கர்ப்பகாலத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை

0
1433

ஒரு பெண்ணுக்கு தாய்மை என்பது அளவற்ற மகிழ்ச்சியைக் கொடுக்கிறது. 24/7 வேலை என்கிறோமே, அது போல தாய்மை என்பது இடைவிடாத வேலை. ஓய்வு என்கிற பதத்திற்கே இடமில்லை. ஆனாலும் எந்த ஒரு பெண்ணும் தாய்மையை சுமையாகக் கருதுவதே இல்லை. பத்து மாதங்களும் தன் குழந்தையை சுமப்பதில் ஒரு அலாதியான சுகமாகவே நினைக்கிறாள்.

கர்ப்பம் தரித்த பெண் முதலில் செய்ய வேண்டியது என்னென்ன?
உடனடியாக ஒரு மகப் பேறு மருத்துவரை நாடி, தன்னையும் தன் வயிற்றில் வளரும் குழந்தையையும் எப்படி ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுவது என்று தெரிந்து கொள்ளுவதுதான்.

  • குழந்தை வளருவதால் ஒவ்வொரு மாதமும் கர்ப்பவதியின் எடை அதிகரிக்கும்.. சரியான அளவில் இந்த எடை கூடுகிறதா என்று பார்க்க வேண்டும்.
  • கணவன், மனைவி இருவருடைய குடும்பத்திலும் அப்பாவுக்கோ அல்லது அம்மாவுக்கோ இரத்த அழுத்தம், சர்க்கரை நோய் அல்லது வேறு ஏதாவது பரம்பரை நோய்  இருந்தால் கர்ப்ப காலத்தில் அவை  தாக்காமல் பார்த்துக் கொள்ளுவதும் ஒருவேளை தாக்கினால் பாதுகாத்துக் கொள்ளவும் தெரிந்து கொள்ள வேண்டும்.
  • கர்ப்ப காலத்தில் சில பெண்களுக்கு உயர் இரத்த அழுத்தம், சர்க்கரை நோய் வர வாய்ப்பு இருப்பதால் மருத்துவரிடம் பேசவும். தகுந்த முன்னெச்செரிக்கையுடன் இருந்தால் இந் நோய்களைத் தவிர்க்கலாம்.

உணவுப் பழக்கம்:

தற்போது நீங்கள் உண்ணும் உணவுதான் உங்களுடைய மற்றும் உங்கள் கருவிலிருக்கும் குழந்தையின் ஆரோக்கியத்திற்கு முக்கியமான ஆதாரம் என்பதால் நல்ல சத்தான ஆகாரங்களை உண்ணுதல் அவசியம். புரோடீன், கால்சியம், அயன் (iron), போலிக் ஆசிட், விட்டமின்கள் A,E,C மற்றும்,B வகைகள் மிக முக்கியமாக தினமும் உணவில் தேவையான அளவில் சேர்க்கப்பட வேண்டும்.

கர்ப்ப காலத்தில் பெண்ணின் உடலில் பல மாறுதல்கள் ஏற்படுகின்றன.  ஒரு பெண் இரண்டு முறை கருத்தரித்தால் இரண்டு முறையும் வேறு வேறுவிதமான மாறுதல்கள் ஏற்படும். ஆனால் கர்ப்ப காலத்தில் ஏற்படும் சில மாறுதல்கள் எல்லாப் பெண்களுக்கும் பொதுவானவை.

அவை என்னென்ன என்று பார்ப்போம்:

  1. பெண்ணின் கருமுட்டையும் ஆணின் விந்துவும் இணைந்து உருவான சினை மெது மெதுவே  நகர்ந்து நகர்ந்து கர்ப்பபையை அடைந்து அதனுடைய சுவர்களில் ஒட்டிக்கொண்டு வளர ஆரம்பிக்கிறது.
  2. மாத விடாய் நின்று கர்ப்பம் வளர உதவும் ஹார்மோன்கள் சுரக்க ஆரம்பிக்கின்றன.
  3. கர்ப்பவதியின் எடை கூடுகிறது.
  4. மார்பகங்கள் பெரிதாகின்றன.

கர்ப்ப காலத்தை பொதுவாக மூன்று மூன்று மாதங்களாக பிரிக்கிறார்கள்.

முதல் மூன்று மாதங்கள்: ( 1 – 12 வாரங்கள் வரை)

  • கரு முளை (embryo)  கர்ப்பபையைப் பிடித்துக் கொண்டு வளர ஆரம்பிக்கிறது. அதை சுற்றி நஞ்சு கொடியும் வளரத் தொடங்குகிறது.
  • கரு முளையின் திசுக்கள் வளரத் தொடங்குகின்றன.
  • 5 வது வாரத்தில் கருமுளையில் மூளை, முதுகுத் தண்டு, இதயம் உருவாகிறது.
  • இப்போது கரு முளை மூன்று தளங்களாக இருக்கும். வெளிப்புற அடுக்கிலிருந்து (ectoderm) சருமம், மத்திய மற்றும் சுற்றுப்புற நரம்பு மண்டலம், கண்கள், உட்செவி முதலானவையும் அவற்றை இணைக்கும் திசுக்களும் தோன்றுகின்றன.
  • அடுத்த உட்புற அடுக்கிலிருந்து இரத்த ஓட்டத்திற்கான அமைப்பு,

சில பெண்கள் இந்த முதல் மூன்று மாதங்களில் எடை குறைவதுண்டு. மார்னிங் சிக்னெஸ் என்று சொல்லப்படும் உடல்  அசதி, வாந்தி, மூட்டுக்களில் வலி, வியர்வை முதலியவை பொதுவாக எல்லாப் பெண்களுக்கும் ஏற்படும். வாந்தியும், குமட்டலும் சிலருக்கு நாள் முழுதுமே இருக்கும். அதிக எண்ணெய் இல்லாத உணவை சாப்பிடுவது நல்லது. இந்த மூன்று மாதங்களில் உடல் உஷ்ணம் கூடும். அடிக்கடி சிறு நீர் கழிப்பது, மலக் கட்டு, மிகுந்த அசதி ஆகியவையும் இந்த முதல் மூன்று மாதங்களில் இருக்கும். காரணமில்லாமல் அதீத சந்தோஷம், அதிக கோபம் என்று மாறி மாறி உண்டாவதும் கூட கரு வளர்ச்சிக்கான ஹார்மோன்கள் அதிக அளவில் சுரப்பதால்தான்.

நிறைய பழங்கள், பச்சைக் காய்கறிகள் சாப்பிடுவதும், அதிக அளவில் தண்ணீர் குடிப்பதும் ஆரோக்கியத்திற்கு நல்லது. காபி குடிப்பதை குறைத்துக்கொண்டு, கிரீன் டீ குடிக்கலாம்.

கர்ப்ப காலத்தில் ஒரு பெண் தன்னையும் தன்னை சுற்றியுள்ள இடத்தையும் சுத்தமாக வைத்துக்கொள்ளுவது மிக மிக முக்கியம். சுத்தமான துணிகளை அணியவேண்டும். தினமும் குளிக்க வேண்டும். நன்கு சுத்தப்படுத்தப் பட்ட குடிநீரையே குடிக்க வேண்டும். சுகாதாரமான முறையில் தயார் செய்யப்பட உணவையே உண்ணவேண்டும்.

