எளிய தமிழில் HTML – 2

0
1181

Preservative tag

Preservative tag-ஆனது body tag-க்குள் உள்ளவற்றை அதன் வடிவம் கொஞ்சம் கூட மாறாமல் அப்படியே browser-ல் வெளிப்படுத்த உதவுகிறது. உதாரணத்துக்கு பின்வருமாறு ஒரு program-ஐ <pre> tag இல்லாமல் அடித்து, browser-ல் திறந்து பார்க்கவும்.

body tag-க்குள் நாம் ஒவ்வொரு வரிக்கும் கொடுத்த இடைவெளி, tag space எல்லாம் புறக்கணிக்கப்பட்டு, வெறும் எழுத்துக்கள் மட்டும் browser-ல் வெளிப்பட்டுவிட்டது. இப்போது அதே program-ஐ pre tag கொடுத்து browser-ல் open செய்து பார்க்கவும்.

இப்போது நாம் கொடுத்த எழுத்தின் வடிவம் கூட மாறாமல், அவை browser-ல் வெளிப்படுவதைக் காணலாம். எனவேதான் <pre> tag மிகவும் பயனுள்ளதாகக் கருதப்படுகிறது.

Lists

HTML-ல் ஒருசில விவரங்களை நாம் பட்டியலிட விரும்பினால் 3 விதமான பட்டியல்களைப் பயன்படுத்தலாம். அவை பின்வருமாறு.

Ordered list – தொடர்ச்சியான எண்களால் தகவல்களைப் பட்டியலிடுவது. <ol> எனும் இணை tags இந்த வேலையை செய்யும்.

Unordered list – புள்ளிகளை வைத்து தகவல்களைப் பட்டியலிடுவது. <ul> எனும் இணை tags இதற்குப் பயன்படுகிறது.

Definition list – ஒரு சிறு தலைப்பும், அதன்கீழ் அந்த தலைப்புக்கான விளக்கமுமாக தகவல்களைப் பட்டியலிடுவது. <dl> எனும் இணை tags இந்த வேலையைச் செய்யும்.

அடுத்தபடியாக பட்டியலில் வெளியாகும் ஒவ்வொரு தகவலும் <li> எனும் இணை tags மூலம் கொடுக்கப்படுகிறது. (li for list index). அதாவது நித்யா, வித்யா, சத்யா எனும் மூன்று பெயர்களைப் பட்டியலிட விரும்பினால், ஒவ்வொரு பெயரின் முன்னும் பின்னும் <li></li> tags-ஐ இணைக்க வேண்டும். பின்னர் இந்தப் பெயர்களை தொடர்ச்சியான எண்களால் பட்டியலிட வேண்டுமா அல்லது புள்ளிகளை வைத்து பட்டியலிட வேண்டுமா எனக் குறிப்பிடும் வகையில் அந்த மூன்று பெயர்களையும் கொடுப்பதற்கு முன்னர் <ol> அல்லது <ul> எனும் tags-ஐயும், மூன்று பெயர்களையும் கொடுத்து முடித்த பின்னர் கடைசியாக அதற்கான இணை tags-ஐயும் கொடுக்க வேண்டும்.

ஆனால் இந்த <li></li> tag-ஆனது definition list-க்குப் பொருந்தாது. இந்த முறையில் தலைப்பும், அதன் விளக்கமுமாக விவரங்கள் பட்டியலிடப்படுவதால், தலைப்பின் முன்னும் பின்னும் <dt></dt> tags-ம், (dt for definition title) தலைப்புக்கான விளக்கத்தின் முன்னும் பின்னும் <dd></dd> tag-ஐயும் (dd for definition data)பயன்படுத்த வேண்டும்.

இந்த மூன்று முறையிலும் விவரங்கள் பட்டியலிடப்படுவதை பின்வரும் உதாரணத்தில் காணலாம்.

Combined Lists

ஒரு main list-ல் விவரங்களை பட்டியலிடும்போது, அதற்குள் sublist-ஐ உருவாக்குவதே combined listsஎனப்படும். பின்வரும் உதாரண்த்தில் ordered list-ன் கீழ் பட்டியலிடப்பட்டுள்ள Functional Testing எனும் விவரத்தின் கீழ் ஒருசில தகவல்கள் Unordered list முறையில் பட்டியலிடப்பட்டுள்ளதைக் காணலாம். அவ்வாறே Non-functional testing எனும் விவரத்தின் கீழும் தகவல்கள் unordered list முறையில் பட்டியலிடப்பட்டுள்ளன.

இதன் வெளிப்பாடு பின்வருமாறு இருக்கும்.

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments