நாளைய கனவு

0
1567
20200412_100035-5df791ad

 

 

 

 

உன் மனதின் ஆழத்தில் பதிந்துவிட்ட
கனவுகளை யாரும் கலைத்துவிட முடியாது தகர்த்து விடவும்
முடியாது
நீ விரும்பினால்தவிர!!!!

உன் உறுதியான கனவுகளுக்கு
உயிரிருக்கும் அது நனவாகும்வரை!!!!

என்றோ ஒரு நாள்
நீ கண்ட கனவு
நீ எதிர்பாராமலேயே நிஜமாகும் போது உன்
ஆத்மா ஒரு கணம் பூரித்து விடுகிறது.

அப்போ எதற்காக ஏமாற்றம்,இழப்பு, வலி, கவலை பலமற்ற அத்திவாரத்தைப்போல்
உறுதியற்று கனவுகள் மட்டும் தான் தகர்த்து எரியப்படுகிறது.

ஆழ்மனதிலிருந்து நினைப்பவை நிட்சயம் நிலைத்து நிற்கும் ஒரு நாள்!!!!

கால ஓட்டத்தில்கூட
அவை கலைந்து,
சிதைந்து விடுவது
இல்லை.

கனவுகளை கெட்டியாகப் பிடித்துக்கொள்ளுங்கள்
உள்ளிருந்து ஒரு ஆத்மா ஒரு ஓரமாக எப்பொழுதும் அதைப் பற்றியே சிந்தித்துக் கொண்டு இருக்கும்.

விடா முயற்சியில் வெற்றிநடை போடுங்கள்
கனவின் பிரதிவிம்பம் அதோதொலைவில்
இல்லை!!!!

முயற்சித்தால் வெற்றி கூட அருகில் தான்!!!!

நாளைய கனவு
இன்றே நனவு.

 

 

 

 

 

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments