ஆச்சர்யம்தான் !

0
1235

மழை எங்கள்  உலகிற்கு புதிது நெடுநாள்
பழையதும் கூட
இன்று பொழிகின்றது காரணம் புரியவில்லை
என்னிடமும் என்றும் இல்லாத உணர்வு
கண்முன் தோன்றும் ஆயிரம் இயந்திரங்களையும் தாண்டி
ஒரு மூச்சுக்காற்று வெப்பம்
என் மீது படர்ந்து செல்கின்றது.
இதற்கு சாத்தியம் இங்கு ஏது.?

இங்கு அன்பு கிடையாது
மனித உணர்வுகள் புரியாது
உயிர்களின் மதிப்பு தெரியாது
காற்றும் கூட இங்கு தன்னை மட்டுப்படுத்தி கொள்கின்றது
மிஞ்சினால் நாங்கள் விற்றுவிடுவோமாம்.

எங்களிடம் இல்லாதது என்று ஒன்றும் இல்லை.
அனைத்தும் உள்ளது.
வாழ்க்கை எனும் பாதைக்கான வழியை தவற.
இந்த உலகம் அன்பால் இயங்கியதாம் .
அனபு இவ்வுலகை ஆண்டதாம் .
அது எங்களின் வரலாற்று பாடங்களில் உள்ளது.
ஆம் இ பாடங்களில் மட்டுமே.

இன்று வரை உலகம் அதனால் தான் ஏதோ உருள்கின்றது.
பொறுத்தலுக்கும் ஒரு அளவு உள்ளது .
இல்லையேல் இவ்வுலகை பொறுத்தார்
இயந்திரமாக மாற்றிவிடுவோம் என்ற பயம் அதற்கு.

இயந்திரங்கள் மீது ஈர்ப்பு
இவ்வுலக உயிர்களுக்கு.
உயிர்களிடத்தில் உயிர்களுக்கே அதே அளவிற்கு வெறுப்பு
ஏனேன்றால் சமநிலை பிழைத்துவிடுமே!

போதும் எனக்கு
இவ்வுலகை பற்றி பேச விருப்பமில்லை
நேரமில்லை. விடுகின்றேன்.

இன்றைய என் உணர்விற்கு காரணம் ஏனோ ?

ஐயோ !
இப்போது என்ன நடக்கின்றது
சப்தங்கள் செவிப்பறையை கிழிக்கின்றனவே
மனித அலறல் குரல்கள் அவை

அன்பற்ற சடங்களும்
உயிரற்ற இயந்திரங்களும்
ஓடி ஒழிவதை முதல் தடவையாக காண்கிண்றேன்..
ஆனால் இது ஏன்?
எங்கு போகின்றனர்?
என்ன நடக்க போகின்றது?

இச்சடங்களுள் கருவிழிகளை கொண்ட
ஒரு உயிர் மட்டும் என் மீது மோதுகின்றது.
யார் இவள்?
இவ்வுலகத்திற்கு பொருந்தாத தேவதை போல்..
இன்று வரை நான் பார்த்திராத சாயல்…

என் கண்களையே உற்று நோக்குகின்றாள்.
அதே மூச்சு காற்று வெப்பம்.
எங்களுக்கே தெரியாத புரியாத ஒரு உணர்வு.
எல்லோரும் ஓடி ஒழிகையில்
எங்கள் கைகள் மட்டும் கோர்த்துகொண்டு இருக்கின்றது.

அவள் கண்மணி விரிவதை
நான் பார்க்கின்றேன்
அவள் இதய துடிப்பு
என் இதய துடிப்பை சமன் செய்கின்றது

கட்டிடங்களை உடைத்துக்கொண்டு
எழுந்து வரும் இராட்சத அலைகள்
எங்களை நோக்கி வேகமாய்
எங்களை மூடிச்செல்கின்றது..

அவள் விழி பார்த்தபடியே
இவ்வுலகை விட்டு நீங்க போகிறேன் போலும்.
என் கண்கள் மூடப்படுகின்றன.

இறந்து விட்டேனோ ?

இல்லை
அதே மூச்சு காற்று என்னை வருடுகின்றது
அவள் என் அருகிலே இருக்கின்றாள;
கண் திறந்து பார்த்தேன்
இது எந்த உலகம் தெரியவில்லை..

இயற்கை என்பதை முதல் தடவாயாய் பார்க்கின்றேன்
சுற்றி நான் காணும்
இயற்கையின் பெயர் எனக்கு தெரியாது..

சற்றே நிமிர்ந்து பார்க்கின்றேன்
அவள் மடியில் தான் இருக்கின்றேன்

இவ்வுலகில் இப்போது
நாங்கள் மட்டும்தான் என உணர்ந்து முடிக்கையில்..

ஒரு அசரPரி
‘இது உங்கள் உலகம் இ உங்கள் காதலால் இவ்வுலகம் இயங்கும் ‘

யாவும் புரிந்தது ..
ஓரு வரியில் சொன்னால் காதல் அற்ற உலகம் இயங்காது
அவை பேரழிவை சந்திக்கும்
அதுவே எமக்கும் நடந்தது

எங்கள் உலகின் இறுதி காதலால்
இவ்வுலகின் முதல் காதலுக்காய்
அடி எடுத்து நடக்க ஆரம்பிக்கின்றோம்

ம்ம்ம..மறந்துவிட்டேன்
என் பெயர் ஆதாம்..அவள் பெயர் ஏவால்.

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments