ஒரு துளி புன்னகை….!!

0
2044
PaniZTernopolya🇺🇦 on Twitter

சில வார்த்தைகள்
ஏற்கவும் முடியாமல்
எதிர்க்கவும் முடியாமல்
ஊனமான கவிதைகள்..

என் புன்னகை
மொழிகளையெல்லாம்
நொறுக்கிய புதுமொழி
கண்டதில் நிர்கதியான
கனவுகள்…

என் மகிழ்ச்சியை
மறுவீடு கூட்டிச் சென்ற
உன்னதத் தீக்குளிப்பில்
ஒடிந்துபோன ஞாபகங்கள்…

என் முகவரியை
வெடில் வைத்துத் தகர்த்த
காயங்கள் காய்ந்த பின்பும்
முத்திரைகளாய் இன்றும் சில
இறுக்கங்கள்…

கொஞ்சம் கொஞ்சமாய்
கொல்லத் துடிக்க,
இன்னும் எனக்குள்
உயிர்ப்புடன்
ஒரு துளி புன்னகை…..  

முந்தைய கட்டுரை“மலடியின் தாலாட்டு”
அடுத்த கட்டுரைநேர்த்தி
வானம்பாடி(முஜா)
நான் வானம்பாடி(முஜா) – 'சிறகு முளைத்த வானம்' தான் என் விலாசம். என் மனதில் எழும் எண்ணங்களுக்கு வார்த்தையால் வண்ணம் கொடுத்துப் பார்ப்பவள் நான்…!! அதனால் காகிதங்கள் எனக்கு வசப்பட்டது … வரிகள் வார்த்தைக்குள் சிறைப்பட்டது…!! என் எழுதுகோல் கூட எனை உருக்கி உங்களை கவிதையாக்கிறது தன் கவிதைகளில்..!! என் வேண்டுகோள் எல்லாம் ஒன்றே ஒன்றுதான்.. என் வரிகளில் என்னைத் தேடாதீர்கள்..!!
0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments