ஓடுதல்

0
3357
Shot of people running along the beachhttp://195.154.178.81/DATA/i_collage/pu/shoots/806139.jpg

ஒவ்வொருவரும் உடல் நலத்தைப் பேணிக்  காப்பது என்பது மிகவும் அவசியம். அவ்வாறு உடல் நலத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டுமெனில், உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்று மருத்துவர்களே பரிந்துரைப்பர். அதிலும் ஒரு வாரத்தில் 50 மைல்களுக்கு மேல் ஓடினால், உடலில் உள்ள நல்ல கொழுப்புகளானது அதிகரிப்பதாகவும், கெட்ட கொழுப்பு, ட்ரைகிளிசரைடின் அளவையும் குறைத்து, இதய நோய் ஆபத்தைக் குறைக்கிறது. மேலும்  ரன்னிங்/ஓடுதல் சிறந்த உடற்பயிற்சி மட்டுமல்ல, அது உடலின் எடைக் குறையவும், ஆரோக்கியமாகவும், அழகிய உடலமைப்புடன் இருக்கவும் உதவுகிறது.

Running

நன்மைகள்:

உடல் எடையை குறைக்கும் – உடலின் அதிகப்படியான எடையைக்   குறைக்க வேண்டும் என்று நினைத்தால், ஓடுதல் என்பது சிறந்த பயிற்சி ஆகும். ஏனெனில் ஓடுதல் உடலில் உள்ள கலோரிகளை எரிக்கும்.

எலும்புகளை வலுப்படுத்தும் – ஓடுதல் பயிற்சியைப் பழகி, அதை வழக்கமாக வைத்துக் கொண்டால், உடலில் உள்ள எலும்புகள் மற்றும் தசைகள் வலுப்படும் மற்றும் மூட்டுவலி போன்ற எலும்பு சம்பந்தப்பட்ட நோய்கள் எதுவும் அணுகாது. அது மட்டுமல்லாமல் கால், இடுப்பு பகுதிகளில் உள்ள எலும்பின் பரப்பளவும் அதிகரிக்கும்.

நோய் எதிர்ப்பை அதிகரிக்கும் – ஜாக்கிங் செய்வதைப் பழக்கமாக வைத்துக் கொண்டால் அலர்ஜி, இருமல், காய்ச்சல் போன்ற தொந்தரவுகள் வராது. ரன்னிங் பழக்கத்தை வழக்கமாகக் கொண்டால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, எந்த ஒரு நோயும் கிட்ட நெருங்காது.

மன அழுத்தத்தைப் போக்கும் – ஓடுதல் உடலை ஆசுவாசபடுத்தும் பயிற்சி ஆகும். அதிலும் உடலின் சுகாதாரத்தை அதிகப்படுத்தி, மன அழுத்தத்தைக் குறைக்க உதவும் பயிற்சி ஆகும்.

இதய ஆரோக்கியத்தை அதிகரிக்கும் – ஓடுதல் இதயத்திற்கு செல்லும் இரத்த ஓட்டத்தை சீராக்கி, இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தி, இதயம் சம்பந்தமான நோய்களின் தாக்கத்தில் இருந்து இதயத்தைக் காக்கிறது.

ஆற்றல்/எனர்ஜியை அதிகரிக்கும் – காலையில் விழிக்கும் போது, சோம்பலாக உடலில் ஆற்றல் இல்லாதது போல் உணர்ந்தால், உடனே ஓட ஆரம்பித்து விட வேண்டியது தான்.

செரிமானத்தை அதிகரிக்கும் – ஓடுதல், செரிமானத்தை அதிகப்படுத்தி பசி ஏற்படவும் தூண்டுகிறது. ஓடுதல் பயிற்சியானது கலோரிகளை எரிப்பதால், ஓடி முடித்தவுடன்

Run

அதிக பசி ஏற்படும். ஆகவே ஓடும் முன்பு ஆரோக்கியமான சிற்றுண்டி எடுத்துக் கொள்ளுதல் அவசியம்.

கொழுப்பைக் குறைக்கும் – ஓடுதல் பயிற்சி கொழுப்பை உருவாக்கும் செல்களை சிதைத்து, அழகான உடலமைப்பைப் பெற உதவுகிறது மற்றும் ஜீவத்துவ பரிணாமத்தை ஒழுங்குப்படுத்தித் தேவையற்ற கொழுப்புகளைக் கரைக்க உதவுகிறது.

மூளையின் ஆரோக்கியத்தை அதிகப்படுத்துகிறது – ரன்னிங் உடல் முழுவதும் இரத்த ஓட்டத்தை சீர்படுத்துகிறது. இதனால் மூளைக்கும் இரத்தம் சீரான அளவில் பாய்வதால், மூளைக்கு ஆக்ஸிஜன் மற்றும் தேவையான ஊட்டச்சத்துகள் கிடைக்கின்றன. ஆகவே மூளை ஆரோக்கியமாகவும் இருக்கும்.

நன்றாக தூங்க உதவும் – தூக்கமின்மை பிரச்சனை இருந்தால், பகலில் ஓடுவது நல்ல தூக்கத்தைக் கொடுக்கும். ஏனெனில் ஓடுவதன் மூலம் உடல் களைத்து, இரவில் நிம்மதியான தூக்கம் வர வழிவகுக்கும்.

நீரிழிவு ஆபத்தைக் குறைக்கும் – தொடர்ந்து ரன்னிங் பயிற்சியை மேற்கொண்டால், டைப்-2 நீரிழிவு நோய் ஆபத்தைத் தடுக்கும் என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

மன இறுக்கத்தைக் குறைக்கும் – ஓடுதல் மன இறுக்கம் மற்றும் கவலைகளைக் குறைத்து, நம்மை பற்றி நாமே நன்றாக உணரத் தூண்டும்.

Running

முதுமையைத் தாமதப்படுத்தும் – ஓடுதல் ஆரோக்கியமான எலும்புகளை உருவாக்குவது மட்டுமல்லாமல், மிளிரும் நிறத்தையும் ஏற்படுத்தி, அழகிய தோற்றத்துடன் இளமையாக இருக்கச் செய்யும். மேலும் முதுமை தொடர்பான சிக்கல்களைக் குறைத்து, வலுவான உடலமைப்புடன் இருக்க உதவுகிறது.

கொலஸ்ட்ராலைக் குறைக்கும் – ஓடுதல் பயிற்சி, உடலில் ஆரோக்கியமான கொழுப்புச்சத்து நிலையை பராமரிக்க உதவுகிறது மற்றும் கொழுப்பு சம்மந்தமான நோய்களில் இருந்தும் பாதுகாக்கிறது.

மூட்டு ஆரோக்கியத்தை அதிகப்படுத்துகிறது – ரன்னிங், தசை நார்கள் மற்றும் தசை நாண்களை வலுபடுத்தி, மூட்டு வலிமையை அதிகப்படுத்துகிறது. அதனால் கணுக்கால் மற்றும் முழங்கால் காயங்கள் ஏற்படுவது குறைகின்றது.

ஒருங்கிணைப்பு மேம்படுத்துகிறது – வழக்கமாக ஓடுதல் பயிற்சியைக் கொண்டால், கை கண்களுக்கு இடையே இருக்கும் ஒருங்கிணைப்பை மேம்படுத்துவதோடு, உடல் சமநிலையையும் பராமரிக்க உதவுகிறது.

ஆரோக்கியமான உடல் – பொருத்தமான உடல் கட்டுடன் இருக்க வேண்டும் என்றால் ஓடுதல் (அ) ஜாக்கிங் செய்ய வேண்டும். ஓடுதல் உடற்கட்டைப் பராமரிக்க ஒரு எளிய வழியாகும்.

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments