கண்ணாடிக் குடுவைத்தோட்டம் (Terrarium)

0
457

 

 

 

 

டெராரியம்  (Terrarium)   எனப்படுவது, பல வடிவங்களிலான  ஒளி ஊடுருவும் கண்ணாடிக்குடுவைகளின் உள்ளே  சிறிய தாவரங்களை வளர்க்கும் தோட்டக்கலைத்துறையின் ஒரு புதுமைக்கலையாகும்.  முழுவதும் மூடியிருக்கும்  அல்லது ஒரு புறம் திறந்த குடுவைகளில் இவ்வகையான தோட்டத்தை அமைக்கலாம். மூடிய குடுவைகளின் சுவர்களிலிருந்து செடிகளுக்கு தேவையான வெப்பமும் ஒளியும் கிடைப்பதோடல்லாமல் அதிகபடியான நீர் ஆவியாகி , கூரையில்  நீர்த்துளிகளாகப்படிந்துபின்னர் மீண்டும் செடிகளுக்கே கிடைக்கும் வசதியும் உள்ளது.

முதல் கண்ணாடிக்குடுவைத்தோட்டம் 1842ல்  இங்கிலாந்தைச்சேர்ந்த   நாதனியல் பாக்‌ஷா வார்ட் (Nathaniel Bagshaw Ward) என்னும் பூச்சியியலிலும் தாவர அறிவியலிலும் மிகுந்த ஆர்வமுடைய ஒரு மருத்துவரால் உருவாக்கப்பட்டது. மூலிகைச்செடிகளை சிகிச்சைக்காக  வெளிநாடுகளுக்கு  கண்ணாடிப்பெட்டிகளில் வளர்த்து அனுப்பிய  இவரின் இம்முறை பின்னர்  ஒரு  அழகிய தோட்டக்கலையாக மாறி அனைவராலும் பரவலாக விரும்பப்படும் ஒன்றாகியது

கற்றாழை போன்ற சதைப்பற்றுள்ள தாவரங்களும் (succulents), ஆர்க்கிடுகளும் (Orchids) கள்ளிச்செடிகளூம்  (cacti ) பெரணிகளூம் (ferns) டெராரியம் அமைக்க ஏற்ற தாவரங்களாகும். இவற்றில்  அளவில் மிகச்சிறிய செடிகளே டெராரியம் அமைக்க பொருத்தமானவை

குறைந்த சூரிய ஒளியும்,தண்ணீரும் போதுமென்பதால் இவற்றை வீட்டுக்குள்ளும்,  மேசைகளிலும், அலமாரிகளிலும் வைத்து  எளிதாக வளர்க்கலாம், பல அளவுகளிலும் வடிவங்களிலும் தற்போது இத்தோட்டம் உருவாக்கப்பட்டு வருகின்றது

இத்தோட்டங்களை  அதிக விலைக்கு விற்கவும் வாங்கவும் பலர் ஆர்வமுடன் உள்ளனர். மிக எளிதாக இவற்றை விருப்பமுள்ள யாரும் உருவாக்கலாம்.

 மணல், செம்மண், இயற்கை உரங்கள், பொம்மைகள்,  கூழாங்கற்கல் ஆகியவற்றை குடுவையின் அடிப்பகுதியில் பரப்பி பின்னர் மிகச்சிறிய , மெதுவாக வளரக்கூடிய  பொருத்தமான செடிகளை குடுவைக்குள் வைத்து விருப்பம் போல அழகுபடுத்தி நேராகவோ, சாய்வாகவோ, திறந்தோ, மூடியோ இத்தோட்டத்தை வடிவமைக்கலாம்.

நன்கு பராமரிக்கப்படும் குடுவைத்தோட்டங்களின் தாவரங்கள் பல வருடங்களுக்கு  வைத்துக்கொள்ளளாம்.  வணிக ரீதியாகவும் இத்தோட்டங்கள் பரவலாக விற்பனை செய்யப்படுகின்றன.  பராமரிக்க மிகவும் எளிதான இவ்வகை உட்புற தோட்டத்தை (indoor garden) ,அகலமான குடுவைகள் கண்ணாடிப்பெட்டிகள் மட்டுமல்லாது கண்ணாடி பாட்டில்களிலும் ஆர்வமுள்ளவர்கள்  எளிதில் உருவாக்கலாம்   பரிசளிக்கவும் செய்யலாம் 

 

 

 

 

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments