கதைகள்

அகத்தவன் அன்பில் அடைக்கலம் நான்..!!

அன்பு 8

ஆத்யா இன்டர்வியூ சென்று வந்து ஒரு வாரம் ஆகிவிட்டது. இன்னும் அது தொடர்பில் எந்த ஒரு பதிலும் வராதிருந்ததில் வாடியவள் மனம் தளராது மீண்டும் வேறு வேலைகளுக்கு விண்ணப்பித்து கொண்டே இருந்தாள்.

ஆனால் அவளுக்கு அந்த கம்பனியில் தான் வேலை கிடைக்க வேண்டும் என்று எழுதியிருந்தது போலும். யூ ட்யூப் பார்த்து தீவிரமாய் ரசகுல்லா செய்துக் கொண்டிருந்தவளை அந்த குறுஞ்செய்தி வந்து தழுவியது.

சென்ற இன்டர்வியூவில் அவள் தேர்வாகி விட்டாள் எனவும் குறித்த திகதியில் தேவையான டாகுமெண்ட்ஸ் உடன் வந்து இணைந்துக் கொள்ளுமாறும் வாழ்த்துடன் வந்த குறுஞ்செய்தியை பார்த்ததும் தலைகால் புரியவில்லை அவளுக்கு. நின்ற இடத்திலே " வீல் " என கத்தியபடி அவள் குதி குதியென குதிக்க, காய்ச்சல் என்று பொய்யுரைத்து விட்டு ஆபீசிற்கு மட்டம் போட்டு சுற்றிக் கொண்டிருந்த ரியாவும் அவள் கத்தலில் ஓடி வந்தாள்.

" என்னாச்சு..என்னாச்சு..திரும்ப பல்லி வந்திருச்சா.. " என அவசரஅவசரமாக வந்தவள் அங்கு தோழி முகத்தில் சிரிப்புடன் ஜிங்கு ஜிங்கு வென குதிப்பதைப் பார்த்து விழித்தாள்.

" ஏய் என்ன டி இது " என அவள் ' பே ' வென முழித்தப்படி கேட்க,
" எனக்கு வேலை கிடைச்சிருச்சு ரியா..இப்போ தான் மெசேஜ் வந்துச்சு.. யாஹூ…" என அவள் கத்த, அதைக் கேட்டு ரியாவும் அவளைக் கட்டிப்பிடித்தபடி குதிக்க ஆரம்பித்தாள்.

" நிஜமாவா… கங்கிராட்ஸ் டி..அது எவ்ளோ பெரிய கம்பெனி தெரியுமா..அதுல ஒர்க் பண்ணனும்னு அவனவன் தவம் இருக்கான்..அதுல நீ ஒர்க் பண்ண போறேன்னு நினைச்சாலே ஹேப்பியா இருக்கு " என துளியும் பொறாமையின்றி அவளை கட்டிப்பிடித்தபடி சொன்னாள்.

ரியாவின் முகத்தில் மின்னிய மெய்யான சந்தோஷத்தை பார்த்து அவளின் கண்கள் தோழியை வாஞ்சையோடு நோக்கியது. எந்தவித வஞ்சகமும் இல்லாது ஒருவருக்கொருவர் அன்பை பரிமாறிக்கொள்ளும் நட்பு கிடப்பதெல்லாம் வரமல்லவா..அப்படி ஒரு நட்பை தந்த கடவுளுக்கு மனதார நன்றிக் கூறிக் கொண்டாள்.

" ஹலோ மேடம்..என்ன என்னையவே பார்த்துட்டு இருக்கீங்க..ட்ரீட் எதுவும் இல்லையா " என சிரிப்புடன் கேட்க,
" ட்ரீட் தானே.. கொடுத்துட்டா போச்சு.. சரி எங்க போலாம் நீயே சொல்லு " என முடிவை தோழியின் கையில் ஒப்படைத்தவளாய் ஆத்யா நிற்க, அதில் நாடியில் கைவைத்து தீவிரமாய் யோசித்த ரியா கண்கள் மின்ன "ட்ரீமி ஸ்கூப்ஸ் " என்றாள். பனிக்கூழ் பிரியையான ஆத்யாவும் உடனே அமோதிக்க இருவரும் ஜோடி போட்டுக் கொண்டு கிளம்பி விட்டனர் ட்ரீமி ஸ்கூப்ஸ் ஐஸ் க்ரீம் ஷாப்பிற்கு.

மாலை நேரம் என்பதால் பெரிதாக கூட்டம் இல்லை. வார இறுதியில் அதுவும் இரவு நேரங்களில் உள்ளே இருப்பவர்கள் எல்லாம் பிதுங்கும் அளவிற்கு கூட்டம் நிரம்பி வழியும். அந்த அளவிற்கு பிரசித்து பெற்ற கடை அது. அங்கு ஐஸ்க்ரீம் டிஸ்ப்ளே ஃப்ரீசரில்,சாக்லேட்,வெண்ணிலா ,ஸ்ட்ராபெர்ரி , பட்டர் ஸ்காட்ச் ,கேரமல், ஓரியோ ,பபுள்கம் என லிஸ்ட் நீண்டுகொண்டே செல்லும் அளவிற்கு பனிக்கூழ் வகைகள் பெரிய பெரிய டப் ( tub )களில் நிரப்பட்டு இருக்க பார்த்து பார்த்து ஒவ்வொன்றாய் ஆர்டர் செய்ய ஆர்பித்தனர்.

அவர்கள் கைகாட்டிய ஐஸ் க்ரீம் வகைகளை எல்லாம் கண்ணாடியிலான ஐஸ் க்ரீம் பவுலினுள் நிரப்பி ட்ரே ஒன்றினுள் அடுக்கி கொடுத்த சர்வருக்கு புன்சிரிப்புடன் நன்றி உரைத்துவிட்டு, பெரிய டிரான்ஸ்பெரன்ட் ஜன்னல் பொருத்திய பகுதியில் இருந்த டேபிளில் வந்து உட்கார்ந்துக் கொண்டனர்.

ஆத்யாவோ கைகள் இரண்டையும் பரபர வென தேய்த்தபடி, " இன்னைக்கு ஒரு புடி " என ஒரு கோப்பையில் கை வைக்க போக அவளின் கையில் பட்டென்று அடித்தாள் ரியா.

" உனக்கு என்ன அவசரம்.கொஞ்சம் பொறு" என அவளை கடிந்தபடி தன் ஃபோனில் ஐஸ் க்ரீம் நிறைந்த டிரேயை வித விதமாய் போட்டோ எடுக்க,அதில் தலையில் அடித்த ஆத்யா,

" மொதல்ல இந்த வியாதிய குணப்படுத்த ஒரு மருந்து கண்டுபிடிக்கணும் டா " என கடுப்பாக முணுமுணுத்தாள்.

" ஓகே டன்..இப்போ வா ஒரு கை பாக்கலாம்" என உற்சாகமாய் கூறியப்படி மேங்கோ ஃப்ளேவர் ஐஸ் க்ரீம் கோப்பையை ரியா எடுத்துக் கொள்ள, ஆத்யா பப்பிள்கம் ஃப்ளேவரை எடுத்துக் கொண்டாள்.

ஆர்வமாய் ஒரு கரண்டி பனிக்கூழை அள்ளி வாயில் வைத்த ஆத்யா, அதன் சுவையில் கண்களை மூடி, " ம்ம்ம்ம் " என ராகமிழுத்தப்படி உதட்டை மீன் போல் குவித்து சுவைக்க அதை இரு கூர்விழிகள் ரசித்துப் பார்த்தது.

கண்களை திறந்தவள் ரியாவைப் பார்த்து,"செமயா இருக்கு ல " என சிரித்தபடி கேட்க,அவளுக்கு பதில் கூற முடியாத வகையில் வாயில் ஐஸ் க்ரீமை அடைத்திருந்தாள் ரியா.

" ஏய் மெதுவா சாப்பிடு டி.. ஐஸ் க்ரீம் எங்கேயும் ஓடிராது. சாப்பாட்ட கண்டா பல நாள் பட்டினி கெடந்தவ மாறியே பிஹேவ் பண்ணுவா " என ஆத்யா கலாய்த்து சிரிக்க,

அதற்கிடையில் ஐஸ் க்ரீமை விழுங்கியிருந்த ரியா, " நீ மட்டும் என்னவாம்..ஒரு போட்டோ எடுக்க முன்னாடியே ஐஸ்கிரீம தொட பாய்ஞ்சுகிட்டு வரல " என அவள் பதிலுக்கு கேலி செய்து சிரித்தாள்.

" ஐயோ பப்ளிக் பிளேஸ்ல ரெண்டு பேரும் கத்தி கத்தி பேசி மானத்த வாங்கிட்டு இருக்கோம். அப்புறம் எல்லாருக்கும் தெரிஞ்சிரும் நாம ரெண்டு பேரும் சோத்து மூட்டைன்னு. " என ஆத்யா குரலைத் தாழ்த்தி கூற,

" க்கும்.. இன்னுமென்ன தெரிய இருக்கு.. அதான் நம்ம ட்ரேயே காட்டிக் கொடுக்குதே " என ரியா சொல்லிவிட்டு ' கிகி ' என சிரிக்க , ஆத்யாவும் அதை ஆமோதித்து சிரித்தாள்.

" ஆது கொஞ்சம் வெயிட் பண்ணு..நா வாஷ்ரூம் போயிட்டு வரேன் " என சொல்லியபடி ரியா எழுந்து செல்ல,
" ஓகே சீக்கிரம் வந்துரு " என கூறி ஐஸ் க்ரீமை பதம் பார்க்கத் தொடங்கினாள் மற்றவள்.

அவள் சென்றதும், சில நிமிடங்கள் கழித்து எதிரே இருந்த இருக்கையில் திடீரென ஒரு உருவம் வந்து அமர, வாயில் வைத்த கரண்டியுடன் விழித்தபடி தன் முன்னே பார்த்தாள். அங்கு அழகாய் சிரித்தபடி ஹரி பிரணவ் அமர்ந்திருக்க ஆத்யாவோ விழிகளை விரித்தாள்.

வாயில் கரண்டியை திணித்தபடி கண்கள் விரிய அவள் சிலைப் போல் அமர்ந்திருந்த தோற்றம் அவனுக்கு சிரிப்பை வரவழைக்க, அதில் அவளைப் பார்த்தபடி மெதுவாய் நகைத்தவன் அவள் முகத்தின் எதிரே கை அசைத்து,

" ஹலோ மேடம்..என்ன ஸ்டேட்சு ஆகிட்டீங்க.." என குரலில் இழையோடும் சிரிப்புடன் கேட்க, அவன் கை அசைத்தலில் கண்களை பட பட வென சிமிட்டியப்படி சுயம் தெளிந்தவள் பதட்டத்துடன் சுற்றும் முற்றும் பார்த்தாள். அவனோ நிதானமாய்,

" யார தேடற..உன் ஃப்ரண்ட்டையா..அவ இப்போ வர மாட்டா..அங்க பாரு " என அவன் சுட்டிக் காட்டிய திசையில் பார்க்க, அங்கு ரியாவோ போட்டோ கார்டனில் வளைத்து வளைத்து செல்ஃபி எடுத்துக் கொண்டிருந்தாள். அதைப் பார்த்து தலையிலடித்த ஆத்யா, ' இவள ' என பற்களை நறநறத்தாள். அவள் முகப்பவனைகளைப் பார்த்து சிரித்தவன்,

" கூல் ப்ரின்செஸ்.. எதுக்கு இவ்ளோ டென்ஷன் " என மிருதுவாய் வினவ, அதில் அவனை முறைத்து," ஏய்.. ப்ரின்செஸ்ன்னு சொன்ன அவ்ளோ தான் " என பல்லைக் கடித்துக் கொண்டு கூறினாள். அதில் புன்னகையை பெரிதாக்கியவன்,

" என்ன பண்ணுவ ப்ரின்செஸ் அடிப்பியா .." என குறும்பு விழிகளுடன் கேட்க,அவளும் கோபத்துடன்,

" ஆமா அடிப்பேன்.." எனப் பல்லைக் கடித்தாள்.அவள் சொன்னதில் இப்போது நன்றாகவே தெத்துப்பல் தெரிய சிரித்தவன்," இன்ட்ரெஸ்டிங்.. " என்றான் கண்கள் சிரிக்க.

" நா என்ன கதையா சொல்லிட்டு இருக்கேன். " என காய்ந்தவள், பின் ஏதோ நினைவு வந்தவளாய், "ஆமா என்னோட நம்பர் உனக்கு எப்படி தெரியும் அண்ட் அந்த பெர்ஃப்யூம் கடைல கூட ஏதோ பக்கத்துல நின்னு பார்த்த மாறியே சொன்னியே..அப்புறம் அந்த பொம்ம…" என ஒவ்வொன்றாய் ஞாபகப்படுத்தி கூறிக்கொண்டே வந்தவள் சட்டென்று அவனை தீர்க்கமாய்ப் பார்த்து,

" சொல்லு..இதெல்லாம் உனக்கு எப்டி " என காட்டத்துடன் கேட்டாள்.
அவள் கோபத்துடன் பேசுவதெல்லாம் அவனுக்கு சுவாரசியத்தை கொடுத்திருக்க வேண்டும்.மேசையில் முழங்கையை ஊன்றி கன்னத்தில் கை வைத்தவனாய் அவள் அசையும் இதழ்களையயே பார்த்திருந்தான். ஆத்யாவோ அவன் பதிலுக்காய் அவன் முகத்தையே பார்த்திருக்க நிதானமாய் ரசித்து முடித்தவன்,

" அது தெரிஞ்சி என்ன பண்ணப்போற ப்ரின்செஸ்.. அத விடு..அன்னைக்கு உன்ன பாத்தத விட இன்னிக்கு கொஞ்சம் இளைச்ச மாதிரி தெரியிரியே..என்ன ரொம்ப தேடினியோ.. " என கண்களில் குறும்பு மின்ன கேட்க, தான் கேட்டதற்கு பதில் சொல்லாது வேறேதோ அவன் பேசியதில் கடுப்பானவள்,

" உன் மனசுல என்ன நினைச்சிட்டு இருக்க.. இப்டி தான் யாருன்னே தெரியாத பொண்ணு கிட்ட நடந்துப்பியா..கொஞ்சம் கூட மேனர்ஸ் இல்ல.. இப்டி பேசி மயக்குற வேலையெல்லாம் வேற எவக்கிட்டாயாச்சும் வச்சுக்கோ..நீ நினைக்கிற மாறி பொண்ணு நா இல்ல" என படபட வென பொறிந்துவிட்டு அந்த இடத்தை விட்டு நகரப் பார்க்க, கால் தடுக்கியதில் தடார் என விழுந்து விட்டாள்.

அவ்வளவு நேரம் அவள் பேசியதில் முகம் இறுக அமர்ந்திருந்தவன் அவள் விழுந்ததும் பதறிப் போய் அவளருகில் வந்தான்.
" ஹேய் ப்ரின்செஸ்..எதுக்கு இவ்ளோ அவசரம்..இப்போ பாரு.. " என கடிந்தபடி, அவள் உணரும் முன்னே அவளை அணைத்து தூக்கி அருகில் இருந்த கதிரையில் அமர வைத்தான். அவன் அணைத்தது கூட உரைக்காத வகையில் அவளின் இடையும் காலும் நன்றாய் நிலத்தில் மோதியிருக்க, வலியில் அழுகையே வந்து விட்டது அவளுக்கு.

அவனோ, " அடி எதுவும் பட்டிரிச்சா ப்ரின்செஸ் " என அவளருகில் முட்டிபோட்டு அமர்ந்தபடி தவிப்பாய் கேட்க, அவள் அதற்கு பதில் கூறாது ஒரு காலை பற்றிக் கொண்டு வலியால் முகம் சுருங்க அமர்ந்திருப்பதை பார்த்து சட்டென்று அவளின் காலை தூக்கி தன் மடியில் வைத்துக் கொண்டான்.

அவன் செய்கையில் பதறியவள்," என்ன பண்ற..விடு " என அவள் காலை உருவ முயல, அவன் பார்த்த பார்வையில் அமைதியாகி விட்டாள். அவனோ அவள் காலில் அணிந்திருந்த ஸ்ட்ராபி சாண்டில்ஸ்ஸை கழட்டியவன் அவள் பாதத்தை ஆராய,அவளுக்கோ அவஸ்தையாய் இருந்தது.

பொது இடத்தில் தன் காலை அவன் பற்றியிருப்பது அவளுக்கு சங்கடமாக இருந்ததில் காலை அவன் கைகளில் இருந்து உருவ முயன்றாள்.அவனோ உடும்பு பிடியாய் அவள் காலை பற்றியிருக்க, அவன் விழிகளோ தவிப்புடன் அடிபட்டு சிவந்திருந்த இடத்தைப் பார்த்துக் கொண்டிருந்தது.

" தேங்க் காட்..நல்ல வேல ரத்தம் வரல " என தனக்குள் முணுமுணுத்தப்படி அடிபட்ட இடத்தை மிருதுவாய் தடவிக் கொடுத்தான். அவனின் கண்களில் தோன்றிய தவிப்பையும், அவன் கைகள் உணர்த்திய பாதுகாப்பையும் உணர்ந்தவளுக்கு இதயத்தினுள் ஏதோ ஒரு அதிர்வு தோன்ற அதை விரும்பாதவளாய் வெடுக்கென்று தன் கால்களை அவனிடம் இருந்து இழுத்துக் கொண்டு வேகமாக அங்கிருந்த நகர எத்தனித்தாள்.

ஏற்கனவே அடிப்பட்டிருந்த இடை அவள் வேகமாய் எழுந்ததில் விண்ணென்று வலிக்க, " ஆஆ " என சற்று கத்தியபடி மீண்டும் அதே கதிரையில் அமர்ந்துக் கொண்டாள். அவள் வலியில் இடையை பற்றியிருப்பதைப் பார்த்தவன் எதையும் யோசியாது அவனும் பதட்டத்துடன் அவளிடையை பற்றப்போக, அதில் வெடுக்கென அவனின் கையை தட்டிவிட்டவள் தீயென முறைத்தாள்.

தொடரும்…

This writing is the work of கவியாழினி, who is solely responsible for its content. The views in it are the author's own and not those of NEERMAI. Writer responsibility · Report a concern

Encourage the writer

Comments

Join the conversation

Become a reader on NEERMAI, free, and be part of a kind and safe community of writers and readers.

  • Leave kind comments and replies
  • Encourage writers with kind words
  • Follow the writers you love
  • Chat with writers, safely
Join free as a readerSign inFree, and it takes about a minute.

Enjoyed it? Share it with a friend
Festival wishes

Happy Deepavali from NEERMAI

May the festival of lights bring peace, joy and new stories to you and your family.

Your voice belongs here

Have a story of your own?

Join 171 writers sharing stories, poems and articles on NEERMAI. Write in any language, from your phone, in a safe and kind community.

  • Your own writer profile
  • Readers, followers and kind words
  • Every post checked with care
Become a writerFree. It takes about three minutes.

More from கவியாழினி

கவியாழினி1 day ago

அகத்தவன் அன்பில் அடைக்கலம் நான்..!!

அன்பு 7பசியால் தலை கிறுகிறுக்க வீட்டில் நுழைந்ததுமே முதல் வேலையாய் தட்டு உடையும் அளவிற்கு சோற்றை போட்டுக் கொண்டு, சோபாவில் சம்மணமிட்டு உட்கார்ந்தபடி சாப்பிட ஆரம்பித்தாள் ஆத்யா.ஒரு வாய் சாப்பிட்டதும் அடைத்திருந்த காதும், மங்கலாய் தெரிந்த…

கதைகள்8 min read
கவியாழினி3 days ago

அகத்தவன் அன்பில் அடைக்கலம் நான்..!!

அன்பு 6தங்க நிற டஸ்ட் ஊறிய ஜெல் பேனையினால் அந்த சிறு கார்டின் நடுவே," A little Rapunzel to my beautiful princess " என அழகாய் எழுதியிருந்தது. அதைப் பார்த்ததும் இது தனக்கு…

கதைகள்7 min read
கவியாழினி3 days ago

அகத்தவன் அன்பில் அடைக்கலம் நான்..!!

அன்பு 5அழகாக சிரித்துக் கொண்டிருந்த அவனின் புகைப்படத்தை பார்த்ததும்,' இவனா ' என மனம் அதிர்ச்சியில் கூவியது.' இவனுக்கு எப்டி என்னோட நம்பர் கிடைச்சது. ஷாப்ல நடந்தது இவனுக்கு எப்டி தெரியும். அவன் அங்க தான்…

கதைகள்7 min read
கவியாழினி4 days ago

அகத்தவன் அன்பில் அடைக்கலம் நான்..!!

அன்பு 4ஜில்லென்று ஏசி காற்று இருவரின் உடலையும் தழுவ அதனை சுகமாய் அனுபவித்தவாறே கையில் பப்பிள் டீசகிதம் அந்த ஷாப்பிங் மோலை சுற்றி வந்துக் கொண்டிருந்தனர் தோழிகள் இருவரும்.ஹரி பிரணவினால் ஆத்யாவுக்கு ஏற்பட்ட டென்ஷனும், பல்சர்…

கதைகள்6 min read

More in கதைகள்

See all