கதைகள்

அகத்தவன் அன்பில் அடைக்கலம் நான்..!!

அன்பு 6

தங்க நிற டஸ்ட் ஊறிய ஜெல் பேனையினால் அந்த சிறு கார்டின் நடுவே,

" A little Rapunzel to my beautiful princess " என அழகாய் எழுதியிருந்தது. அதைப் பார்த்ததும் இது தனக்கு வந்த பார்சல் தானா என சந்தேகத்துடன் மீண்டும் பொதி செய்திருந்த ரெப்பிங் பேப்பரை பார்த்தாள்.

அதில் தெளிவாக அவள் பெயர் புலனாகியதில் மனதில் இருந்த சந்தேகமும் பறந்து விட, இப்போது வியப்பு வந்து குடியேறியது.

மீண்டும் மீண்டும் அந்த வாசகத்திலே கண்களைக் ஓடவிட்டவள், அதில் எழுதி இருந்த " ப்ரின்செஸ் " என்ற சொல்லில் கண்கள் சற்று பனிக்க மென்மையாய் இதழ் விரித்தாள். அப்படித்தானே ஆத்யாவின் தாய் தேவிகா அவளை அழைப்பதும். எத்தனையோ ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அப்பெயர் அவளைத் தழுவிக் கொண்டதில் அவளின் நெஞ்சம் விம்மி அடங்கியது.

' யாரா இருக்கும்..ஒரு வேள ரியாவோ..'என யோசித்துக்கொண்டிருக்கும் போதே சைலண்டில் போட்டிருந்த அவளின் போன் வைப்ரேட் ஆகி அவள் கவனத்தை கலைத்தது.

அவளின் போனில் சேவ் செய்யப்படாது இருந்த ஹரி பிரணவின் நம்பரில் இருந்து குறுஞ்செய்தி வந்திருந்தது. அன்றைய நாளில் அவன் அனுப்பிய குறுஞ்செய்தி ஒன்றுக்கும் அவள் பதில் அனுப்பாதிருக்க அதையொன்றும் எதிர்பாராதவனாய் காலையில் பகலில் இரவில் என மாத்திரை சாப்பிடுவது போல்,

' குட் மார்னிங் ' ' குட் ஆஃப்டர் நூன் '' குட் நைட் ' என சிவப்பு வண்ண ஹார்ட் எமோஜியுடன் தவறாமல் குறுஞ்செய்திகளை அனுப்பிவிடுவான். அதையெல்லாம் தவிர்க்க முடிந்தவளுக்கு தற்போது அவன் அனுப்பியதை தவிர்க்க முடியவில்லை.

" ஹேப்பி? "

என கேள்வியாய் நிறுத்தி ஊதா வண்ண ஹார்ட் எமோஜியுடன் அனுப்பி இருந்தான். அவளோ திடீரென சம்பந்தமே இல்லாது அவன் அனுப்பிய குறுஞ்செய்தியையே பார்த்துக்கொண்டிருக்க, அப்போது தான் பொறித் தட்டியது அவளுக்கு.

பொம்மையின் நிறமும், அதை சுற்றியிருந்த ரெப்பிங் பேப்பரின் நிறமும், அவன் அனுப்பியிருந்த ஹார்ட் எமோஜியின் நிறமும் ஒன்றாக இருக்க,

' ஒரு வேள இவனோ ' என யோசிக்கும் போதே அன்று அவன் பெர்ஃப்யூம் கடையில் நடந்தது தொடர்பில் தன்னை திட்டியது நினைவு வந்தது. அந்த நிகழ்வும் , அவள் கைகளில் தவழ்ந்திருந்த பொம்மையும் , அவன் அனுப்பிய குறுஞ்செய்தியும் அவன் தான் என உறுதிப்படுத்த,

' யாரிவன்..ஏன் இப்டிலாம் பண்ணிட்டு இருக்கான்..அதுவும் எனக்கு இந்த பொம்ம தான் பிடிச்சிருக்குன்னு அவனுக்கு எப்டி தெரிஞ்சிச்சு..அந்த பெர்ஃப்யூம் ஷாப் ல கூட ஏதோ பக்கத்துல நின்னு பார்த்தவன் மாறி சொன்னானே..ஒரு வேல என்ன வாட்ச் பண்றானோ ' என அதிர்ச்சியில் முணுமுணுத்துக் கொண்டு வந்தவளுக்கு தானாகவே ஏறியது டென்ஷன்.

தானாகவே விழிகள் சுற்றுப்புறத்தை அலசியது. அவளின் மனமோ

' இல்ல..இல்ல அப்டியொன்னும் இருக்காது.வீணா மனச போட்டு குழப்பிக்க கூடாது. ' என அவளை சமன் செய்ய, அந்நேரம் அவளின் செல்பேசி வைப்ரேட் ஆகியது. அதில் திக்கென்ற மனதுடன் அதை எடுத்துபார்க்க அதில் அழைப்பது ரியா என்றதும் நிம்மதியானாள்.

" சொல்லு டி " என அவள் சொல்லி முடிக்கும் முன்னே,

" ஹே ஆது…எனக்கு ஒரு ஹெல்ப் பண்றியா…என்னோட ஸ்டடி டேபிள் மேல ப்ளூ கலர் ஃபைல் ஒன்னு இருக்கு டி..மறந்து வீட்லேயே வைச்சுட்டு வந்துட்டேன்..ப்ளீஸ் டி ஆபீஸ் வரைக்கும் கொஞ்சம் எடுத்து வந்து குடென்.. மேனேஜர் என்ன கண்ணாலேயே சாம்பலாக்கிருவான் போல டி " என அழுவாத குறையாக புலம்பியிருந்தாள். அவளின் அலறலில் ஹரி பிரணவின் டென்ஷன் மறந்து சிரிக்க ஆரம்பித்து விட்டாள் ஆத்யா.

" நல்லா வேணும் டி உனக்கு.. நேத்து என்ன விட்டுடு நீ மட்டும் தனியா ஐஸ் க்ரீம் சாப்டேல்ல..நல்லா வாங்கு இன்னைக்கு "

" ஹே ஆது சனியனே.. பழிவாங்குர நேரமா இது. படுத்தாதடி என்ன " என கோபமாய் ஆரம்பித்து இயலாமையுடன் முடித்தாள்.

" சரி சரி ரொம்ப கெஞ்சாத..இரு வரேன்.. " என கஷ்ட காலத்தில் இருக்கும் தோழிக்கு உதவ முன்வந்தவளாய் மொழிந்தாள் ஆத்யா. அதில் குஷியான ரியாவோ,

" தேங்க் யூ தேங்க் யூ செல்ல குட்டி " எனக் அவளைக் கொஞ்ச, முகத்தை கோணலாக்கிய மற்றவளோ,

" ச்சீ கன்றாவி..போன வை. " என கடிந்தபடி ரியாவின் ஆபீஸ் செல்ல ஆயத்தமானாள்.

ஃபைலை எடுப்பதற்காக உள்ளே செல்ல போனவளின் கண்களில் மீண்டும் பொம்மை தட்டுபட அதை கையில் எடுத்தவள் அதன் தங்க நிற கூந்தலை வருடியபடி,

" உன்ன எனக்கு ரொம்ப பிடிக்கும்.. ஆனா உன்ன எனக்கு கொடுத்தவன தான் பிடிக்கவே பிடிக்காது..என்ன தைரியம் அவனுக்கு..ஏதோ நா அவனோடு கேர்ள் ஃப்ரெண்ட் மாறி ட்ரீட் பண்றான்..இதெல்லாம் எனக்கு சுத்தமா பிடிக்கல.. பாப்போம் இது எதுவரைக்கும் போகுதுன்னு " என உதட்டை சுழித்து கூறியவள் அதை கட்டிலில் இரு தலையணைக்கு நடுவில் வைத்தாள்.

ரெப்பிங் செய்த பேப்பரை அழகாய் ரோல் செய்தவள் அதில் கட்டியிருந்த ரிப்பனைக் கொண்டு முடிச்சிட்டு பென்ஹோல்டரில் வைத்தாள். பார்சலில் உள்ளிருந்த கார்டில் குறிப்பிட்டிருந்த வாசகத்தை மீண்டும் ஒருமுறை வாசித்தவள்,

" ப்ரின்ஸ்ஸெஸாம் ப்ரின்ஸெஸ்..இவன் எப்டி இப்டி கூப்பிடலாம்..இவன் யாரு என்னோட அம்மா வா " என எரிச்சலாய் முணுமுணுத்தப்படியே அந்த கார்டை அவளின் டைரியில் வைத்தவள் ஃபைலை எடுத்துக் கொண்டு ரியாவின் ஆபீசுக்கு கிளம்பினாள்.

இங்கு ரியாவோ விழி மேல் விழி வைத்து வாசலையே பார்த்திருந்தாள்.

" ஆது இன்னும் என்னடி பண்ணிட்டு இருக்க..மேனேஜர் என்ன கொன்னதுக்கு அப்பறம் தான் வருவ போல.. நேத்து அவள விட்டுடு சாப்பிட்ட ஒரு குச்சி ஐஸ்க்காக படுபாவி இன்னைக்கு பழி வாங்குது " என பதட்டத்தில் நகத்தை கடித்தபடி புலம்பியப்படி இருக்க, திடீர் என அவளின் காலில் ஏதோ ஊருவது போல் இருக்கவும் "வீல்" என அலறியப்படி காலை உதறினாள்.

ஆத்யாவோ வயிற்றை பிடித்துக் கொண்டு சிரித்துக் கொண்டிருந்தாள். ஏற்கனவே கடியாகி இருந்தவள் இப்போது வெறியாகி அலுவலகம் என்றும் பாராது அவளின் முதுகிலே நான்கு மொத்து மொத்தினாள்.

" ஏன் டி உயிர வாங்குற..ஏற்கனவே அந்த வீணாப்போன மேனேஜர் கிட்ட திட்டு வாங்கி குத்துயிரும் கொலையுயிருமா இருக்கேன்..இந்த நேரத்துல தான் உனக்கு கால சுரண்டி விளையாடனுமா " என மூச்சு வாங்க கேட்க,

" இல்லடி..நீ டென்ஷனா இருக்கேல..அதான் கொஞ்சம் கூல் பண்ணலாம்ன்னு அப்டி பண்ணேன்.. ஆனா நீ சர்க்கஸ் காட்டுவேன்னு நினைச்சுக் கூட பாக்கல " என மீண்டும் சிரித்தாள்.

" போதும் பல்லுக்கு வலிக்க போகுது.. கொடு அத..மேனேஜர் மூஞ்சிலையே விட்டெரிஞ்சிட்டு வரேன்.." என வீர வசனம் பேசியபடி ஆத்யாவின் கையில் இருந்த ஃபைலை பறித்தவள் வேக நடைப்போட்டு உள்ள சென்றாள்.

ஆத்யாவுக்கோ சிரிப்பு வந்தது. என்னதான் தோழி வீரமாக சென்றாலும் உள்ளே சென்று பம்மத் தான் போகிறாள் என்று அவளுக்கு தான் தெரியுமே…

சிரித்தபடி வீட்டிற்கு செல்ல திரும்பியவளுக்கோ களைப்பாய் இருந்தது. நேர்முகப்பரீட்சைக்கு சென்று வந்தது, தற்போது ரியாவின் ஆபிசிற்கு வந்தது, மதியம் சாப்பிடாதது எல்லாம் சேர்ந்து அவளை சோர்வடையச் செய்திருக்க,

ஆட்டோ பிடிக்க பிடிக்க, ஒன்றுக் கூட நிறுத்தாது சென்றதில் எரிச்சல் வேறு. சற்று தூரம் சென்று பிடிப்போம் என மெல்ல மெல்ல சாலையோரம் நடக்கலானாள்.

அவள் சோர்ந்தபடி நடப்பது ஆதவனுக்கே பொறுக்கவில்லை போலும். சுட்டெரிப்பதை விட்டு விட்டு இதமான வெளிச்சத்தை பரப்ப ஆரம்பித்தான். தென்றலும் அதற்கு ஒத்து ஊத, யாரோ சுவிட்ச்சை தட்டிவிட்டது போல் திடீரென ஏற்பட்ட மாற்றத்தை எண்ணி வியந்தப்படி நடந்தவளின் கண்களில் அந்த இடம் விழுந்தது.

அவ்வளவு நேரம் இருந்த களைப்பு, எரிச்சல் எல்லாம் பறந்து போக, புது எனர்ஜி குடிக்கொண்டது மனதிலும் உடலிலும்.

