அழகு

என்னை காக்க வைக்காதே!

யாரின் வருகைக்காக
என்னைக் காக்க வைக்கிறாய்?

அடிக்கடி ஜன்னலை திறந்து
தென்றலைத் தேடுகிறாய்
தேடிக் கொண்டே கடைவிழியில்
கண்ணீர் ஒதுக்குகிறாய்

ஆனபோதும்
உனக்காக காத்துக்கிடக்கும் என்னை
உன் தேடலில் தொலைத்து விடுகிறாய்

ஒன்று என்னை எடுத்துக் குடித்து
முடித்து விடு
இல்லை கீழே தட்டிவிட்டு
உடைத்து விடு
இப்படி காக்க வைக்காதே!

இதழ்வரை எடுத்துச் சென்றுவிட்டு
ஏன் கீழிறக்கி வைக்கிறாய்?
யார் யாரெல்லாம் உன்னைப்
புன்படுத்தியதற்காய்
என்னை ஏன் தண்டிக்கிறாய்?

உன் தேடலில் என்னை
நேரம் கடத்தும்
வேடிக்கைப் பொருளாக அல்லவா
காண்பிக்கிறாய்

யாரின் வருகையை எதிர்பாத்திருந்தாயோ
அவனை ஏன் எனக்கு
ஒரு பொழுதும் காண்பிக்க வில்லை நீ?

உன் விழிகளும் அவனை கண்டதாய்
சான்று பகிரவுமில்லையே!

ஏன் நீ வருகைதராதவனுக்காய்
எந்நாளும் என்னை ஏமாற்றுகிறாய்
உன்னால் தினமும் சூட்டிழந்து
குப்பைத் தொட்டிக்கல்லவா வீசப்படுகிறேன்

இன்றாவது என்னை சுவைத்துப்பார்!
உன் ரசனைக்கு ஏற்றவனாக இருப்பேன்!

தேநீர் கோப்பையாக நான்!!!

This writing is the work of ஓடைக் கவிஞன், who is solely responsible for its content. The views in it are the author's own and not those of NEERMAI. Writer responsibility · Report a concern

Encourage the writer

Enjoyed it? Share it with a friend
Writing prompt

This week: write about a letter you never sent

A poem, a story or a few honest lines. Every entry is read by our team.

Start writing

Comments

Your voice belongs here

Have a story of your own?

Join 162 writers sharing stories, poems and articles on NEERMAI. Write in any language, from your phone, in a safe and kind community.

  • Your own writer profile
  • Readers, followers and kind words
  • Every post checked with care
Become a writerFree. It takes about three minutes.

More from ஓடைக் கவிஞன்

ஓடைக் கவிஞன்1 Sep 2021

பிணைப்புக்கள் அவசியம்…!

உயிர்வாழும் உயிரினங்களுக்கு இவ் உலகில் உறவென்று சொல்லி உறவாட உறவுண்டு தாயென்றும் தந்தையென்றும் தாரமென்றும் தமக்கையென்றும் மனித உறவுகளில் பலபெயர்களுண்டு உறவுகளைப் பேணுதலானது பத்தோடு பதினொன்றென்று இலேசாக எண்ணிவிடலாகாது அது இறுக்கமாக பிணைக்கப்படவேண்டிய ஒன்று மென்…

உறவு1 min read
ஓடைக் கவிஞன்5 Apr 2021

என் வீட்டுத் தோட்டத்தில்…!

நான் அதிகளவு நேசிப்பது விதவைப் பூக்களைத்தான்! அதனாலென்னவோ மொட்டுக்கள் என் முற்றத்தில் இன்னும் பூப்பெய்தவில்லை... கன்னிப் பூக்கள் கலர் கலராக தன்னை அலங்கரித்த போதிலும் அவ்வப்போது தேனீக்களால் கற்பழிக்கப்படுவதை நானறிவேன்! பட்டாம் பூச்சியென் வாசல் வந்தாலும்…

அழகு1 min read
ஓடைக் கவிஞன்16 Mar 2021

நீ என் இயல்புகளுக்கு புறமானவள்…

நீ என் இயல்புகளுக்கு புறமானவள்! எனது விழிகள் அழுது கண்ணீர் வடிப்பதில் உனக்கு அப்படியொரு ஆனந்தம் எனக்கு எக்கணத்திலும் எவ்வகையிலும் எந்தவொரு நலவும் நேர்ந்திடக் கூடாதென தினமும் இறைவனிடம் பிரார்த்திக்கிறாய்... உனது முன்னிலையில் நான் சற்று…

நேசம்1 min read
ஓடைக் கவிஞன்13 Mar 2021

மண்புழு மனங்கொண்டோர் யாரிங்கே?

        மண்புழு! ஒவ்வொருவரின் மனதிற்குள்ளும் ஒரு ஓநாய் இருக்கிறான் மண்புழு மனங் கொண்டோர் யார் இங்கே? உடலைக் கொழுவில் மாய்த்து உணவூட்ட உயிர் அறுக்கும் மனிதா உன்னால் இயலுமா? விவசாயத் தோழனாய்…

வாழ்வியல்1 min read

More in அழகு

See all
0
Would love your thoughts, please comment.x
()
x