Poems

Lifestyle

195 posts

ஓகஓடைக் கவிஞன்21 Sep 2019

அதன் அளவு அவ்வளவுதான்

நாம் யாரும் மற்றவரின் நிலையிலிருந்து சிந்தித்தது கிடையாது... இலகுவில் ஏறி மிதித்து தகர்த்து விட்டுச்சென்றிருப்போம் எனினும், எறும்புகளுக்கு அவற்றின் வாழிடம் அவ்வளவு சிறியதாய் தோன்றியது கிடையாது மண் துணிக்கை கொண்டு அமைத்த புற்றாயினும் எறும்புகளின் கண்களுக்கு…

வாழ்வியல்1 min read
HBHumaitha Basheer12 Sep 2019

நான் ஒர் ஏழைச் சிறுமி…

வற்றிய வயிற்றுடன்துளையிட்ட துணியணிந்துநடமாடித் திரியும் ஏழைச்சிறுமி நான்.... அடிக்கும் வெயிலும் அடை மழையும்வீட்டுக்குள் புகுந்துதூங்க விடாமல் பண்ணும்அதிசய வீடு எனக்கு.... பள்ளி செல்லும்பாலர் பார்க்கையில்படிப்பு என்பதுஎட்டாக்கனி ஆகிவிட்டதோ?என்ற ஏக்கம் எனக்கு... கடற்கரையில் கடலை விற்றுவரும் பணம்வயிற்றை நனைக்க கிடைக்கும் பாக்கட் பணம் எனக்கு.... பணம் இல்லாவிடிலும்பாசம் நிறை கொண்டஅன்பாக வாழும்அழகிய வாழ்வு எனக்கு... மனிதம் சாகடிக்கப்பட்டமனிதர் கொண்ட செல்வ வாழ்க்கை இல்லை... சொற்ப பணமேனும்சாதாரண தேவை நிறை செய்யும் சிறப்பான வாழ்க்கை எனக்கு... பாடம் படிக்காகுறை தவிரகுடிசையில் வாழ்ந்திடினும்நிறை வாழ்க்கை கொண்டஏழைச் சிறுமி நான்...

வாழ்வியல்1 min read
கநகவி நிழல் ஏரூர் ஜனூஸ்12 Sep 2019

விதியின் விலகல்

ஒற்றையடிப் பாதையிலே ஒதுங்கிய சிட்டுகளே ஓரக்கண் பார்வையாலே ஒவ்வொன்றாய் உணர்த்துறீர்களே!!! மதியிழந்த மானிடர்கள் விதியென்று கடந்து போவர் சிட்டுகளின் முனுமுனுப்பை யார்தான் இங்கு கேட்டறிவர் தெருவோர விளக்குகளால் வீதிகளும் வெளிச்சமாகும் விதிசெய்யும் விளையாட்டில் இருள்சூழ்ந்த வாழ்க்கையாகும்…

வாழ்வியல்1 min read
Shafiya Cader22 Aug 2019

நாங்கள் அறிந்த அவர்கள்….

அவர்கள் ஒருபோதும் காலியான தட்டுகளை பார்ப்பதில்லை வெறுமையான குவளைகளை நிரப்ப முயற்சிப்பதில்லைபாத்திரங்கள் நிறைந்திருக்கும் சமயத்தில் படையல் செய்கிறார்கள்இல்லை எப்போதேனும்விருந்துக்குத் தயாராகும் நேரங்களில் அழைப்பு விடுக்கிறார்கள்அவர்கள் எந்த வகையில் சேர்த்தி எனத் தெரியவில்லைஎப்போதேனும் உபயம் தேவைப்படும் நேரங்களில் அவர்கள் மறைந்து விடுகிறார்கள்பிறிதொரு நாளில்நினைவு கூர்ந்து தேவைகள் தீர்ந்த பின் வாசல் கதவுகளை தட்டுகிறார்கள்கைகொடுக்க மறந்தவர்கள்கைமாறு கேட்கிறார்கள்நீ என்ன…

வாழ்வியல்1 min read
அவஅஹமட் வஸீமுல்லாஹ்16 Aug 2019

எழுந்திடு

விழுகையில் அழுதவனாக இராமல் எழுந்தவனாக உன் சரித்திரம் மாற்ற எழுந்திடு ! உன்னை உன் நிலை தாழ்த்தி உன் ஊக்கம் குறைப்பவர் முன்னே ஓங்கி வளர்ந்திட எழுந்திடு ! எம்முள் தீயை வளர்த்து அத்தழல்தனில் குளிர்காயும்…

வாழ்வியல்1 min read
கநகவி நிழல் ஏரூர் ஜனூஸ்15 Aug 2019

சின்னஞ்சிறு சிட்டு

சிறகடித்துப் பறந்த சிட்டொன்றுசிறைப்பட்டுப் போனது இன்றோடு தாயொன்று இருந்திருந்தால் தவிக்கத்தான் விட்டிருப்பாளோ !!! இல்லை தங்கச் சிலை போல் தன்னகத்தே வைத்திருப்பாளோ!!! தரணியிலே உலாவுகிறாய்உதவுவோர் யாருமுண்டோ!!உள்ளங்கை ஏந்தாமல் உண்டு மகிழ நினைத்தாயோ!! உள்ளம் குமுறுகிறதுபாறை பனியாய்…

வாழ்வியல்1 min read
அவஅஹமட் வஸீமுல்லாஹ்12 Aug 2019

புறப்படு

உன் பயணம் எது என நினைத்தாய்?உன் நிலையில் தரித்து உண்மை மறுத்துஉன்னை வளர்த்து காலத்தின் வேகத்தில் அச்சாணி இல்லாத சக்கரமாய் சுழன்று ஓர் நாள் தடம்புரண்டு ஓய்வான கல்லறையில் உறங்குவது என்றோ ?உன் பயணம் எதுவென்றால்..…

வாழ்வியல்1 min read
ச(சா.சக்திதாசன் (அக்கரைச்சக்தி)12 Aug 2019

உனக்கென்ன கவலை தம்பி?

எரிபொருளாய்ப் பாவிக்கஎண்ணெயுண்டுஎழுதுவதற் குபயோகமாகும் பென்சிற்கரிசெய்யும் கனிப்பொருள்கள் கட்டித்தங்கம்கார்டயர்கள் செய்தற்குரப்பர்பாலும்அரியவிலைமதிப்புள்ள இரத்தினங்கள்அள்ளியள்ளித்தரும் சுரங்கம் அடியிலுண்டுஉரிய பல வளமெல்லாம் உள்ளபோதுஉனக்கென்ன கவலை இங்கு உளது தம்பி? தேயிலையும் பயன் நல்கும் தென்னந்தோட்டம்தேடரிய மூலிகைகள் தேக்கு பாலைகாயவிடக்காயவிட உறுதி நல்கும்கருங்காலி…

வாழ்வியல்1 min read
ச(சா.சக்திதாசன் (அக்கரைச்சக்தி)12 Aug 2019

நாளையே எங்கள் நோக்கம்

எழுகின்றாய் வாலிபனே! ஏன் எழுந்தாய்? இந்நாட்டின்எதிர்காலம் உன்கையில் இருக்கின்றதென்கின்றஉணர்வினிலேஎழுந்தாயாசொல்!விழிக்கின்றாய் வாலிபனே! ஏன் விழித்தாய்? வீறாகவீட்டுக்கும் நாட்டுக்கும் வேண்டியதைஉடன் செய்யும்விருப்பத்தில் விழித்தாயாசொல்!பழிக்கின்றாய் பழைமைபிடித் துழல்பவரை! ஏன்பழித்தாய்?பங்கெடுத்துச்செயலாற்றும் பாங்குடையஉனைஅவர்கள்பார்க்கவேமறந்தாராசொல்!அளிக்கின்றாய் மரியாதைஅன்னைக்கு! ஏன் அளித்தாய்?அவளுன்னைநாட்டுக்காய் அர்ப்பணித்தபெருந்தன்மைஅறிந்ததும் மகிழ்வுகொண்டா? துடித்தாயேவாலிபனே! ஏன்…

வாழ்வியல்1 min read
கநகவி நிழல் ஏரூர் ஜனூஸ்10 Aug 2019

மிடி…

பார்த்தாலே பரிதவிப்பு பாலகனே உன் சிரிப்பு பங்குண்டு எங்களுக்கும் பசிபோக்க வேண்டுமென்று...வந்த பசி போனபின்பு அந்தொன்று மறந்திட்டு... ஆனாலும்மனமில்லை எங்களுக்கு பகிர்ந்துண்டு வாழ்வதற்குவட்டமுக சட்டைக்காரா வாட்டத்துடன் காட்சிதாரா.. வீதியிலே அலைகின்றாய் முன்னும் பின்னும் பார்க்கின்றாய்பருந்து போல…

வாழ்வியல்1 min read