இயற்கை

நிசப்தம் குடிகொண்ட இரா

நடுநிசியில் ஏதோ

ஓர் தனிமை

ஊரே அடங்கி

ஓய்ந்து விட்ட நேரம்

தூரத்தில் கடல்

இரையும் ஓசை

கேட்டது…

வெளியிலே காற்றின்

தீண்டலினால்

தென்னங்கீற்றுகள்

ஒன்றோடு ஒன்று

உராய்ந்து கொள்ளும்

சலசலப்பு சத்தம்

காதில் ஒலித்தது…

தென்னை மரத்தில்

இருந்த பூக்கள்

விடுதலை பெற்றுக்கொ‌ண்டு‌

கீழ் நோக்கி வருகையில்

முற்றத்து கூரையில் பட்டு

ஒலி எழுப்பியது…

தெருநாய்கள் உறுமிக் கொண்டும்

ஒன்றை ஒன்று துரத்தி

பிடித்துக்கொண்டும்

சண்டையிடும் சத்தமும்

நாய்களை விரட்டும்

ஆண் குரலும்

ஒய்யாரமாய் கேட்டது…

அண்மையில் எங்கோ

படலையை சாத்திச்

செல்லும் கிறீச் ஒலியும்

இராப் புள்ளினங்களின்

ஓசையும் தெளிவாகவே

கேட்டது…

ஒவ்வொன்றும் துல்லியமாய்

கேட்கும் அளவுக்கு

அவளது சிந்தையில்

ஓடிக் கொண்டிருப்பது

தான் என்ன?

ஊரே தூக்கத்தில்

ஆழ்ந்திருக்க அவள்

மட்டும் உறங்காமல்

யாரை பற்றி

எதனை பற்றி

சிந்தித்துக் கொண்டிருக்கின்றாள்…?!

This writing is the work of Haseetha Abusali, who is solely responsible for its content. The views in it are the author's own and not those of NEERMAI. Writer responsibility · Report a concern

Encourage the writer

Enjoyed it? Share it with a friend
Writing prompt

This week: write about a letter you never sent

A poem, a story or a few honest lines. Every entry is read by our team.

Start writing

Comments

Your voice belongs here

Have a story of your own?

Join 162 writers sharing stories, poems and articles on NEERMAI. Write in any language, from your phone, in a safe and kind community.

  • Your own writer profile
  • Readers, followers and kind words
  • Every post checked with care
Become a writerFree. It takes about three minutes.

More from Haseetha Abusali

Haseetha Abusali20 hours ago

ஆத்மார்த்தம் தொலைத்த புன்னகை

சில நேரம் நாம் புன்னகை ஆடையை  எடுத்து தன் மேல் போட்டு கொண்டு நடமாடுகிறோம்.... ஆடை தன் உடலை மறைப்பது போல அவரவர் கஷ்டத்தையும் மறைத்துக் கொண்டு இயந்திரத் தனமான போலிப் புன்னகையை உதிர்த்து விட்டுச்…

Poems1 min read
Haseetha Abusali1 day ago

கருப்பு அங்கி

கருப்பு அங்கி... இது வெறும் துணியல்ல நான் பட்ட கஷ்டத்தின் சாட்சி இந்த ஆரம்... இது வெறும் அலங்காரமல்ல... என் இடர்களின் முடிவின் சாட்சி... ​ எத்தனை தூரம் எத்தனை அலைச்சல்... சோர்வான பேருந்து பயணங்கள்…

Poems1 min read
Haseetha Abusali1 day ago

ஆலமரப் பறவை

ஆலமரம் சாய்ந்தால் அதில் உள்ள பறவைக்கும் ஒன்றும் இல்லை தானே.... அது போலவே அப்பா எனும் ஆலமரம் சாய்ந்தது அனைத்தும் சரிந்தது.... இருக்கும் வரை ஒன்றும் இல்லாமல் இருந்ததே இல்லை.... இப்போது இல்லை.... இல்லாததால் ஒன்றும்…

Poems1 min read
Haseetha Abusali16 Jun 2026

மெளனத்தின் சிகரம்

​மழை மேகத்தைச் சுமந்தும்மண்டியிடா வானம் போல,விழி வழிக் கண்ணீரைபுன்னகையால் துடைத்துநிமிர்ந்து நிற்கிறாள் இவள்! ​வலிகள் இவளிடம் தஞ்சம் புகுந்தும்பாறையென உறுதி கொள்கிறாள்...சிதறி ஓடும் மேகங்களைப் போலவாழ்க்கை சிதைக்கப் பார்த்தாலும்,சிகரமாய் தன் கௌரவம் காக்கிறாள்! ​அவளது அமைதியைஅலட்சியம்…

இயற்கை1 min read

More in இயற்கை

See all
0
Would love your thoughts, please comment.x
()
x