மூளை சக்தியை அதிகரிப்பது, நினைவகத்தை அதிகரிப்பது மற்றும் 10மடங்கு புத்திசாலித்தனமாக மாறுவது எப்படி(How to Increase Brain Power, Boost Memory and Become 10X Smarter)

1
1721

நீங்கள் எப்போதாவது மளிகைப் பொருட்களின் பட்டியலை நினைவில் வைத்துக்கொண்டு பொருட்கள் வாங்கியிருக்கின்றீர்களா? அவ்வாறெனில் சூப்பர் மார்க்கெட்டை விட்டு வெளியேறிய பிறகு ஒன்று அல்லது இரண்டு பொருட்களை மறந்து விட்டோமே என நீங்கள் நினைத்ததுண்டா? அல்லது நீங்கள் வேலைக்குச் செல்லும்போது ஒரு விடயத்தை நினைத்து அதனை உடனே நீங்கள் அலுவலகத்தை அடைந்தவுடன் எழுத வேண்டும் என நினைத்து பின்னர் எழுதாமலே மறந்து போன அனுபவங்கள் உங்களுக்கு உள்ளதா?

நமது நினைவாற்றல் என்பதற்கு வயது என்பது ஒரு விடயமல்ல. நாம் எதையாவது அதி விரைவாக நினைவுபடுத்த முயற்சித்தாலோ அல்லது நீண்ட நேரமாக ஒரு குறித்த விடயத்தை நினைவில் வைத்திருக்க முயற்சித்தாலோ  நமது நினைவகம் சில நேரம் அப்படியே ஒன்றுமில்லாமல் வெறுமையானதைப்போல உணர்வோம்.

சில நேரங்களில் நாம் அதிகமான தகவல்களை உள்வாங்குவதற்கு முற்படுவோம். அத்தகைய சந்தர்ப்பத்தில் மெமரி ஓவர்லோட் எனும் நிலைக்கு நாம் முற்படுகிறோம். மேலும் இது நம் நினைவகத்தை வெறுமையாக்கி கூடுதல் தகவல்களை எம்மால் புரிந்து கொள்ள முடியாத நிலைக்கு மாற்றி விடுகிறது. இதனால்தான் ஆசிரியர்கள் கடைசி நிமிடத்தில் பரீட்சைகளுக்கு தயார்படுத்தவோ பாடம் செய்யவோ வேண்டாம் என அறிவுறுத்துவார்கள்!

இப்போது மூளை சக்தியை எவ்வாறு அதிகரிப்பது மற்றும் நினைவாற்றலை எவ்வாறு மேம்படுத்துவது மற்றும் புத்திசாலித்தனமாக இருப்பது எப்படி என்ற ரகசியத்தை பார்ப்போம்!

மனித மூளை பற்றிய உண்மை ( The Harsh Truth About the Human Brain )

நினைவாற்றலை அதிகரிக்க உங்கள் மூளைக்கு எவ்வாறு பயிற்சி அளிப்பது என்பதற்கான வழிகளை இப்போது பார்ப்போம்.

உண்மை என்னவென்றால் ஒரு தொன் அளவு தகவல்களை மனப்பாடம் செய்யவோ, சேமிக்கவோ அல்லது நினைவுபடுத்தவோ நம் மனித மூளையானது ஒருபோதும் உருவாக்கப்படவில்லை.

ஆரம்ப கற்காலத்தில் நம்மைச் சுற்றியுள்ள சூழலோடு இயைபடைந்து வாழ்வதற்கும் நம்மைச் சுற்றியுள்ள ஆபத்தை முன்கூட்டியே உணர்ந்து அதற்கேற்ப செயற்படுவதற்குமே மனித மூளையானது வடிவமைக்கப்பட்டது. அதாவது மனிதன் உயிர் வாழ அவசியமான உணவுக்காக வேட்டையாடவும், தீங்கு விளைவிக்கும் விலங்கினங்களிலிருந்து விலகி பாதுகாப்பான இடங்களில் வாழ்வதற்குமே மூளையானது ஆரம்ப காலத்தில் தூண்டப்பட்டது.

காலப்போக்கில் பல விஞ்ஞான கண்டுபிடிப்புகளுக்கேற்பவும் முன்னேற்றங்களிற்கேற்பவும் நமது மூளையானது நம்மைச் சுற்றியுள்ளவற்றைப் பழக்கப்படுத்திக்கொண்டது. இப்போது நாம் அடையும் தகவல்களின் அளவானது எண்ணற்றதாக இந்த யுகத்தில் மாறியுள்ளது. அதற்கேற்பவே துரிதத்தில் நம் மூளையும் வளர்ச்சியடைந்துள்ளது.

இப்போதைய தகவல் யுகத்தில் புதிய தகவலைப் பெறுவதற்கான செலவு என்பது மிகக் குறைவாக உள்ளது. எவ்வாறெனில் விரும்பிய தகவல்களை விரல் நுனியிலேயே பெறக் கூடியளவு இன்று தகவல் யுகமாக உலகம் மாறியுள்ளது.

இப்பொழுது நமது விரல் நுனியிலேயே அனைத்து தகவல்களையும் பெற்றுக்கொள்ளக் கூடிய வசதி எங்களிடம் இருப்பதால் பெறக் கூடிய தகவல்களை பிரயோசனமாக பயன்படுத்த வேண்டிய தேவை அதிகரித்து வருகின்றது. தொழில்நுட்ப முன்னேற்றமானது மிகவும் சிக்கலான பணிகளையும் நம்மால் செய்யக்கூடியளவுக்கு அதுவும் விரைவாகவே நமது நினைவகத்திலிருந்து தகவல்களை மீட்டெடுத்து சூழ்நிலைக்கேற்ப துலங்கக்கூடிய வகையில் நம்மை மாற்றியுள்ளது. உதாரணத்திற்கு புதிய கட்டுரைகள், ஆய்வுக்கட்டுரைகள் மற்றும் எழுத்தாக்கங்களில் ஈடுபடவும் ஒப்பிடும்போது ஒரு சிக்கலான கருவியொன்றையோ அல்லது இயந்திரப் பொறிமுறையொன்றையோ இயக்குவதற்கும் வியாபார ஒப்பந்தங்களில் ஆய்ந்தறிந்து ஒப்பமிடுவதற்கும் ஏற்ற வகையில் நமது நினைவகமானது வளர்ச்சி கண்டுள்ளது.

இந்த நாட்களில் நம் மூளையானது ஏனைய நம் பிற உடல் உறுப்புக்களைப் போன்று இருப்பதை விட மிகவும் இயந்திரத்தனமாகமாறிக்கொண்டு வருகின்றது. அதாவது இப்போது ஏராளமான தகவல்களைச் செயலாக்குவதற்கும், முடிவுகளை எடுப்பதற்கும், எண்ணற்ற தகவல்களுக்கு இடையில் தொடர்புகளை ஏற்படுத்தி சரியான முடிவுகளை எடுப்பதற்கும் ஏற்ற வகையிலேயே மாறியுள்ளது.

மூளையின் புதிய சவால் (The Brain’s New Challenge)

புதிய மாற்றமானது நமது மூளைக்கு புதிய எல்லைகளை விதிக்கின்றன. நம்மிடம் குறைந்த அளவிலான மூளை திறன் இருந்தாலும் இன்றைய காலகட்டத்தில் நாம் பெறக்குடிய தகவலின் அளவு மிகவும் வளர்ந்து கொண்டு செல்கின்றது.இத்தகைய நமது மூளையின் போக்கானது அதிக தகவல்களை உள்வாங்க வைத்தாலும் அதனை நிரந்தரமாக நமது மூளைக்குள் அனைத்து தகவல்களையும் நிரந்தரமாகத்தங்க வைக்கின்றது என்று கூற முடியாது. அதில் எந்தத் தகவல் நமக்கு பிரயோசனமானது எது பிரயோசனமற்றது என்றும் எம்மால் கூற முடியாது.

தினமும் நாம் எண்ணற்ற பல செயல்களில் ஈடுபடுகின்றோம். சில வேளை ஒரே நேரத்தில் பல பணிகளில் ஈடுபடக்கூடியதாகவும் அமைகின்றது. அப்போது நமது மூளையின் ஆற்றலானது பல விடயங்களில் ஒரே நேரத்தில் விநியோகிக்கப்படுகின்றது.

ஒரு புதிய விடயத்தை மனப்பாடம் செய்வது, ஆய்ந்தறிந்து ஒரு விடயத்தில் முடிவெடுப்பது அல்லது புதிய விடயங்களை கற்றுக்கொள்வது தொடர்பில் எந்த விடயம் உங்களிடத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது? அதில் எந்த திறன்களை நீங்கள் மேம்படுத்த முற்படுவீர்கள்?

உங்கள் மூளையை எவ்வாறு மேம்படுத்துவது  (How to Upgrade Your Brain?)

நீங்கள் எவ்வாறு உங்கள் மூளை சக்தியை அதிகரித்து அதன் மூலம் நினைவின் உச்ச பயனை அடைய முடியும் என்பதையும் பார்ப்போம். இத்தகைய மூளை சக்தி அதிகரிப்பதானது தினமும் நமது மூளைக்கு வரும் அனைத்து தகவல்களையும் எந்தவித சிரமமின்றி வரிசைப்படுத்த உதவும்.

இவ்வாறு மூளையின் சக்தயை அதிகரித்து மூளையின் ஆற்றலை விருத்தி செய்யும் செயற்பாடானது டிஜிட்டல் மூளை (Digital Brain) என்று அழைக்கப்படுகிறது.

மனித மூளைக்கு மாறாக கணினிகள் தகவல்களைச் சேமிப்பதில் சிறந்தவை என்பது அனைவரும் அறிந்த ஒன்று (க்ளவ்ட் கம்ப்யூட்டிங் சிறந்த உதாரணம்). இது எவ்வாறெனில் கணினியால் சேகரிக்கும் தகவல்கள் துல்லியமானதாகவும் மற்றும் மிகவும் விரிவானதாகவும் காணப்படுகின்றது.

கணினியைப் பொறுத்த வரையில் அதன் நினைவகம் மூன்று முக்கிய கூறுகளை உள்ளடக்கியது:

பதிவு செய்தல் – தகவல்களைச் சேமித்தல்
ஒழுங்கமைத்தல் – அதை ஒரு தர்க்கரீதியான முறையில் சேமித்து ஒழுங்குபடுத்தல்
நினைவுகூறுதல் – தேவைப்படும்போது அதை மீண்டும் பெற்றுக் கொள்ள முடிதல்

ஒரு கணினியைப் போலவே நமது மூளையை டிஜிட்டல் மூளையாக பயன்படுத்துவதானது நமது நினைவகத்தில் தகவல்கள் எவ்வாறு உள்நோக்கி , வெளிநோக்கி செல்கின்றது என்பதை சரியாக எம்மால் நிர்வகிக்க உதவும்.

உதாரணத்திற்கு ஒரு வலைத்தளத்தில் புதிய கணக்கை உருவாக்கும் போது நமது கணக்கின் பாதுகாப்புத் தன்மையைப் பேணும்பொருட்டு நாம் வழக்கமாகப் பயன்படுத்தாத சிறப்பு, குறியீட்டு எழுத்துக்களைக் கொண்ட சிக்கலான கடவுச்சொற்களையே வலைத்தளங்கள் கோருகின்றன. இவ்வாறு நாம் கடவுச்சொல்லை உருவாக்குவதன் விளைவாக இப்போது இந்த புதிய கடவுச்சொல்லை (பதிவு செய்தல்) மனப்பாடம் செய்ய வேண்டும். அதை நமது மூளையில் சேமித்து வைத்திருக்கும் பிற கடவுச்சொற்களுடன் தொடர்புபடுத்த வேண்டும் (ஒழுங்கமைத்தல்). அடுத்த முறை உள்நுழையும்போது (நினைவுகூறுதல்) அந்த கடவுச்சொல்லை நினைவில் வைத்திருந்து உள்ளிட வேண்டும்.

இதன் மூலம் உங்களால் புரிந்து கொள்ள முடியும் எவ்வாறு நமது மூளையானது பல பகுதிகளாக செயற்படுகின்றது என்று. ஆனால் நமது மூளையால் இந்த கடவுச்சொல்லை இலகுவாக மறந்து விடக்கூடிய வாய்ப்பும் உள்ளது. காரணம் புதிய கடவுச்சொல் தனித்துவமானது என்பதால் நமது நினைவகமானது அதை நமது வழக்கமான கடவுச்சொற்களுடன் தொடர்புபடுத்தி நினைவில் வைத்திருக்க வேண்டும். நாம் தினமும் இந்த கடவுச்சொல்லைப் பயன்படுத்தாவிட்டால் சில நாட்களுக்குப் பிறகு நமது மூளையானது அதை மறந்துவிடுகின்றது. எப்போதேனும் நாம் அத்தகைய கடவுச்சொல்லை நினைவுபடுத்த முயற்சிப்பீர்கள் என்றால் நம்மால் அது கடினமானதாக இருக்கும்.மீண்டும் மீண்டும் தவறான கடவுச்சொல்லையே நாம் பதிவிடக்கூடிய வாய்ப்பு அதிகம் உள்ளது.

இது மிகவும் பொதுவான விஷயங்களில் ஒன்றாகும். நமது மூளை நினைவுபடுத்தாமைக்கு காரணம் தகவல் சிக்கலானது என்பதாலா? இல்லை. கடவுச்சொல் என்பது எழுத்துக்கள், எண்கள் மற்றும் குறியீடுகள் என அனைத்தையும் கொண்ட ஒரு சிக்கலான தொகுப்பாக காணப்படுவதாலாகும். ஆனால் நமது மூளையானது இவை அனைத்தையும் நினைவிலேயே வைத்திருப்பதற்காக உருவாக்கப்படவில்லை. ஆனால் டிஜிட்டல் மூளையானது இவ்வாறான கடினமான வேலைகளை செய்யக்கூடியவாறு பகிர்ந்தளிக்க முடியும்.

கற்றல் மற்றும் படைப்பாற்றலுக்காக நினைவகத்தை தயார்படுத்துதல் / உருவாக்குதல் (Making Room for Learning and Creativity)

இந்த டிஜிட்டல் யுகத்தில் கற்றலுக்காக நினைவகத்தை எவ்வாறு தயார்படுத்துவது என்பது தொடர்பில் அதிகளவிலானோர் குழப்பமடைகின்றனர்.

அதாவது கற்றலுக்கு நமது நினைவகத்திற்கு போதுமான இடைவெளி தேவைப்படுவதோடு வெவ்வேறு கற்றல் மாதிரிகளைப் பயன்படுத்துவதற்கும் பின்னர் அந்த திறன்களைப் பயன்படுத்துவதன் மூலம் கற்றலுக்காக நமது நினைவகத்தை தயார்படுத்துவதே பொதுவான நுட்பமாகும். அதேசமயம் சேமிப்பது என்பது ஒரு ‘நூலகத்தில்’ அதிகளவிலான தகவல்களை வைத்திருப்பது போன்றாகும்.

நீங்கள் ஒரு நூலகத்திற்குச் செல்லும்போது ​​ஒரு குறிப்பிட்ட தகவலை பெற்றுக்கொள்ள ஒரு புத்தகத்தை நூலகத்திலிருந்து பெற்றுக்கொள்கிறீர்கள். நீங்கள் அதை முடித்தவுடன் அதை மீண்டும் வைக்கிறீர்கள். டிஜிட்டல் மூளை மூலம் நினைவகமானது இவ்வாறே உங்கள் தனிப்பட்ட அறிவு நூலகமாக மாறும்.

நமது மூளை இப்போது தகவல்களைச் சேமிப்பதில் இருந்து விலகுவதால் அதனால் உள்ளெடுக்கும் அனைத்து தகவல்களிலிருந்தும் கற்றல்இ முடிவெடுத்தல் மற்றும் சிக்கல்களைத் தீர்த்தல் போன்ற மிக முக்கியமான அம்சங்களில் மூளையானது கவனம் செலுத்த முடியும்.

உதாரணமாக தினசரி நாம் மேற்கொள்ளும் விடயங்களைச் செய்வது போல் இது நமக்கு மிகவும் எளிதானது அல்லவா? அதாவது உங்கள் மளிகைப் பொருட்களைப் பெற்றுக் கொள்வது போன்ற இலகுவான விடயமாகவோ அல்லது நீங்கள் பணிபுரியும் வேலை தொடர்பில் ஒரு திட்டமிடலிற்கு தேவையான விடயங்களை ஒழுங்குபடுத்துவது போன்ற சிக்கலான ஒன்றாகவோ அமைந்தாலும் டிஜிட்டல் மூளையானது அதை சிரமமின்றி ஒழுங்கமைக்க உதவும்.

அனைவருக்கும் டிஜிட்டல் மூளை- நீங்கள் எவ்வளவு வயதானவர் என்பது முக்கியமல்ல ( A Digital Brain for Everyone – No Matter How Old You Are)

இது உண்மையிலேயே உங்களுக்காகவா என்று உங்களில் சிலர் யோசிக்கக்கூடும். உங்கள் 50 அல்லது 60 வயதிற்குள் நினைவூட்டலைப் பொறுத்தவரையில் நீங்கள் நன்றாக இருக்கலாம். மேலும் டிஜிட்டல் நினைவகம் என்பது தேவையற்ற ஒன்று எனவும் நீங்கள் கருதலாம்.

நல்ல செய்தி என்னவென்றால் டிஜிட்டல் மூளையானது மில்லேனியத்தில் உள்ளவர்களுக்கா அல்லது இளைய தலைமுறையினருக்கு என்று மட்டுமோ ஒதுக்கப்படவில்லை. டிஜிட்டல் மூளைக்கு பல அடுக்குகள் உள்ளன. மேலும் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் தொழில்நுட்பத்தின் புதிய முன்னேற்றங்களுக்கேற்ப டிஜிட்டல் நினைவகமானது தொடர்ந்து மேம்படுத்தப்படுகின்றது.

எனவே நாம் வாழும் வாழ்க்கை முறைக்கு ஏற்பவே நாம் எந்தளவு டிஜிட்டல் மூளையை பின்பற்ற விரும்புகின்றோம் என்பதை நாமே தேர்வு செய்ய வேண்டும். டிஜிட்டல் மூளையை ஏற்றுக்கொள்வதற்கு வயது ஒரு தடையே இல்லை!

3 1 vote
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
1 கருத்து
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Mohamed Faisal
Mohamed Faisal
3 years ago
இதை மதிப்பிடுங்கள் :
     

Nice