ஏதோ ஒரு வலி

0
1273

இது வரிகள் அல்ல வலிகள்….
ரொம்ப மோசமான நாள் இன்னைக்கு. ஏதோ கிறுக்கணும் என்னு மனசு சொல்லுது….கிறுக்கிறதுக்கு முன்னமே காகிதத்த கண்ணீர் நனைச்சிடுது. ஒன்னுமே புரியல…ஏதோ ஒருவெறுமை.உயர்ந்த பட்ச விரக்தி…எதையுமே இழக்கலன்னு மூளை சொன்னாலும் பெரிசா எதையோ இழந்திற்ற மாதிரி ஒரு வலி இதயத்த கூறுபோட்டுட்டே இருக்கு….இது என்னன்னு புரிஞ்சுக்கிற அளவுக்கு மனசோ உடலோ தைரியம் இல்லாத மாதிரி……அப்ப அப்ப எதோ ஒரு நம்பிக்கை கானல் நீர் மாதிரி காணம போனதுக்கு அப்புறமும்……

ரொம்ப வருசத்துக்கு அப்புறம் ஏன் பிறந்தம் என்ட கடுப்போட இன்னொரு பிறப்பு வேண்டவே வேண்டாம் என்ட மன்றாட்டம்……பொய்யான உலகம்தான்னு புரிதல் இல்லாத நிலை, கொஞ்சம் மேலெழுந்து உலகத்த புரிஞ்சுகொள்ள பிரியப்படுது…..இங்க உலகத்த கற்றுக்கொடுக்கிறதுக்கு யாருமில்ல என்ட நிலை கூட ரொம்ப பிடித்தமாக தான் இருக்கிறது.தேடல் தேடல் ….தேடி கிடைப்பது தான் மனசுக்கு ஆறுதல்…இன்னமும் இன்னமும் தேடுகிறேன் என்னிடம் இருக்கும் உனக்கான நேசத்தை முழுவதுமாய் கொடுத்துவிடும் வழிகளை…..பாதி தூக்கத்தில முழுச்சிற்று சினுங்கிற குழந்த மாதிரி மனசும் ரொம்ப அடம்பிடிக்குது….விலகட்டும் என்ற நினைப்புகளுக்கு பதிலடி கூட தரமுடியாத துர்ப்பாக்கிய நிலை.கொடுப்பதற்கு ஆயிரம் இருந்தாலும் பெறுவதற்று எதுவுமற்ற மனநிலை(கண்ணீரை தவிர).இங்கு அணைபோட யாருமில்லை ஏன் அரவணைக்கக்கூட எவருமில்லை……

 

 

 

 

 

 

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments