அழகான ஆக்கிரமிப்பு…

0
422
road-to-love-trees-shape-heart-58864200-9cbc1499
அழகான ஆக்கிரமிப்பு..

உன்னைக் காணும் முன் என் நெஞ்சில்  கோட்டை கட்டி என்னை ஆளும் கோமகனாய் உச்சத்தில் வீற்றிருந்தேன் உன் ஓரப் பார்வையால் என் இராஜ்ஜியம் பறித்து உன் காவலனாய் மாற்றி விட்டாய் பெண்ணே…

உன் காதலனாய் மாறிய பின் உன் ஒற்றைச்சொல்லும் இன்னிசையாய் ஒலிக்கிறதே என் காதில் உன் ஓரிரு வார்த்தைகள் கேட்டு புல்லாங்குழலும் பொறாமை கொள்ளாதோ…

உன் சொல் கேட்க வருவோரிடமும் குறைவாய் பேசும் கருமி நீ இருந்தும் வெட்கம் உன் சொத்து என்றால் சீமாட்டி நீ…

என்னை ஏங்க வைக்கிறாய் என் தூக்கம் கொல்கிறாய் இதயம் திருடும் கொள்ளைக்காரியே என் இதயம் மீட்க வழிகள் உண்டோ அல்லது வலிகள் உண்டோ…

வலிகள் தாங்கிய என் இதயம் புதிய வழிகள் தேடிச்செல்லும் வழியில் என் இதயம் பறித்தாய் எனினும்  அத்துமீறல்கள் எப்போதும் நிலையாக  இருப்பதில்லை இருந்தும் விரும்பியே தொலைகிறேன் உன்னைக் காணும் போதெல்லாம்..

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments