கவிதை - ஜூன் 2020

வழிகாட்டி

இலக்கு என்னும் வழிகாட்டி
இல்லத்தில் அன்னை தந்தை
இனிப்பான கல்விக்கு வழிகாட்டி
இறைக்கு இணையான குரு

வீதியில் நல்ல வழிகாட்டி
விபத்தை விலக்கும் குறியீடு
நீதிநெறி நேர்மை வழிகாட்டி
நின்ற மாமறை நூல்கள்
வாழ்வுக்கு நல்ல வழிகாட்டி
வாழ்ந்து மறைந்த மாமேதைகள்
வாழும் நாள்முடிவில் வழிகாட்டி
வாழ்வு தந்த அனுபவம்

தூய்மைத் தமிழுக்கு வழிகாட்டி
தொன்மை மிகும் நூல்கள்
தொலைந்த தமிழ் தேடலுக்கு வழிகாட்டி
தொல் காப்பியமெனும் ஓலை
பண்படுத்த மனதின் வழிகாட்டி
பழமைத் தமிழ் நூல்கள்
அன்பாகும் நல்ல வழிகாட்டி
ஆருயிர் உங்கள் நண்பன்

வெளிச்சம் நல்ல வழிகாட்டி
இரவின் பாதை செல்ல
துணிச்சல் நல்ல வழிகாட்டி
தோன்றும் துயர் துடைக்க
உணர்ந்தால் உலகே வழிகாட்டி
உன்னத வாழ்வை வாழ்வதற்கு
கலகமும் நல்ல வழிகாட்டியேதான்
வழி பிறந்து பாதைவிடுவதற்கு

Encourage the writer

Enjoyed it? Share it with a friend
Writing prompt

This week: write about a letter you never sent

A poem, a story or a few honest lines. Every entry is read by our team.

Start writing

Comments

More from திரு.க.முரளிதரன்

திரு.க.முரளிதரன்6 Jun 2020

அன்னை

அன்னை என்பவள் தெய்வமம்மா - அவள்அன்பினைப் போலெவரும் இல்லையம்மாஉண்ண உணவினை ஊட்டிடுவாள் - அதில்உதிரம் கலந்தே உணர்வூட்டிடுவாள் கண்ணை இமைபோல் காத்திடுவாள் - அவள்கன்னம் கொஞ்சி மகிழ்ந்திடுவாள்விண்ணில் நிலவைக் காட்டிடுவாள் - தினம்விருந்தாய் உணவை ஊட்டிடுவாள்தாலாட்டுப்…

கவிதை - ஜூன் 20201 min read
திரு.க.முரளிதரன்6 Jun 2020

கனவிலும் உன் நினைவே

கடலோர மணலில் பெயரெழுதிகைவிரல் சுருள்கேசம் கோதிவிடலையின் பருவம் விளையாடிவிழிமுன் நீயிருந்த காலங்கள்பிடிக்கும் நிறத்தில் ஆடைகொண்டுபிள்ளையார் கோயில் வந்தாய்படிக்கும் பெருங்கதை மறந்துபார்வைக்குள் உயிர் நெய்தாய் மடிப்புக் குலையா வேட்டியோடுமருதமர நிழல்மறைவில் நானிருந்துஅடிக்கடி விழிசாய்த்து அழைக்கஆகாதென்று அசைவில் சொன்னாய்துடிக்கும்…

சோகம்1 min read
திரு.க.முரளிதரன்6 Jun 2020

அழகான விடியல்

ஆழிமேல் கடலலைகள் அழகாக ஆடும்ஆதவனின் கதிராடி அழகங்கே சூடும்தூளியாடும் தொட்டிலெனத் தோணிகள் ஆடும்துணைகாண மனையாள் துயரங்கு ஒடும்கருஞ்சேவல் கூவக் காகங்கள் கரையும்கடலோடும் படகுகள் கரைதேடி விரையும்அரும்புகள் அழகிதழ்கள் அழகாக விரியும்ஆதவன் கதிரழகுச் சுடரெங்கும் எறியும் பணிநாடிப்…

கவிதை - ஜூன் 20201 min read
திரு.க.முரளிதரன்1 Jun 2020

தேடல்

அறிவின் தேடல் புலமை சேர்க்கும்அன்பின் தேடல் உறவை வளர்க்கும்வாழ்வில் தேடல் உள்ள வரைக்கும்வாழ்க்கை ஆசைக் காடு வளர்க்கும் தேடல் வாழ்வில் உள்ள வரைக்கும்தேவை நெஞ்சில் தேங்கிக் கிடக்கும்தேடல் அறிவின் தேவை பெருக்கும்தேர்வில் நல்ல திறனைச் சேர்க்கும்…

கவிதை - ஜூன் 20201 min read

More in கவிதை - ஜூன் 2020

See all
0
Would love your thoughts, please comment.x
()
x
Enable Notifications OK No thanks