முகம் பல்பு போட்டதைப் போல் ஒளிர விரைந்தாள் அவ்விடத்தை நோக்கி. அது ஒரு புத்தக கண்காட்சி.

அதன் முன்பகுதியில் பென்னம் பெரிதாக புத்தகம் ஒன்று விரித்து வைத்த நிலையில் நிலைக்குத்தாக இருப்பதுப் போல் வடிவமைத்து இருக்க, அதன் நடுவே ஆட்கள் உள்ளே செல்வதற்கு ஏதுவாக கதவு போல் நுழைவாயில் அமைக்கப்பட்டிருந்தது. அந்த புத்தகத்தின் இரு பக்கங்களிலும் வாசிப்பு பற்றிய தத்துவங்களும் அதை கூறியவர்களின் பெயரும் எழுதப்பட்டிருக்க, ஒவ்வொன்றையும் நிதானமாய் வாசித்து தன் மனதில் ஏற்றிக்கொண்டாள் ஆத்யா.

மெல்ல அந்த நுழைவாயிலினூடாக உள்ளே சென்றவளுக்கு ஏதோ அந்த புத்தகத்தினுள்ளே சென்றது போல் ஒரு உணர்வு தோன்றியதில் அதை இதழ்களில் உறைந்த புன்னகையுடன் சுகமாய் அனுபவித்தாள்.

கிழமை நாள் என்பதால் பெரிதாக கூட்டம் ஒன்றும் இல்லை.பைய பைய நடந்தவளாக கண்காட்சியில் வைத்திருந்த ஒவ்வொரு புத்தகத்தையும் பார்க்கலானாள். காதல் , மர்மம் , திகில் என பல பல பிரிவைச் சேர்ந்த புத்தகங்கள் கண்ணை கவரும் விதத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருக்க ஒவ்வொன்றையும் கண்கள் மின்ன பார்த்துக்கொண்டே வந்தாள்.

புத்தகங்களின் வாசமும்,சுற்றுப்புறத்தில் ஒலித்துக் கொண்டிருந்த மெல்லிய இசையும் அவளை வேறு உலகில் சஞ்சரிக்க வைத்ததில் நேரம் போனதே தெரியவில்லை அவளுக்கு. விரல்கள் கொண்டு ஒவ்வொரு புத்தகங்களாய் வருடிக்கொண்டு வந்தவள் யார் மீதோ இடித்து நின்றாள். அதில் பதறியவளாய் ,

" ஐயோ..சாரி..நா தெரியாம " என கூறியபடியே திரும்ப, அங்கு ஐம்பது வயது மதிக்கத்தக்க ஒரு பெண்மணி சாந்தமான முகத்துடன் நின்றிருக்க, அவரின் தெய்வீக அழகில் ஆத்யாவே ஒரு கணம் இமைக்காது பார்த்தாள்.

" பரவால்லம்மா தெரியாம தான இடிச்ச " என மென்மையாக கூறியவர், அவளை மேலிருந்து கீழாக அளந்து,

" என்ன இன்னைக்கு ஸ்கூலுக்கு மட்டம் போட்டுட்டு, புக்ஸ் எக்சிபிஷன் வந்துட்டியா " என்ன சிரிப்புடன் கேட்க, ஆத்யாவுக்கோ 'பக்' என்று இருந்தது.

" ஸ்கூலா…அம்மா நான் ஸ்கூல் படிக்கிற பொண்ணு இல்ல. இன்னைக்கு தான் ஒரு கம்பெனிக்கு இன்டர்வியூ போயிட்டு வந்தேன் " என்றாள் உதட்டை சுழித்து.

அதில் சிரித்த அவரோ,

" நிஜமாவா சொல்ற…பாக்க சின்ன பொண்ணு மாதிரி தெரியுற. அதான் ஸ்கூல் படிக்கிறேன்னு நினைச்சுட்டேன் " என்றார் சிரிப்பு மாறாத குரலில். இயல்பாய் பேசிய அவரை பிடித்து விட்டது ஆத்யாவுக்கு. அவர் கூறியதில் இடுப்பில் கைவைத்தவள் பொய்யாக அவரை முறைக்க,

" அச்சோடா..கோபம் வந்திருச்சா மன்னிச்சிரு " என இரு கண்களையும் சுருக்கி ஆத்யாவின் நாடியில் கை வைத்து கொஞ்சியவராய் கூறினார். அவர் மன்னிப்பு கேட்கவும் பதறியவளாய்,

" ஐயோ மன்னிப்பெல்லாம் எதுக்கு நான் சும்மாதான் பண்ணேன். " என தன் நாடியை பிடித்திருந்த அவரின் கைகளை தன் இரு கைகளால் பற்றியவளாய் கூறியவளின் கண்கள் அவரின் கைகளில் தவழ்ந்திருந்த அவளுக்கு பிடித்தமான நாவலாசிரியரின் புத்தகத்தில் நிலைத்தது.

" வாவ்.. உங்களுக்கும் இவரோட நாவல்ஸ் பிடிக்குமா " என ஆர்வத்துடன் தன் கையை சுட்டிக் காட்டி கேட்டவளுக்கு குறையாத ஆர்வத்துடன் அவரும் பதிலளித்தாள்.

" ஆமா ரொம்ப ரொம்ப பிடிக்கும்..இவரோட கதைகள் எல்லாம் எத்தன முறை படிச்சாலும் சலிக்காது." என உற்சாகமாய் கூறியவர், "உனக்கும் பிடிக்குமா " என கேட்க,அவளும் கண்கள் மின்னியவளாய் மேலும் கீழுமாய் தலையசைத்தாள். அவளின் கண்களில் எழுந்த மின்னலைப் பார்த்த சிரித்த அவரோ,

" உன் வயசு பொண்ணுங்க எல்லாம் காதல் நாவல்களா வாசிச்சு ட்ரீம்ல இருக்காங்க..நீ என்னனா இப்டி கொலை, கொள்ளை, ரத்தம்ன்னு த்ரில்லர் நாவல்களா வாசிச்சிட்டு இருக்க. ஏன் காதல் நாவல்னா பிடிக்காதா " எனக் கேட்டார்.

அவர் காதல் என்று கூறியதும் முகம் மாற அதை அவர் கவனிக்காதவாறு மறைத்துக்கொண்டவள் போலி சிரிப்பை முகத்தில் ஏந்தி," பிடிக்காது " என இடம்வலமாய் தலையாட்டினாள். அவள் கூறியதில் உதட்டை சுழித்த அவரோ,

" போ..நீ சுத்த வேஸ்ட்..நா எல்லாம் உன் வயசுல தேடி தேடி வாசிக்கிறதே இந்த காதல் நாவல்கள தான். " என அவர் ரகசியம் போல் சொன்ன தினுசில் வாய் விட்டு சிரித்தாள் ஆத்யா. அவளின் வயிறோ ' கொரகொர ' வென சத்தம் எழுப்பி தன் இருப்பை உணர்த்த, அப்போது தான் பசி வயிற்றை கிள்ளுவதை கவனித்தாள். அதில் அவரைப் பார்த்தவள் விடைபெறும் நோக்கத்தோடு,

" அம்மா எனக்கு நேரமாச்சு..நா கிளம்பனும் உங்கள சந்திச்சத்தில் ரொம்ப சந்தோஷம்.." என முறுவலுடன் கூறியவளின் கைகளைப் பிடித்துக் கொண்டவர்,

" என்ன அதுக்குள்ள கிளம்பனும்னு சொல்ற. " என சோகமாய் கேட்டவர், " சரி உனக்கு ஏதாச்சும் வேல இருக்கும். நீ பாத்து பத்திரமா போயிட்டு வா " என்றார் அவளின் தலைக்கோதி. அவரின் தலைக்கோதலில் நெஞ்சம் கனிய திரும்பி நடக்கப் போனவள், " ஹே பொண்ணு " என அவரின் குரலில் திரும்பிப் பார்த்தாள்.

" அதான் நாம ஃப்ரெண்ட்ஸ் ஆயிட்டோமே.. பேர சொல்லாம போற " என அவர் சிரிப்புடன் கேட்டதில், இவளும் " ஆமா ல " என நெற்றியில் கைவைத்து அசடு வழிந்தவள்,

" நா ஆத்யா..ஆமா உங்க பேரு " என முத்து பற்கள் தெரிய அழகாய் அவள் சிரித்தபடி கேட்க, அவளின் சிரிப்பில் மெய் மறந்தவராய்," ஜோதி லக்ஷ்மி " என்றார்.

அதில் அவள் சரியென தலையாட்டி கண்களால் விடைபெற்று வாசல் பக்கம் நடக்க ஆரம்பித்தாள். அவள் செல்வதையே பார்த்துக் கொண்டிருந்தவருக்கு அவளை விடவே மனதில்லை.. மெழுகு பொம்மை போல் தலையாட்டி தலையாட்டி பேசியவளை பக்கத்திலே வைத்துக்கொள்ள வேண்டும் போல் இருந்தது அவருக்கு. அவள் தலை மறைந்ததும் பெருமூச்சொன்றை விட்டவராய் மீண்டும் புத்தகங்களை ரசிக்க ஆரம்பித்தார்.

தொடரும்….

This writing is the work of கவியாழினி, who is solely responsible for its content. The views in it are the author's own and not those of NEERMAI. Writer responsibility · Report a concern

Encourage the writer

Comments

Join the conversation

Become a reader on NEERMAI, free, and be part of a kind and safe community of writers and readers.

  • Leave kind comments and replies
  • Encourage writers with kind words
  • Follow the writers you love
  • Chat with writers, safely
Join free as a readerSign inFree, and it takes about a minute.

Enjoyed it? Share it with a friend
Festival wishes

Happy Deepavali from NEERMAI

May the festival of lights bring peace, joy and new stories to you and your family.

Your voice belongs here

Have a story of your own?

Join 167 writers sharing stories, poems and articles on NEERMAI. Write in any language, from your phone, in a safe and kind community.

  • Your own writer profile
  • Readers, followers and kind words
  • Every post checked with care
Become a writerFree. It takes about three minutes.

More from கவியாழினி

கவியாழினி11 hours ago

அகத்தவன் அன்பில் அடைக்கலம் நான்..!!

அன்பு 5அழகாக சிரித்துக் கொண்டிருந்த அவனின் புகைப்படத்தை பார்த்ததும்,' இவனா ' என மனம் அதிர்ச்சியில் கூவியது.' இவனுக்கு எப்டி என்னோட நம்பர் கிடைச்சது. ஷாப்ல நடந்தது இவனுக்கு எப்டி தெரியும். அவன் அங்க தான்…

கதைகள்7 min read
கவியாழினி1 day ago

அகத்தவன் அன்பில் அடைக்கலம் நான்..!!

அன்பு 4ஜில்லென்று ஏசி காற்று இருவரின் உடலையும் தழுவ அதனை சுகமாய் அனுபவித்தவாறே கையில் பப்பிள் டீசகிதம் அந்த ஷாப்பிங் மோலை சுற்றி வந்துக் கொண்டிருந்தனர் தோழிகள் இருவரும்.ஹரி பிரணவினால் ஆத்யாவுக்கு ஏற்பட்ட டென்ஷனும், பல்சர்…

கதைகள்6 min read
கவியாழினி2 days ago

அகத்தவன் அன்பில் அடைக்கலம் நான்..!!

அன்பு 3மெல்ல நாவலை எடுத்துக்கொண்டு நகர எத்தனித்தவளை அவனின் " எக்ஸ்கியூஸ் மீ " என்ற குரல் தடுத்து நிறுத்தியது.திருதிருவென கண்ணை உருட்டியபடி அவனை நிமிர்ந்து பார்க்க, அவனின் கூர்விழிகள் முதலில் வியப்பில் விரிந்து பின் சுவாரசியமாய்…

கதைகள்5 min read
கவியாழினி2 days ago

அகத்தவன் அன்பில் அடைக்கலம் நான்..!!

அன்பு 2 அன்று காலை இனிதாய் புலர என்றும் இல்லாமல் மிகுந்த உற்சாகத்துடன் காணப்பட்டாள் ரியா..சன் மியூசிகில் சென்று கொண்டிருந்த நாக்கு முக்கா பாடலுக்கு இணையாக ஆடியபடி ஆபீஸ் கிளம்ப தயாராகிக் கொண்டிருந்த தோழியை ஆத்யாவின் கண்கள்…

கதைகள்7 min read
அன்பு 2 அன்று காலை இனிதாய் புலர என்றும் இல்லாமல் மிகுந்த உற்சாகத்துடன் காணப்பட்டாள் ரியா..சன் மியூசிகில் சென்று கொண்டிருந்த…

More in கதைகள்

See all