குளிர்சாதனப் பெட்டியில் வைக்கக்கூடாத பொருட்கள் எவை?

0
1232

இன்றைய சூழலில் நம்மில் பலர், வாரம் ஒரு முறை காய்கறிகள், கனிகள் வாங்கி மொத்தமாக குளிர்சாதனப்பெட்டியில் சேமித்து வைக்கிறோம். பின்னர் தேவைக்கேற்ப அதனைப் பயன்படுத்துகிறோம். பொதுவாக குளிர்சாதனப்பெட்டியில் காய்கறிகளோ, பழங்களோ வைப்பது நல்லது கிடையாது. மூன்று நாட்களுக்குப் பின் காய்கனிகள் வாடத் தொடங்கி விடும். அதனால் சுவையில் வேறுபாடு வரலாம். இவ்வளவு ஏன்இகாய்கறிகளின் வேதியியல் கட்டமைப்பு கூட மாறுபட வாய்ப்புள்ளது.முடிந்தவரை காய்கனிகளை குளிர்சாதனப் பெட்டியில் வைப்பதை தவிர்க்கவும். கீழே குறிப்பிடும் பொருட்களை நிச்சயம் குளிர்சாதனப்பெட்டியில் வைக்கக் கூடாது.

1. வெங்காயம் :

வெங்காயத்தைக் குளிர்சாதனப்பெட்டியில் வைப்பதால், சீக்கிரம் அழுகி விடும். பாதி அரிந்த வெங்காயத்தை வைக்க வேண்டுமெனில், மூடி போட்ட கிண்ணத்திலோ, பாத்திரத்திலோ வைக்க வேண்டும். ஏனெனில், வெங்காயம் குளிர்சாதனப் பெட்டியில் உள்ள நுண்ணுயிரிகளை(bacteria) உள்வாங்கும் தன்மை கொண்டது.

2. பூண்டு:

பூண்டினை நன்கு காற்றோட்டம் உள்ள இடத்தில் வைப்பதே சிறந்தது. பூண்டின் ஆயுட்காலம் குளிர்சாதனப்பெட்டியில் வைப்பதால் குறைந்து விடுகிறது. குளிர்சாதனப்பெட்டியில் தோலுரித்த பூண்டினை காற்று புகாத பாத்திரத்தில் வைத்து பயன்படுத்தலாம்

3. உருளைக்கிழங்கு:

உருளைக்கிழங்கைக் குளிர் சாதனப்பெட்டியில் வைப்பதால் அதன் இயற்கை தன்மை, கட்டமைப்பு மாறிவிடுகிறது. இது சக்கரைவள்ளிக்கிழங்கு, கருணைக்கிழங்கு போன்ற அனைத்து கிழங்கு வகைகளுக்கும் பொருந்தும்.

4. தக்காளி :

தக்காளியைக் குளிர்சாதனப் பெட்டியில் வைப்பதால் அதன் உயிரணுக்கள் பாதிக்கப்படுகிறது. தக்காளியின் சுவையிலும் அது மாற்றத்தை ஏற்படுத்துகிறது.

5. உலர்ந்த பழங்கள் (dry fruit):

உலர்ந்த பழங்களைக் குளிர் சாதனப்பெட்டி அல்லாது, காற்று புகாத பாத்திரத்தில் வைத்தாலே அதன் ஆயுட்காலம் கூடும். மேலும் அதன் தன்மையும் மாறாமல் இருக்கும்

6. பழங்கள்:

முன்பு கூறியது போல், பழங்களை அறை வெப்பநிலையிலே வைப்பது பரிந்துரைக்கப்படுகிறது. அதனால் அதன் தன்மையை இழக்காமல் பாதுகாக்க முடியும்.

Source : வலைப்பகிர்வு

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments