இது விடியலா இல்லை அஸ்தமனமா? (பகுதி 09)

0
880
 *பகுதி 09* 
 
தனது மனைவியின் மௌனத்தினை அவன் உணர்ந்ததாலோ என்னவோ 
“ராஜாவ ராஜாவா மட்டும் வாழவைக்கிறதில்ல அப்பப்ப கஷ்டம் என்டா என்ன என்டு காட்டனும். அப்ப தான் நம்ம பையன் உன்ன மாதிரி புத்திசாலியா வருவான். நான் சொல்றது சரிதான பவித்ரா. எனக் கேட்டு விட்டு இனி நமக்கு விடிவு தான் எனக் கூறி தலைக்கு அனையாக இரு கைகளைக் கொடுத்து கதிரையில் சாய்ந்தவாறே ஒரு ஆழமான மூச்சை எடுத்துவிட்டான். 
 
பின் அவர்கள் ஏதேதோ பேசிக்கொண்டிருந்து விட்டு இரவுச் சாப்பாட்டினையும் உண்டு விட்டு தூங்குவே நள்ளிரவு தாண்டி சில நிமிடங்களும் சென்றிருந்தன. பாவம் அவர்களுக்குத் தெரியாது நாம் அனைவரும் ஒன்று கூடி சந்தோஷமாக பல மணிநேரம் பேசிக்கொண்டிருப்பது இதுவே கடைசியாக இருக்கும் என்று. விதியின் விளையாட்டோ அல்லது வாழ்வின் நியதியோ நாளையில் இருந்து இவர்களின் குடும்பத்துடன் கழிக்கும் பெருமதியான நேரங்களை பதம்பார்க்ப் போகின்றது.
 
மறு நாள் காலையில் இன்று தனது புது வேலையின் முதல் நாள் என்ற படியால் தூக்கம் கண்னைக் கட்டிக் கொண்டு வந்த போதிலும் அதனை விட்டெறிந்து விட்டு நேரத்துடன் எழுந்தான் ராஜேஷ். குளித்து விட்டு வெளியே வந்தவன். சற்று கவலை ரேகை முகத்தில் படர சஞ்சலமடைந்தான். [ ஏன் அப்படி ]
 
அங்க அவன் மனைவி அவனை விட நேரத்துடன் எழுந்து குளித்துவிட்டு அவனுக்காக காலை உணவினை தயார் செய்து விட்டு அவன் வருகையை எதிர் பார்த்துக் காத்துக் கொண்டிருந்தாள். அவள் அருகே சென்ற அவன் அவளை அன்பு கொண்ட ஒரு பார்வை பார்த்துவிட்டு அவள் நெற்றி மீது இதழ் பதித்துவிட்டு உணவை உண்டு முடித்தான்.
 
பின் ” ஏன் மா!  இதல்லாம் பண்ணின. நானே எழுந்திருக்க ரொம்ப கஷ்டப்பட்டன். நீ என்ன என்ன விட நேரத்தோட எழும்பி இதல்லாம் செஞ்சிட்டு மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. 
[ஐயா இப்படி ரொம்ப பீல் பண்ண காரணம் என்ன தெரியுமா வசகர்களே! இவர்கள் வீட்டில் ஒரு வித்தியாசமான பேட்டி தினம் தினம் கணவன் மனைவியிடையே இடம் பெறும் அது என்ன தெரியுமா யார் காலையில் நேரத்துடன் எழுந்து காப்பி போட்டுவிட்டு மற்றயவரை எழுப்புவதென்பதே. நேற்று கூட ராஜேஷ் காப்பி போட்டு பவித்ராவை எழுப்பினான். எப்படி கேம்? ]
 
 தொடரும்…
0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments