அவல் மிக்சர்

0
1255

அவல் வைத்து கிச்சடி, உப்புமா செய்து சாப்பிட்டு இருப்பீங்க. இன்று அவலில் சூப்பரான ஸ்நாக்ஸ் மிக்சர் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

சூப்பரான ஸ்நாக்ஸ் அவல் மிக்சர்
தேவையான பொருட்கள்

கெட்டியான அவல் – 500 கிராம்,

மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன்,
இரண்டாக உடைத்த முந்திரி – 2 டீஸ்பூன்,
காய்ந்த திராட்சை – 2 டேபிள்ஸ்பூன்,
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்,
கறிவேப்பிலை – சிறிது, உப்பு,
எண்ணெய் – தேவைக்கு,
வறுத்த வேர்க்கடலை – 50 கிராம்

செய்முறை :

கடாயில் எண்ணெய் சேர்த்து சூடானதும் மிதமான சூட்டில் வைத்து சுத்தம் செய்த அவலை பொரித்தெடுத்து தனியே வைக்கவும்.

அதே போல் கறிவேப்பிலை, முந்திரி, காய்ந்த திராட்சையை தனித்தனியே எண்ணெயில் போட்டு பொரித்தெடுத்து தனியே வைக்கவும்.

பொரித்த அவலுடன் மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், உப்பு போட்டு நன்கு கலந்து, அதனுடன் தோல் நீக்கி வறுத்த வேர்க்கடலையைச் சேர்க்கவும்.

பொரித்த முந்திரி, காய்ந்த திராட்சை, கறிவேப்பிலை அனைத்தையும் நன்றாக கலந்து பரிமாறவும்.

சூப்பரான ஸ்நாக்ஸ் அவல் மிக்சர் ரெடி!

Source : வலைப்பகிர்வு

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments