அப்படி என்ன சொன்னாய்?

0
1324

வானத்தின் விண்மீன்கள்
வைகை ஆற்றில் மிதக்கிறது
உன் மெளன மொழியின்
சொல்லைக் கேட்டு

சந்திரனும்
சலனமில்லாது குளிக்கிறான்
உன் சாந்தமான சொல்லைக் கேட்டு
பகலில் பூத்த மலர்களும்
இரவில் பூக்கிறது
அப்படி என்ன சொன்னாய்
உன் அமிர்த வாயாலே…

தென்றலுக்கு
தெருவில் என்ன வேலை
உன் தித்திக்கும்
சொல்லைக் கேட்டு
திசையறியாமல் தவிக்கிறது

வண்ண வகை வண்டுகளும்
உன் இன் சொல்லுக்கு
இசையமைக்கிறது.
அப்படி என்ன சொன்னாய்
இனிமையான
உன் வாயாலே

கடுதியான இசையொன்று
வசையில்லாமல் ஒலித்தது
சட்டென திரும்பிப் பார்த்தேன்
கானா குயிலும் கரமுறவென
கம்பீரமாய் குரட்டையில்
அரட்டை அடித்தது

நானும் எழுப்பிக் கேட்டேன்
நித்திரை இழந்து
சாஸ்திரம் பார்க்கிறோம்
என்னவள்
என்ன சொன்னால் என தெரியாமல்

நீ மட்டும் துயில் கொள்கிறாய்
என்னவள் சொன்னது பிடிக்கவில்லையோ?

அடடா!
அப்படி அவள் சொன்னனால் தான்
நான் இப்படி தூங்குகிறேன் என்றது.

அவள், துயிலும்படி என்ன சொல்லியிருப்பாள்…..?

அன்பார்ந்த வாசகர்களே இந்த கவிதையை நன்கு வாசித்து பெற்ற விடயத்தின் இறுதியில் அவளால் அப்படி என்ன தான் சொல்லியிருக்க முடியும் என்பதனை கீழே உள்ள comment box ல் பதிவிடவும்.

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments