மனிதராக பார் அவர்களை…

0
503
elders-c3b320ea

எண்ணில்லா வருடங்கள் எண்ணிக் கழிந்து
தவமாய் இருந்து பெற்ற செல்வங்களை
பார்த்து பவ்வியமாய் பாலூட்டி சீராட்டி
நல்லறம் காட்டி நல்வழி அனுப்பி
மேலும் மேலும் பாரினில் சிறக்க
பல வழிவகை அறிந்து வளர்ப்பார்
வருந்தி வாட்டும் வறுமையும் துன்பமும்
தாமே ஏற்று தம்முள் புதைத்து
தம் குழந்தைகளை காக்கும் தாராளர்
தன்னலம் துறந்து உன்னலம் சிறந்து
உன் சந்ததி நலம் பெருக்கினர்
பிறவியில் பாதியை உனக்கே அளித்து
உயர்த்திய உத்தமரை உதாசீனம் செய்யாதே
உள்ளக் கண்ணாலே உணர்வுடன் நோக்கிடு
கடவுளென எண்ணிட கல்மனம் தடுக்கிறதா?
பாவம் மனிதராகப் பார் அவர்களை…

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments