என்காசு இங்கே செல்லாதாப்பா

0
957

கண்மணிபோன்ற முகத்திலே
கறுப்பாய் ஒரு பொட்டுவைத்து

பிஞ்சுவிரல் இரண்டுதனை
பிடித்து நடை பழக்கி

பாடசாலை காலமதில்
பக்குவமாய் சேர்த்தெடுத்து

பத்திரகாளி தேரோட்டம்காண
தோளிலே தூக்கி வைத்து

சீராட்டி எனைவளர்து
சான்றோர் மத்தியில் தலைதூக்க வைத்து

ஒத்தை பனையென்னை உயரவைத்து
பாரிஸ் நாடுதனில்
பார்த்துமணம் முடிக்கவைத்தாய்

நான் வளர நீ மெலிந்து போனாயே
என் செய்வேன் நான்

வைத்திய சாலைதனில்
வழிவழியாய் நடந்து செல்வாய்

ஆவலாய் நான் தொலைபேசி அழைப்பெடுக்க
நான் நலமென என்னலமறிவாய்

கோயில் கும்பாபிசேகத்துக்கு நான் வருகையிலே
இறங்குமிடம் காத்து நிற்பாய்

கூடை கூடையாய் நான்கொணர்ந்த இனிப்பை
ஊர்ஊராய் கொடுத்து நிற்பாய்

பாதியிலே பயணமாக
பார்தபார்வை மாறாமல் கண்ணீர் கசிந்துடுவாய்

என்காசு இங்கே செல்லாதாப்பா

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments