter you never sent

A poem, a story or a few honest lines. Every entry is read by our team.

Start writing

Your voice belongs here

Have a story of your own?

Join 179 writers sharing stories, poems and articles on NEERMAI. Write in any language, from your phone, in a safe and kind community.

  • Your own writer profile
  • Readers, followers and kind words
  • Every post checked with care
Become a writerFree. It takes about three minutes.

More from வஞ்சிமறவன்

வவஞ்சிமறவன்25 Aug 2021

புஷ்பக விமானம்

வனப்பான வழிகள் எல்லாம் மொழியாத கதைகள் பேசி வளி நிறைத்த சக்கரங்கள் இதமாக உருண்டு வரும் மிதிவண்டி தனையோட்டி மகிழ்நகையிற் களிக்கும் மனம் நதியன்ன நகர் வாழ்வில் ஓர் சீர்பெற்ற பாகமது பாமரன் எனும் இராவணன்…

வாழ்வியல்1 min read
வனப்பான வழிகள் எல்லாம் மொழியாத கதைகள் பேசி வளி நிறைத்த சக்கரங்கள் இதமாக உருண்டு வரும் மிதிவண்டி தனையோட்டி…
வவஞ்சிமறவன்5 Dec 2020

அடுத்தது!?

நான் இப்போதும் பயங்கர கோபத்தில் தான் இருக்கிறேன். என்னை இப்படி தன்னந்தனியாக தவிக்கவிட்டுச் சென்ற என் தாத்தா மீது. காலம் போன போக்கில் எல்லாம் மறைந்து போனாலும் எதுவும் மறந்து போகவில்லை. தலைநகரில் பெரிய பதவியில்…

கதைகள்10 min read
நான் இப்போதும் பயங்கர கோபத்தில் தான் இருக்கிறேன். என்னை இப்படி தன்னந்தனியாக தவிக்கவிட்டுச் சென்ற என் தாத்தா மீது.…
வவஞ்சிமறவன்17 Jul 2020

பற்ற வைத்த நெருப்பொன்று…

சூரியன் இன்னும் சில மணிநேரங்களில் அஸ்தமனம் ஆகிவிடும் போல் தெரிகிறது. எந்தவொரு நடமாட்டமும் அற்ற அந்தப் பெருந்தெரு வழியே வெள்ளைநிற கார் மட்டும் தன்னந்தனியே ஓர் சீரான கதியிலே நகர்கிறது. காரை ஓட்டிச்செல்லும் ஹர்ஷனின் கைத்தொலைபேசி…

கதை ஜுலை - 202015 min read
சூரியன் இன்னும் சில மணிநேரங்களில் அஸ்தமனம் ஆகிவிடும் போல் தெரிகிறது. எந்தவொரு நடமாட்டமும் அற்ற அந்தப் பெருந்தெரு வழியே…
வவஞ்சிமறவன்11 Jun 2020

காலத்தின் கைதி…….

" ஹலோ... செந்தில் ஹியர், யார் பேசுறிங்க?....". போன் உடனே கட் ஆனது. செந்திலுக்கு எதுவும் புரியவில்லை. "புது சிம், புது போன் யாருக்கும் நம்பர் தெரிஞ்சிருக்காதே...." தன்னைத்தானே கேட்டுக்கொண்டே பூஜாவைப் பார்த்தான். அது பூஜாவோட…

கதை - ஜூன் 20206 min read
" ஹலோ... செந்தில் ஹியர், யார் பேசுறிங்க?....". போன் உடனே கட் ஆனது. செந்திலுக்கு எதுவும் புரியவில்லை. "புது…

More in கவிதை - ஜூன் 2020

See all
நீர்மை வலைத்தளத்தின் முதலாவது ஆண்டு நிறைவையொட்டி நடாத்தப்பட்ட கவிதை மற்றும் கதைப்போட்டிகளில் பங்குபற்றிய அனைத்து எழுத்தாளர்களுக்கும் எமது வாழ்த்துக்கள்…

நீர்மை இலக்கியக் கொண்டாட்டம் போட்டி முடிவுகள் – ஜுன் 2020

Nirma