Poems

Breakup

49 posts

Shafiya Cader10 Feb 2020

நேசத்தின் கதவடைப்பு

அன்பே,ஒரு நேசத்தின்கதவடைப்பு என்பது என்ன?எதுவும் சொல்லாத போதேமென்மையாய் தாக்கப்பட்டு விடுகிறோம்ஒரு நிந்தனைக்குமுகம் கொடுக்க முடியாமல்தலை கவிழ்ந்து கொள்கிறோம்எதற்கு தவிக்க விடுகிறாய்என கேட்க முடியாமல்இறுக்கமாய் வாய் மூடிக் கொள்கிறோம்நம் அனுபவப் பாடங்களைபிறருக்கு சொல்லாமலே போகிறோம்எல்லாவற்றையும் மறந்தபடிபுன்னகைத்து கை…

நேசம்1 min read
ஓகஓடைக் கவிஞன்12 Nov 2019

வேண்டாமே வெளிநாடு!

கடவுளே...! நீரென்று நெருப்பள்ளி உடல் தடவிக்கொள்கிறேன் பூவென்று புகையள்ளி தலை சூடிக்கொள்கிறேன் கண்ணுக்கு மையென்று கரி பூசிக்கொள்கிறேன் காலுக்குக் கொலுசென்று சங்கிலி மாட்டிக்கொள்கிறேன் இன்னும், ஏக்கத்தைச் சேலையாக நானுடுத்திக்கொள்கிறேன் தவிப்பைப் போர்வையாக நான் போர்த்திக்கொள்கிறேன் கண்களைக்…

பிரிவு1 min read
பபபிருந்தா புஷ்பா கரன்25 Jul 2019

உன் வருகைக்காக நான்…..

கடற்கரை ஓரத்தில் எழுதப்பட்ட எழுத்துக்களாகஉன்மீது நான் கொண்ட காதல்அலையடித்து சென்றதுபோல் அழிந்து போனதடாநீயில்லா என் வழ்வும்அர்த்தமற்ற வாசகமாய்அப்பப்போ வந்துபோகும் உன்னோடு கழித்திட்ட பொழுதுகளின் நினைவலைகள் துன்பத்தோடு இன்பமும் தந்துபோகநீ மீண்டும் வருவாயெனும் நப்பாசையில் நகர்கிறது பொழுதுகள்......

நேசம்1 min read
RMRiska Mukthar18 Jul 2019

செய்தி

அன்பேஎன் இறப்புச்செய்தி உனை வந்தடையுமானால்.. வருந்தாதே!ஒரு இறகு உதிர்வதற்கு மேல்ஒரு இலை உதிர்வதற்கு மேல்அதில்பெரிதாய் ஒன்றுமேஇல்லை.. இன்னும்..என் பழைய புகைப்படங்களெதையும்அவசரமாய் கண்டெடுத்துநீ பார்க்காதிருக்க வேண்டும்..எனைப்பற்றிய செய்திகளைப்பகிர உன் பழைய நண்பர்களைதேடி நீ செல்லாதிருக்க வேண்டும்.. எல்லாவற்றுக்கும் மேலாக..எனக்காக வருந்தி ஒரு பிரிவுக்கவிதையைநீ எழுதாமல்…

பிரிவு1 min read
HHHaroon HN16 Jul 2019

சிறை

உன் இன்மையால்உன் மீது உண்டானஅலாதி நேசத்தினை, எனக்குள் சிறை வைத்திருக்கிறேன். என்றாவது ஓர் நாள்...!எதேச்சையாகஉன்னை காண நேரிட்டாலும்,அவைகளின் சுமையைபகிர்ந்து கொள்ள விருப்பமில்லை. இவ்வாழ்வு...!என்னிலிருந்து உன்னைஅடித்திழுத்துக் கொண்டு சென்ற உண்மை, அப்படியே இருந்து விடட்டும்.உன் மீளுதலை வேண்டிவிட்டு,மீண்டும் நான்நிதானமிழந்து…

நேசம்1 min read
Shafiya Cader13 Jul 2019

இடம்,பொருள்,ஏவல் நீ….

ஒரு காதல் என்பது நிறையவே கொட்டிக் கிடக்குபார்க்கும் இடம்கேட்கும் விடயம்தொட்டுணரும் பரவசம்விட்டகலும் ப்ரியம்மூச்சுமுட்டத் தரும் முத்தம்திகட்டத் திகட்ட பின் பிடரிவழி வழியும் நேசம்அள்ளிக் கொள்ளும் குழந்தைதொப்பலாய் நனைக்கும் மழைகடிகார 'டிக் டிக்'இரண்டு பெரும் இடைவெளிக்குள்சிக்கித்தவிக்கும் மனம்…

நேசம்1 min read
RMRiska Mukthar4 Jun 2019

நேசப் பெருவெளி

நேசத்தின் பெயரால் உன் வாழ்வில் ஒருவர் உள் நுழைகிறார்.. அவர் உன்னிடம்அன்பின் சிறு தண்ணீர்க் கோப்பையைதான் வேண்டி நிற்கிறார்;நீயோ அவருக்குபேரன்பின் ஒரு நீர்த்தேக்கத்தையே கொடுத்து விடுகிறாய்.. ஒரு துளி கருணைக்காகத்தான் வாசற்படியில் அவ்வளவு தயங்கி நிற்கிறார்;நீயோ அவர்மேல்கருணையை பெரும்…

நேசம்1 min read
RMRiska Mukthar20 May 2019

பிரிவு எண் 134

நீ இல்லாமலும் உயிர் வாழ்ந்துக்கொண்டு தான் இருக்கிறேன்..நீ இல்லாமற் போனதற்கான தடயங்களேதும் இல்லாமலில்லை.. இருந்தும்..நீ இல்லாமலும் புன்னகைக்க முடிகிறது..நீ இல்லாமலும் கவிதை எழுதிட முடிகிறது..நீ இல்லாமலும் உறங்கிப்போக முடிகிறது.. நீ இல்லை தான் ஆனாலும்இயங்கிக் கொண்டு தான்…

பிரிவு1 min read
Shafiya Cader5 May 2019

ஒரு வார்த்தை..

நீ எதைப் பற்றியேனும் பேசிடுமுள்ளடர்ந்த காடுகளுக்குள்தவத்தையும் என் தனிமையையும் கலைத்திட எதைப்பற்றியேனும் பேசிடு   அலாதியான விருப்பங்களை உடைத்தெறியும் உள்ளிறுகிய உன் பாறைகளுக்கு இடுக்கும் இடைவெளியும் இல்லை எனசொல்வதற்கேனும் எதைப்பற்றியேனும் பேசிடு நீள் நொடிகளில் நிரம்பிய ஞாபகங்களை இழுத்துப் பிடித்தோ தூரம் தள்ளியோ எறிவதற்காகிலும் நீ எதைப்பற்றியேனும் பேசிடு   எப்போதும்…

பிரிவு1 min read