இப்படிக்கு அந்த நினைவுகள்!

0
761
IMG_20201205_141342-d1c3e1df

“ஜெயலலிதா வந்திருக்காங்க!  ஒரு எட்டு போய் பாத்துட்டு வரலாம்!” அப்பாவின் அழைப்பு.

எந்த வருடம் என்பதெல்லாம் நினைவில் இல்லை.  ஆனால் அந்த நாள் நன்றாக நினைவில் இருக்கிறது.  இரண்டு பொதுத் தேர்தலுக்கு முன்னதாக, தேர்தல் பிரச்சாரத்திற்காக அவர் திருச்சி வந்திருந்தார்.

அது ஓர் இயல்பான மாலைப்பொழுது!  “ஜெயலலிதா என்றால் ஏன் இவ்வளவு ஆர்ப்பாட்டம்?  அவரும் நம்மைப் போன்ற ஒரு சராசரி மனிதர்தானே?  ஜெயலலிதாவைப் பார்க்க இவ்வளவு கூட்டம் தேவையா?  அவருக்கென்ன கொம்பா முளைத்திருக்கிறது?”  இவையெல்லாம் அன்று என் மனதில் தோன்றிய கேள்விகள்.

அவரைப் பார்க்கும் அந்த வாய்ப்பைக் கைவிட்டு,  விளையாடச் சென்றுவிட்டேன்.  எனக்கு அன்று தெரியவில்லை… அதுதான் முதலும் கடைசியுமான வாய்ப்பென்று!

இன்று ஆச்சரியம் என்னவென்றால், தனிப்பட்ட வாழ்க்கையில் ஏதாவது இடர்பாடுகள் வரும்போது,  அவரின் வாழ்க்கை கண்முன் வந்து நின்று, உதாரணங்களில்  ஒன்றாகிவிடுகிறது.

ஒரு நாணயத்திற்கென்று இரண்டு பக்கங்கள் இருப்பதைப் போன்று அவர் வாழ்க்கையிலும் நிறை குறைகள் இருக்கலாம்… இருக்கின்றன!  அவற்றிற்கெல்லாம் அப்பாற்பட்டு  அவர் சந்தித்த அவமானங்கள்,  வலிகள்,  மனக்காயங்கள் அவரை ஒரு வலிமையான படைப்பாக மாற்றிவிட்டன.

நிசப்தங்களும் ஆழ்ந்த அமைதியும் நிறைந்த ஒரு தனிமை!   தெளிவான துணிச்சல் நிறைந்த அந்தப் பார்வை!  அறிவான பேச்சு… அளவான சிரிப்பு! தனக்கென்று தனி அடையாளம்!

அப்படியான ஒரு சகாப்தம் தன் வாழ்நாள் முழுவதும் ஒன்றிற்காக ஏங்கிக் கொண்டிருந்தது என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா?   “உண்மை அன்பிற்காக!”

அவர் வாழ்க்கைப் புத்தகத்தைப் புரட்டியவர்களுக்கு அது நன்றாகப் புரியும்!   பலர் அவரைக் கொண்டாடலாம்!  ஆனால் நான் அவரைக் கொண்டாடுவதற்கான காரணங்கள் வேறு!

பல பக்கங்கள் புரட்டும் போது எனக்கும் அவருக்குமான பொதுவான சாயல்கள் அவருடைய வாழ்க்கையில் இருந்திருக்கின்றன…….!

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments