29.2 C
Batticaloa
Monday, March 9, 2026
முகப்பு விமர்சனம் நூல் விமர்சனம் என் சிறகில் சிக்கிய வானம்: மரீனா இல்யாஸ் ஷாபீ

என் சிறகில் சிக்கிய வானம்: மரீனா இல்யாஸ் ஷாபீ

0
44
WhatsApp-Image-2026-03-07-at-18.45.34-2

என் சிறகில் சிக்கிய வானம், என் மேல் விழுந்த மழைத் துளிகள் என்ற பயண கட்டுரைகள் “என்” என்ற சொல்லின் மூலம் பயண கட்டுரையை தனித்துவமான புத்தகமாக வெளியிட்டுக் கொண்டிருக்கும் சகோதரி மரீனா இல்யாஸ் ஷாபி  அவர்கள் Sri Lanka pen club உறுப்பினர் என்ற வகையில் சென்ற மாநாட்டில் அவரது “என் சிறகில் சிக்கிய வானம்’ என்ற புத்தகம் என் கையில் கிடைத்தது.

பயணம் என்பது வாழ்வின் இன்பத்தை நாமே தேடி அதனை சுவைத்துக்கொண்டே அந்தப் பயணத்திலே ஒன்றிணைதல் என்ற நிலையைக் கொண்டிருக்கும். எனக்கு இந்த புத்தகம் கொஞ்சம் வித்தியாசமான அனுபவத்தை தந்தது எனலாம். காரணம் பயண புத்தகம் ஒன்றை பயணித்துக் கொண்டே வாசிக்கும் அலாதி  இன்பம் வார்த்தைகளால் சொல்லிட முடியாது. அதுவும் “என் சிறகின் சிக்கிய வானத்தோடு” நானும் சேர்ந்து பயணித்தது போல் இருந்தது. வகுப்புக்கு  பஸ்ஸில் செல்ல ஒரு மணித்தியாலமும், வருவதற்கு  ஒரு  மணித்தியாலமும் என்ற பயணத்தில் நானும் இப்புத்தகத்தோடு  சிக்கி விட்டேன்.

சரி இனி புத்தகத்தினுள் செல்வோம். இந்த புத்தகம் ஆசிரியரும் அவரது கணவரும் சென்ற பயணத்தின் தொகுப்பாகவே அமைந்துள்ளது. அதிலும் பயணத்தில் போfன் காணாமல் போயும் பின்னர் சிரமப்பட்டு சேகரித்த புகைப்படங்கள் இணைத்து அழகாக வடிமைந்துள்ளது. வாழ்க்கையில் எல்லா இடங்களுக்கு சென்று இருந்தாலும் நம் மூதாதையர்கள் நபிகள் வாழ்ந்துமடிந்த இடத்திற்கு  சென்று தொற்றுணறும் போது நம் கண்களும் இதயமும் ஒன்றாகி உருகும் பொழுதுகளை மரீனா இல்யாஸ் ஷாபி அவர்கள் அனுபவித்து எழுதியுள்ளார்.

பயணம் ஒன்றில் அருள்பாலிக்கப்பட்ட மரம் நபி (ஸல்)அவர்கள் சிறுவனாக இருந்தபோது நிழல்கொடுத்த மரம் இன்னும் உயிர் வாழ்கிறது. என்றால் இஸ்லாத்திற்கு அல்லாஹ் உயிர் கொடுத்திருப்பதை நபி (ஸல்) அவர்களின் சம்பவங்கள் மூலம் அழகாக சுவைப்பட எழுதியுள்ளார்.

சூரத்துல்  கஹ்ப்பின் வரலாற்று குகை வாசிகளின் கதையையும் அதன் உண்மை தன்மையும் நவீன ஆராய்ச்சிகளையும் ஒப்பிட்டு பயணம் இரண்டின் சிறப்பாக நயத்துள்ளார். பயணம் மூன்று சாக்கடலில்  ( dead sea ) இன் வரலாற்று லூத் (அலை) அவர்களின்  சமூகத்துடன் தொடர்பு பட்ட சம்பவங்களை மிகத் தெளிவாக நம் முன்னோர்களின் அத்தாட்சிகளை கண்முன்னே கண்டு அனுபவங்களை கொட்டியுள்ளார்.

இன்னும் இந்த பயண கட்டுரையில், ஜோர்டான் நாட்டில் உள்ள நெபோ மலை) ஷுஹைப் (அலை)அவர்களின் அடக்கஸ்தலம் என பயணம் ஐந்தில் அக்ஸாவை கண்டறிகிறார். மஸ்ஜிதில் தொழுகையை மேற்கொண்டும்,  உட்பகுதியிலும் பள்ளியின் வடிவமைப்பும்,  சில வரலாற்று நிகழ்வுகளையும், அழகாக நாம் கூடவே செல்வது போன்ற உணர்வையும் தந்தார். குப்பத்து சஹ்ரா பள்ளிவாசளில்,நபி (ஸல் ) அவர்களின் மிஹ்ராஜ்  பயணத்தையும் மிதக்கும் பாறைகள் பற்றியும் கூறிக்கொண்டே பயணம் ஒன்பதுக்கு வந்து சேர்ந்தார்.

பலஸ்தீனிலிருந்து எகிப்து நோக்கி பயணம் 10 இல் தூர்ஸீனா மலை மூஸா (அலை) அவர்கள் அல்லாஹ்வை பார்த்த மலையில்  இறைவன் தோற்றம் அளிக்கும் போது துகள் துகளாக வெடித்து சிதறிய போது அதன் தாக்கமாக வேருடன் ஒரு மரம் விழுந்திருக்கிறது. அந்த மரம் இன்னும் செழிப்பாக இருக்கின்றது. என இன்னும் ஒரு ஆச்சர்யத்தையும் ஆசிரியர் கூறுகிறார். அந்த மரத்தின் விம்பம் அங்கிருக்கும் மழை தொடர்களில் பிரதிபலிக்கிறது என்கிறார் அது மட்டுமின்றி அங்குள்ள சிறு கற்களில் கூட அம்மரத்தின் விம்பம்  இருக்கிறதாம். அதனை புத்தகத்தில் இணைத்துள்ள படத்தை வியந்து பார்த்துக்கொண்டே … நானும் வகுப்புக்கு வந்து சேர்ந்தேன்

வகுப்பு முடிந்து பயணம் 11 தொடர்ந்தேன்.  இந்த புத்தகத்தை வாசிக்கும் முடிக்கும் வரை மனதில் ஒரு விடாப்பிடியான ஆர்வம் அதிகமாக இருந்தது. காரணம் இப்புத்தகம் நபிமார்கள் வரலாற்றை நேசிக்கவும், மெய்பிக்கவும்  அதனை உணர்வுபூர்வமாக வரலாற்று நிகழ்வுகளையும் கதையாகவும் கூறி என்னையும்  சேர்த்து இந்த பயணத்தில் அழைத்துச் சென்றார் நூலாசிரியர்.

மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அகற்றிய பாறாங்கல்,  மூஸா அலைஹிஸ்ஸலாம் கைத்தடியால் பாறையில் அளித்த போது உருவான நீரூற்று என புகைப்படத்தோடு எம்மை உலக அதிசயத்திற்கு அழைத்துச் செல்கிறார்.

பயணம் ரசித்ததில் உள்ளது என்பதை வீதியில் சிறுவன்  ஒற்றை கையால் சைக்கிளை ஓட்டிக்கொண்டு மறு கையில் அவன் உயரம் அளவில் தட்டை தலையில் வைத்துக்கொண்டு ரொட்டி விற்பதற்காக சமநிலையில் ஓடும் காட்சியை ரசித்து வாகனத்திலிருந்து புகைப்படமும் தந்து எமக்கு உணர்த்தியுள்ளார். சஹாரா பாலைவனத்தின் கீசா பிரமிட்டுக்களை காட்டியவரே நைல் நதிக்கு அழைத்துச் செல்கிறார் ஆசிரியர்.  உல்லாச கப்பலில் நடந்த சம்பவம் கற்பனை செய்திருந்த எகிப்திற்கும் நேரில் கண்ட எகிப்திற்கும்  நிறைய வித்தியாசம் என்பதை அந்த சம்பவம் மூலம் சுட்டிக்காட்டி உள்ளார்.

தரம் நான்காம் ஆண்டு இஸ்லாம் பாட புத்தகத்திலிருந்து அவனது  புகைப்படத்தை கண்ட நாம் ( பிர் அவ்ன் )  நேரில் அவனை ஒரு போர் முடித்து வெற்றி கொண்டு அவனை மாய்த்த சந்தோஷத்தில் அவனைப் பார்க்கத் துடித்தது போல இருந்தது சகோதரி மரீனா இல்யாஸ் ஷாபி அவர்களின் மொழிநடை.  சலாஹுதீன் ஐய்யூப் இன் கோட்டையை சுற்றி முற்றும்  புகைப்படத்துடனும் ,சம்பவங்களுடனும்  எம்மை முஹம்மது அலி மசூதிக்கும்  அழைத்துச் சென்றார். இடையில் கெய்ரோவின்  சந்திக்கும் , கான் எலிலி சந்தைக்கும்  அழைத்துச் சென்றார். இறுதியாக  இமாம் ஹுசைன் பள்ளிவாசலின் இரத்தக்கறை  படிந்த வரலாற்று நிகழ்வை மீட்டிக் கொண்டு பயணம் 19 இல் இமாம் ஷாஃபி அவர்களின் அடக்கஸ்தலம் பார்வையிட்டு, அஸ்ஹர்  பள்ளிவாசல், அம்ர் இப்னு ஆஸ் பள்ளிவாசல் என எம்மையும் ஜோர்டான்,எகிப்து ஆகிய நாடுகளுக்கு அழைத்துச் சென்று மக்காவிற்கு சென்ற ஆசிரியர் யாத்திரைகள் மேற்கொள்வதற்காக அங்கே பயணக் கட்டுரையும் முடித்துக் கொண்டார்.

பயணம் கட்டுரை வாசித்து முடித்தாயிற்று. ஆனால் என் பயணம் இன்னும் முடியவில்லை  வீடு வரும் வரை கற்பனையாக அதனை மீட்டிப் பார்துக் கொண்டே  அந்த வயல் காற்றை ஜன்னலோரம்  ரசித்தபடி நானும் பயணித்து கொண்டிருந்தேன்

ஒரு புத்தகம் மனதிற்கு பிடிப்பதற்கு ஆசிரியர்களின் மொழி நடை, உள்ளடக்கம், புத்தகத்தின் தரம் மேலும் அழகை சேர்க்கும் ஆனால். இந்த புத்தகத்தின் அணிந்துரை, முன்னுரை வாசிக்கும் போது எனது மகளும் வாசிக்கும் வயது வரும் போது கொடுக்க வேண்டும் என நினைத்திருந்தேன். ஆனால் வாசித்துக் கொண்டு ஒவ்வொரு பக்கத்தை பிரட்டும் போதே கையில் கூடவே தாளும் வந்துவிட்டது. அதுவும் பஸ்ஸில் நின்று கொண்டிருந்தவர்களும் அருகில் இருந்தவர்களும் என்னையும் புத்தகத்தையும் பார்க்கும் போது கொஞ்சம் சங்கடப்பட்டேன். பதிப்பகம் விடும் தவறு இப்படியான நல்லதொரு புத்தகத்தை வாசிக்காமல் அப்படியே விட்டு விடுவோமா அப்போது சரி புத்தகம் பாதுகாப்பாக  இருக்கும் என நினைத்துக் கொண்டு பயணம் ஒன்றை வாசித்தேன்.  பிறகு முழு புத்தகத்தையும் வாசிக்காமல் இருக்க மனம் கேட்கவே இல்லை. வாசித்து முடிந்த பிறகு அனைத்தும் தாள்களாகவே எஞ்சியது. எதிர்மறையான விமர்சனம் என்று இந்த புத்தகத்தின் தன்மையை தவிர்த்து, என்னைப் பொருத்தவரையில் எந்த எதிர்மறை விமர்சனமும் தெரிவிக்கவே முடியாது.

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
error: தயவு செய்து நகல் எடுக்க வேண்டாம் !!
0
Would love your thoughts, please comment.x
()
x
Enable Notifications OK No thanks