இது தான் காதலா?

0
625
IMG_20200814_172611

 

 

 

 

என்னவனே! 
நானும் நாத்திகன் தான் 
கடவுள் கொள்கையில் அல்ல
இதயங்கள் கொள்ளை போகும் காதல் கொள்கையில்-ஆனாலும்
உன் விழி பார்த்து, உன் மொழி கேட்ட பின்
உன் முழு நேர
காதல் ஆத்திகனாகி விட்டேன்

உன்னைப்பற்றி பேசியே
தோழியரின் செவிப்புலன் செயலற்று விட்டதாம்
காதல் என்பதையே நேரம் தேய்க்கும்
வெட்டியரின் வேலை எனக் கூறியவள் நான்- இன்று
என் பொழுதுகள் அனைத்திலும்
நாளைய உன்னுடன் பேசுவதற்கான ஒத்திகைகள் நடந்தேறுகின்றன
இருந்தும் உன்னை கண்டவுடன்
என் வாய் மொழியும், 
தாய் மொழியும் ஊமையாகி போகின்றன அன்பே
இது தான் காதலா?

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments