இது விடியலா இல்லை அஸ்தமனமா? (பகுதி 02)

0
1312

 *பகுதி 02* 

தூக்கத்திலிருந்து விழித்த அவன் தன் குழந்தையை நோக்கிப்பார்த்தான். ராஜா அந்த வீட்டின் ராஜா அல்லவா? அதனால் தான் அவர்கள் வீட்டினுள் புகுந்த மழைத் தூறல் கூட அவனது தூக்கம் கெட்டு விடக்கூடாது என்று அவன் மீது விழாது சற்று ஒதுங்கியே நின்றது. அவ்வாறு அவனைத் தூங்க வைத்திருந்தால் பவித்ரா. [ இது தான் புத்திசாலி தாய்க்கு அழகு]
 
பின் தன் மனைவியின் பக்கம் திரும்பிய அவன் அவள் ஏதோ யோசனையில் இருப்பதையும் தான் அவனைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்பதையும் மறந்து மேலே பார்த்துக் கொண்டிருப்பதையும் பார்த்தான். பின் அவளது நெற்றியில் கிடந்த மழை முத்துக்களை தன் கைகளால் துடைத்தபடியே
 
“என்னடா! என்ன? நாளைக்கு என்ன நடக்கப் போகுது என்பத பத்தியா யோசிக்கிறாய்? ” என்று கேட்டான் ராஜேஷ். 
 
“ஆமாம் எனக்கு அதே நெனைவாத்தான் இருக்கு.  உங்க முயற்ச்சிய மட்டும் அந்த கம்பெனி ஒத்துக்கிட்டா எப்படி இருக்கும்…. அதான் அவங்க ஏத்துப்பாங்களா? இல்லயா?  என்டு ஒரே பயமா இருக்கு அதான் அத பத்தி யோசிச்சிட்டு இருக்கன். ” என்றாள் பவித்ரா ஒரு குழந்தை பேல.
 
“அட இதுக்கா நீ இவ்வளவு யோசிச்சிட்டு இருப்ப, என் செல்ல அரசி வழியனுப்பி வெச்சா எனக்கு எல்லாம் சக்ஸஸ் தானே நான் பைலியர் ஆகிட்டு வந்து நின்ட விஷயம் ஏதாவது இருக்கா? பாரு பவி நீ மட்டும் நாளை காலைல என்ன உன் சிரிப்போட மட்டும் வழியனுப்பி வையன். ஐயா பிறகு ஆடரோடதான் திரும்புவன். அதுக்கு இதபத்தி எல்லாம் யோசிக்காம நீ இப்ப தூங்கனும்.  அப்ப தானே நேரத்தோட எழும்பலாம். ஸோ நீ இப்ப தூங்குவியாம் என்ன?” என்று கேட்டான் ராஜேஷ். 
 
சரி என்று தலையாட்டியவள் வராத தூக்கத்தினை வற்புறுத்தி  வரவழைத்துக் கொண்டு தூங்கினாள் . அவள் தூங்கிய பின்னே அவனும் தூங்கினான்.
என்னதான் மனைவியை தூங்க வைக்க வேண்டும் என்றதற்காக அவன் அவ்வாறு கூறினாலும் நாளைய நாள் பற்றிய யோசனை அவன் முன்னும் தோன்றியே மறைந்தது. 
 
தொடரும்…
0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments