கவிதை - ஜூன் 2020

காதல்

பூமியில் நாம் அவதரிக்க
பூரிப்புடன் ஈன்றெடுத்த அன்னையின் முதல் காதல்

அன்போடு அறிவையும் ஊட்டி வளர்த்து
அடி தவறி நிற்கையிலே அறிவுரை நமக்களித்த தந்தையின் காதல்

சண்டைகள் வந்திடினும் சலிக்காமல்
சஞ்சலம் தீர்த்து நிற்கும் சகோதரப் பாசம் அது காதல்

பள்ளிப் பருவம் முதல் பிரிந்திடா சிந்தையுடன்
ஆறுதல் நமக்களித்த ஆறுயிர் நண்பன் மீது நாம் கொண்ட காதல்

இறைவன் அளித்த வரமென எண்ணி
இயற்கையை ரசித்திடவே நாம் இயற்கை மீது கொண்ட காதல்

கரம் பிடித்த தாரம் அதை – என்றும்
கைவிடவே மாட்டேன் என்ற தாரம் மீது கொண்ட காதல்

தந்தை என்றழைக்க தவமிருந்து பெற்றெடுத்த
தம் பிள்ளை மீது நாம் கொண்ட காதல்

செல்லமாய் கொஞ்சிட நாம் வளர்த்த
செல்லப்பிராணி மீது நாம் கொண்ட காதல்

நம்பிக்கையுடன் புரிந்துணர்வும் ஓங்கி நிற்க
எண்ணங்கள் அலை பாய
எம்மனம் இணைந்திருக்க

நாம் கொண்ட நேசமும்
நாம் ரசிக்கும் ஒவ்வொன்றும் ஒரு வகைக் காதலே………….

Encourage the writer

Enjoyed it? Share it with a friend
Writing prompt

This week: write about a letter you never sent

A poem, a story or a few honest lines. Every entry is read by our team.

Start writing

Comments 1

More from நிவேஷலா

நநிவேஷலா9 Jun 2020

உன்னோடு நானிருக்கும் ஒவ்வொரு மணித்துளியும்

உதட்டிலே புன்முறுவல்உள்ளத்திலே பூரிப்புஉறவென்று உரிமையோடுஉயிரோடு கலந்து விட்டேன்உன்னோடு நானிருக்கும்ஒவ்வொரு மணித்துளியும்கண்ணைப் பறித்துகனவோடு சிதைத்துகாலமெல்லாம் காத்திருந்தேன்காதலுக்கு அது வரமேஉன்னோடு நானிருக்கும்ஒவ்வொரு மணித்துளியும் தீராத சோகங்களும்தீருமே நீ தந்த ஆறுதல்கள்ஆயிரம் ஆசைகளோடுஆறுயிரே வேண்டுகிறேன் இன்பம் பொங்கி வரஉன்னோடு நானிருக்கும்ஒவ்வொரு…

கவிதை - ஜூன் 20201 min read
நநிவேஷலா4 Jun 2020

காலம் மாறியது

ஜாதகம் பார்த்து பெண் எடுப்பது அந்தக் காலம் அந்தஸ்து பார்த்து பெண் எடுப்பது இந்தக் காலம் பந்தம் பெரிதென எண்ணும் அந்தக் காலம் பணத்தை பெரிதென எண்ணும் இந்தக் காலம் சமாதானத்தை வளர்த்திட்ட அந்தக் காலம்…

கவிதை - ஜூன் 20201 min read
நநிவேஷலா3 Jun 2020

பாடசாலை வாழ்க்கை

சின்னஞ்சிறு பருவமதில் சித்திரம் பேசுதடி உடன் பிறவா உறவுகளை பாடசாலை தனில் சந்தித்தோம் சின்னச்சின்னக் குறும்புகளை சிக்காமல் செய்திடுவோம் ஆசானை வணங்கிட்டே அறிவுக் கடலில் நாம் மிதப்போம் முதல் நட்பு உருவாகிய காலமது எம்மை அறியா…

கவிதை - ஜூன் 20201 min read

More in கவிதை - ஜூன் 2020

See all
1
0
Would love your thoughts, please comment.x
()
x