உணவில் முக்கியமாக DHA (decosa hexaanoic acid) எனப்படும் கொழுப்பு  சத்து அவசியம் இருக்க வேண்டும். கருவிலிருக்கும் குழந்தையின்  மூளை மற்றும்  கண்ணின் விழித்திரை நன்கு உருவாவதற்கு இந்த கொழுப்புச் சத்து இன்றியமையாதது. அதுமட்டுமில்லாமல், குழந்தையின் நோய் எதிர்ப்பு சக்திக்கும், நோய்க் கிருமிகளை வெளியேற்றவும் இந்த கொழுப்புச் சத்து தேவை. உணவில் இருக்கும் இந்த சத்து குழந்தையின் கண் பார்வைக்கும், பிரச்சினைகளை சமாளிக்கும் திறமைக்கும், பொதுவான வளர்ச்சிக்கும் உதவுகிறது. கடல் உணவுகளிலும், கடுகு, கடுகு எண்ணெய், ஆலிவ் எண்ணெய், மெந்தியம், வால் நட்ஸ், ப்ளக்ஸ் சீட்ஸ் (flax seeds) மற்றும் சோயா பீனிலும் இந்த  DHA கிடைக்கிறது. சிறிய அளவில் கீரை வகைகளிலும் காணப் படுகிறது.

நார் சத்து அதிகம் தேவை:

பேறு காலத்தில் நம் இரைப்பை, நாம் உண்ணும் உணவில் இருந்து அதிகமான  சத்துப் பொருட்களை எடுத்துக் கொள்ள வேண்டி சிறிது மெதுவாகவே செயல் படுகிறது. மேலும் கர்ப்பப் பை பெரிதாகிக்கொண்டே இருப்பதால் இரைப்பையை அழுத்துகிறது. இதனால் மலச்சிக்கல் ஏற்படுவது உண்டு. நிறைய நார் சத்து உள்ள காய்கறிகளை குறிப்பாக பீன்ஸ், கொத்தவரங்காய், அவரைக் காய், வாழைத் தண்டு சாப்பிடுவதால் இதனைத் தவிர்க்கலாம்.

கர்ப்பகாலத்தில் ஒரு பெண் கடைப்பிடிக்க வேண்டியவைகள்:

ஒரு பெண்ணுக்கு தாய்மை என்பது அளவற்ற மகிழ்ச்சியைக் கொடுக்கிறது. 24/7 வேலை என்கிறோமே, அது போல தாய்மை என்பது இடைவிடாத வேலை. ஓய்வு என்கிற பேச்சிற்கே  இடமில்லை. ஆனாலும் எந்த ஒரு பெண்ணும் தாய்மையை சுமையாகக் கருதுவதே இல்லை. பத்து மாதங்களும்  குழந்தையை தன் வயிற்றில் சுமப்பதை ஒரு அலாதியான சுகமாகவே நினைக்கிறாள்.

கர்ப்பம் தரித்த பெண் முதலில் செய்ய வேண்டியது என்னென்ன?

உடனடியாக ஒரு மகப் பேறு மருத்துவரை நாடி,  தன்னையும் தன் வயிற்றில் வளரும் குழந்தையையும் எப்படி ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுவது என்று தெரிந்து கொள்ளுவதுதான்.

 

  • குழந்தை வளருவதால்   ஒவ்வொரு மாதமும் கர்ப்பவதியின் எடை அதிகரிக்கும்.. சரியான அளவில் இந்த எடை கூடுகிறதா என்று பார்க்க வேண்டும்.
  • கணவன், மனைவி இருவருடைய குடும்பத்திலும் அப்பாவுக்கோ அல்லது அம்மாவுக்கோ இரத்த அழுத்தம், சர்க்கரை நோய் அல்லது வேறு ஏதாவது பரம்பரை நோய்  இருந்தால் கர்ப்ப காலத்தில் அவை  தாக்காமல் பார்த்துக் கொள்ளுவதும் ஒருவேளை தாக்கினால் பாதுகாத்துக் கொள்ளவும் தெரிந்து கொள்ள வேண்டும்.
  • கர்ப்ப காலத்தில் மட்டும் சில பெண்களுக்கு உயர் இரத்த அழுத்தம், சர்க்கரை நோய் வர வாய்ப்பு இருப்பதால் மருத்துவரிடம் பேசவும். தகுந்த முன்னெச்செரிக்கையுடன் இருந்தால் இந்நோய்களைத் தவிர்க்கலாம்.
  • அலர்ஜி, ஜலதோஷம், சளி முதலியவை பொதுவாக வரக் கூடியவை. சுய வைத்தியம் செய்து கொள்வதை விட்டு விட்டு மருத்துவரை நாடுவது நல்லது.

கர்ப்ப காலத்தில் பெண்ணின் உடலில் பல மாறுதல்கள் ஏற்படுகின்றன.  ஒரு பெண் இரண்டு முறை கருத்தரித்தால் இரண்டு முறையும் வேறு வேறுவிதமான மாறுதல்கள் ஏற்படும். ஆனால் கர்ப்ப காலத்தில் ஏற்படும் சில மாறுதல்கள் எல்லாப் பெண்களுக்கும் பொதுவானவை.

அவை என்னென்ன என்று பார்ப்போம்:

  1. மாத விடாய் நின்று கர்ப்பம் வளர உதவும் ஹார்மோன்கள் சுரக்க ஆரம்பிக்கின்றன.
  2. கர்ப்பவதியின் எடை கூடுகிறது.
  3. மார்பகங்கள் பெரிதாகின்றன.

கர்ப்ப காலத்தை பொதுவாக மூன்று மூன்று மாதங்களாக பிரிக்கிறார்கள்.

சில பெண்கள்  முதல் மூன்று மாதங்களில் (1 – 12 வாரங்கள்) எடை குறைவதுண்டு.  மார்னிங் சிக்னெஸ் என்று சொல்லப்படும் காலையில் எழுந்திருக்கும்போதே உடல்  அசதி, வாந்தி, மூட்டுக்களில் வலி, வியர்வை முதலியவை பொதுவாக எல்லாப் பெண்களுக்கும் ஏற்படும். வாந்தியும், குமட்டலும் சிலருக்கு நாள் முழுதுமே இருக்கும். அதிக எண்ணெய் இல்லாத உணவை சாப்பிடுவது நல்லது. இந்த மூன்று மாதங்களில் உடல் உஷ்ணம் கூடும். அடிக்கடி சிறு நீர் கழிப்பது, மலக் கட்டு, மிகுந்த அசதி ஆகியவையும் இந்த முதல் மூன்று மாதங்களில் இருக்கும். காரணமில்லாமல் அதீத சந்தோஷம், அதிக கோபம் என்று மாறி மாறி உண்டாவதும் கூட கரு வளர்ச்சிக்கான ஹார்மோன்கள் அதிக அளவில் சுரப்பதால்தான்.

இரண்டாவது 3 மாதங்களில் (13 – 28 வாரங்கள்) வாந்தியும், குமட்டலும் ஓரளவுக்கு நின்றிருக்கும். ஆனால் பல்வேறு விதமான அறிகுறிகள் உண்டாகும். முதுகு, அடிவயிறு, தொடை முதலான பாகங்களில் வலி ஏற்படலாம். வயிறு பெரிதாவதால் சருமத்தில் கோடுகள் ஏற்படும். உள்ளங்கை, உள்ளங்கால்கள், வயிறு ஆகிய பாகங்களில் அரிப்பு ஏற்படும். சில சமயங்களில் கை மரத்துப்போவது உண்டு. குதிகால், கை விரல்கள், முகம் முதலிய பாகங்களில் வீக்கம் தோன்றக்கூடும். கருவறைக்குள் குழந்தை அசையத் தொடங்குவதும் இந்த கால கட்டத்தில் தான்.

மூன்றாவது 3 மாதங்களில் (29 – 40 வாரங்கள்muthal ஆறு மாதங்களில் ஏற்பட்ட அறிகுறிகள் பல இப்போதும் தொடரக் கூடும். புதிதாக மூச்சு விடுவது சிறிது சிரமமாக இருக்கும். நெஞ்செரிச்சல் உண்டாகும். குழந்தை வளர்ந்து கொண்டே போவதால் கர்ப்பப் பை விரிவடைந்து மற்ற உள்ளுறுப்புகளை அழுத்துகிறது. இரவுத் தூக்கம் சற்று குறையும்.

சுகாதாரம்:

கர்ப்ப காலத்தில் ஒரு பெண் தன்னையும் தன்னை சுற்றியுள்ள இடத்தையும் சுத்தமாக வைத்துக்கொள்ளுவது மிக மிக முக்கியம். சுத்தமான துணிகளை அணியவேண்டும். தினமும் குளிக்க வேண்டும். நன்கு சுத்தப்படுத்தப் பட்ட குடிநீரையே குடிக்க வேண்டும். சுகாதாரமான முறையில் தயார் செய்யப்பட உணவையே உண்ணவேண்டும்.

உணவுப் பழக்கம்:

தற்போது நீங்கள் உண்ணும் உணவுதான் உங்களுடைய மற்றும் உங்கள் கருவிலிருக்கும் குழந்தையின் ஆரோக்கியத்திற்கு முக்கியமான ஆதாரம் என்பதால் நல்ல சத்தான ஆகாரங்களை உண்ணுதல் அவசியம். புரோடீன், கால்சியம், அயன் (iron), போலிக் ஆசிட், விட்டமின்கள் A,E,C மற்றும்,B வகைகள் மிக முக்கியமாக தினமும் உணவில் தேவையான அளவில் சேர்க்கப்பட வேண்டும்.

நிறைய பழங்கள், பச்சைக் காய்கறிகள் சாப்பிடுவதும், அதிக அளவில் தண்ணீர் குடிப்பதும் ஆரோக்கியத்திற்கு நல்லது. காபி குடிப்பதை குறைத்துக்கொண்டு, கிரீன் டீ குடிக்கலாம்.

உணவில் முக்கியமாக DHA (decosa hexaanoic acid) எனப்படும் கொழுப்பு  சத்து அவசியம் இருக்க வேண்டும். கருவிலிருக்கும் குழந்தையின்  மூளை மற்றும்  கண்ணின் விழித்திரை நன்கு உருவாவதற்கு இந்த கொழுப்புச் சத்து இன்றியமையாதது. அதுமட்டுமில்லாமல், குழந்தையின் நோய் எதிர்ப்பு சக்திக்கும், நோய்க் கிருமிகளை வெளியேற்றவும் இந்த கொழுப்புச் சத்து தேவை. உணவில் இருக்கும் இந்த சத்து குழந்தையின் கண் பார்வைக்கும், பிரச்சினைகளை சமாளிக்கும் திறமைக்கும், பொதுவான வளர்ச்சிக்கும் உதவுகிறது. கடல் உணவுகளிலும், கடுகு, கடுகு எண்ணெய், ஆலிவ் எண்ணெய், மெந்தியம், வால் நட்ஸ், ப்ளக்ஸ் சீட்ஸ் (flax seeds) மற்றும் சோயா பீனிலும்இந்த  DHA கிடைக்கிறது. சிறிய அளவில் கீரை வகைகளிலும் காணப் படுகிறது.

நார் சத்து அதிகம் தேவை:

பேறு காலத்தில் நம் இரைப்பை, நாம் உண்ணும் உணவில் இருந்து சத்துப் பொருட்களை முழுமையாக எடுத்துக் கொள்ள வேண்டி சிறிது மெதுவாகவே செயல் படுகிறது. மேலும் கர்ப்பப் பை பெரிதாகிக்கொண்டே இருப்பதால் இரைப்பையை அழுத்துகிறது. இதனால் மலச்சிக்கல் ஏற்படுவது உண்டு. நிறைய நார் சத்து உள்ள காய்கறிகளை குறிப்பாக பீன்ஸ், கொத்தவரங்காய், அவரைக் காய், வாழைத் தண்டு சாப்பிடுவதால் இதனைத் தவிர்க்கலாம்.

வேலைக்குச் செல்லும் பெண்கள் கவனிக்க வேண்டியது:

குழந்தையை சுமப்பது வேண்டுமானால் சுகமான சுமையாக இருக்கலாம். ஆனால் வேலை பளுவையும் சேர்த்து சுமப்பது என்பது கொஞ்சம் கஷ்டம்தான். என்ன செய்யலாம்?

  • இரவுப் பணியில் இருப்பவர்கள் சிறிது காலத்திற்கு காலை வேளைக்கு மாற்றிக் கொள்ளலாம். நிறைய ஓய்வு தேவைப் படுவதாலும், இரவு தூக்கம் கர்ப்பிணிப் பெண்ணுக்கு மிக முக்கியம் என்பதாலும் உயர் அதிகாரியிடம் பேசி வேலை நேரத்தை மாற்றி கொள்ளலாம்.
  • சில மாதங்களுக்கு அதிக மன அழுத்தம் கொடுக்காத, சிறிது சுலபமான வேலையை கொடுக்குமாறு உங்கள் மேலதிகாரியிடம் கேட்டுக் கொள்ளலாம்.
  • உங்களுக்கு  வருடத்தில் எத்தனை விடுமுறை நாட்கள் உண்டோ அவற்றை சேமியுங்கள். குழந்தை பிறந்தபின் எடுக்கலாம். குழந்தையுடன் அதிக நேரம் செலவழிக்கவும், உங்கள் ஆரோக்கியத்தை மறுபடி சீர் படுத்திக் கொள்ளவும் இந்த நாட்கள் உதவும்.
  • நீங்கள் கர்ப்பம் தரித்திருப்பதை ஆரம்ப நாட்களிலேயே உங்கள் பணி இடத்தில் மேலதிகாரியிடம் சொல்லுவது நல்லது. அடுத்த சில மாதங்களிலேயே நீங்கள் விடுமுறையில் போவது தெரிந்து குறைந்த நாட்களில் முடிக்கும்  படியான வேலையை அவர் உங்களுக்கு கொடுக்க சம்மதிப்பார்.
  • உங்களது இடத்தில் இன்னொருவரைத் தயார் செய்வதும் அவருக்கு சுலபமாக இருக்கும்.
  • மிகவும் சிரமமாக இருக்கும் நாட்களில் உங்களுடன் கூட வேலை செய்பவர்களின் உதவியை நாடுங்கள்.
  • பேருந்துகளில் வேலைக்குச் செல்லுபவராக இருந்தால் சற்று முன் கூட்டியே பேருந்து நிலையத்திற்கு சென்று விடுங்கள். இதனால், அதிக கூட்டம், அதிக நேரம் பேருந்திற்காக நிற்பது போன்றவற்றை தவிர்க்கலாம்.
  • பேருந்திலிருந்து இறங்கும் போதும் ஏறும்போதும் அதிக எச்சரிக்கைத் தேவை. இரண்டு சக்கர வாகனத்தை ஓட்டுவது, அல்லது பின்னால் உட்கார்ந்து செல்வதை தவிருங்கள்.
  • நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமருவதைத் கூடிய மட்டும் தவிர்த்து விடுங்கள். அலுவலகத்தில் அவ்வப்போது சிறிது நடப்பது நல்லது.

உடைகள்:

மிகவும் இறுக்கமான உள்ளாடைகள் அணிய வேண்டாம். சற்று பெரிய அளவில் ரெடிமேட் ஆடைகளை வாங்குங்கள் . பருத்தி ஆடைகள் அணிவது உத்தமம்.

குழந்தைப் பேறு ஒரு பெரிய வரம். கர்ப்பம் தரிப்பது என்பது ஒரு நோய் அல்ல. என்னென்ன செய்யவேண்டும் என்னென்ன செய்யக் கூடாது என்று சரியாகத் தெரிந்து கொண்டு நடந்தால் குழந்தையும் தாயும் மிக ஆரோக்கியமான வாழ்வை வாழலாம்!

 

 

Source : வலைப்பகிர்வு

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments