நேசம்

மாயோனின் செல்லம்மா#2

#மாயோனின் செல்லம்மா#பாகம்#2
பிரியா விடை பெற்று பிரியங்களை தொலைத்துவிட்டு 
உயர பறக்க துவங்கியதும் உறவுகள் அறுபடுவதை உணர்கிறேன் நான் 
இதோ இன்றிலிருந்து இரு வருடங்களுக்கு மனைவி , மக்கள், உற்றார் , உறவினர்ஏதுமின்றி புதியதோர் உலகில் நான் பிரசவிக்க ஆயுத்தமாகிறேன் !
காலத்தின் கட்டாயமும் காசு பணத்தின்அத்தியாவசியமும்அக்கரை நோக்கிய பயணம் இது 
உணவு முறை மாறக் கூடும் உறங்கும் நேரம் மாறக் கூடும் ஆனால் உணர்வுகள் மட்டும் அடியேய்உந்தன் நினைப்பிலே 
தினம் இரவில் என் மார்மீது உறங்கிய உன் முகத்தின் சுவடுகளும் கூந்தலின் தடங்களும் இனி காண பல விடியல்களாகும் என கவலைகள் ஒருபுறமிருந்தாலும் 
வாழ்வாதாரம் வேண்டியே வழி தேடி செல்கிறேன்
பிரிவுகள் ஒன்றும் புதிதல்லவேஎனக்கு
முதல் நாள் பள்ளி செல்ல முதல் முறையாய் முந்தானை வாசம் மறந்தேன் நொடியும் விடாமல் மடியிலேத்தி வலம் வந்த என் தாயின் பிரிவால் 
அடுத்தடுத்த வகுப்புகள் செல்ல அன்பாய் அறிவூட்டிய ஆசிரியரை பிரிந்தேன் 
பருவங்கள் பழக்கங்கள் மாற நட்பினை பிரிந்தேன் 
இதோ இங்கு மீண்டுமொரு முதலிரவுபல வருடங்கள் கழித்து தனிமையிலே…
அனுதினம்அரவணைத்து உறங்கிய மனைவியும் இல்லை..கட்டியணைக்க 
உறங்கும் முன் கதைகேட்க அர்த்த ராத்திரியில் அவசரம் என‌தூக்கத்தை கலைக்க மழலையும் இல்லை..
நிசப்த அமைதி காரிருள்அசந்து உழைத்ததில்உடல்வலி இருந்தும் மூட மறுக்கிறது இமைகள் உன்பிரிவின் வலியால்…செல்லம்மா..நீயில்லா நாட்கள் நரகமேயடி..- இவன் உன் மாயோன் 

This writing is the work of RithuSurya Riya, who is solely responsible for its content. The views in it are the author's own and not those of NEERMAI. Writer responsibility · Report a concern

Encourage the writer

Comments 7

Join the conversation

Become a reader on NEERMAI, free, and be part of a kind and safe community of writers and readers.

  • Leave kind comments and replies
  • Encourage writers with kind words
  • Follow the writers you love
  • Chat with writers, safely
Join free as a readerSign inFree, and it takes about a minute.

Enjoyed it? Share it with a friend
Festival wishes

Happy Deepavali from NEERMAI

May the festival of lights bring peace, joy and new stories to you and your family.

Your voice belongs here

Have a story of your own?

Join 166 writers sharing stories, poems and articles on NEERMAI. Write in any language, from your phone, in a safe and kind community.

  • Your own writer profile
  • Readers, followers and kind words
  • Every post checked with care
Become a writerFree. It takes about three minutes.

More from RithuSurya Riya

RithuSurya Riya14 hours ago

தீபாவளி வாழ்த்துகள் எல்லா கடவுளும் எல்லா மதமும் வாழ்த்துகளோடு என் வீட்டில் மகிழ்வோடு மகிழ்வாக இருக்கச்சொல்லி.. பிடித்திருக்கு ஒவ்வொரு வாழ்த்து பரிமாற்றமும் எனதாக.. எனக்காக

..ப்ச்!வெடித்து சிதறும்புகையும் பணமும்கூட மகிழ்வே....இந்நாள் தீயவைகளைஅகற்றிய தீபங்களின்திருநாள்..ஒலியின் ஒளியின்நன்னாள்....இன்றொரு நாள்மட்டுமல்ல எல்லா நாளிலும்எல்லாருக்கும் எல்லாம் கிடைக்கஅல்லது குறைந்துநல்லது நிறைந்து வெளிச்சம் பெருகமகிழ் வாழ்த்துகள் -ரியா@ரித்துசூர்யாசென்னை!! 

கொண்டாட்டங்கள்1 min read
RithuSurya Riya1 day ago

மாயோனின் செல்லம்மா (கவிதையில் கதை)

#மாயோனின் காதலி #செல்லம்மா#பாகம்#1( அயல்நாட்டிற்கு தன்னவனை தத்தம் கொடுத்த வலிகளின் சுவடுகள்)செல்லம்மா பேசுகிறாள்உனையன்றி நானிருப்பதுசாத்தியமில்லை..நீயின்றி நம் வாழ்வு மேலெழும்ப வாய்ப்பில்லை..அன்பே இருப்புக்கும் இழப்புக்கும்நடுவே உழன்று மடியாமல்..உன்னை விடுவிக்கிறேன்...காதலோடும் கனவோடும்உன்நிஜத்தோடு பிணைந்த நினைவுகளோடு குடித்தனம் நடத்திகொள்கிறேன்....நீ என்னினைவு…

தொடர் கதைகள்1 min read
RithuSurya Riya1 day ago

மனமே நீ!!

எத்தனை முறை கேட்டாலும்பிடித்திருக்கென..அத்தனை முறையும்நம்பவைக்கும்..ஏமாற்றும் மனம்பூம்பும் மாடு தான்....நீ அசையச்சொன்னாய்..இசைந்தேனென....சரியின் இன்பமோ..பிழையின் துன்பமோ..நான் பொறுப்பில்லையென..வேடிக்கை பார்க்கும்..ப்ச்! அடுத்தென்ன செய்யப் போகிறாய்விழுவதும் எழுவதும்உன்பாடென..சீண்டியே..கொல்லும்....பலம் பொருந்தியே!! 

கவிதைகள்1 min read

More in நேசம்

See all
7
0
Would love your thoughts, please comment.x
()
x