கோலாகலம்

0
533
1630562089295-0e30843d
மன்றத்தில் தோன்றியவள்
எந்தன் உயிர் காதலியோ
காண்பவர் மனம் மயக்கும்
காந்த விழி காரிகையோ
காரிருள் கூந்தல்
கழல் வரை ஊசலாட
வாடாத கொடி மல்லி சேர்ந்தே ஆட
மாசற்ற மதி வதனம்  அதில்
மது போதை தரும் மரகத இதழ்கள்
அழக்குக்கே களி சேர்க்கும்
ஆபரண அலங்காரங்கள்
பணி பெண்கள் புடை சூழ
மங்கள முழக்கத்துடன் பல்லக்கில்
மணாளன் என்னை கரம் பிடிக்க
வந்தாள் மாட வீதியிலே…

வேங்கை தன் வீரம் கொண்ட – நால்
வேதம் கூறும் மாமன்னன்
ஆண்களே ஆசையுறும்
அழகின் மொத்த பேரிளவல்
மக்கள் மனதை ஆளும்
நீதி வழுவா நெறி வேந்தன்
இம்மாசறு மாதின் கரம் பிடிக்க
பலம் கொள் களிரின் மேல்
படை பட்டாளம் புடை சூழ
ஊர்கோலம் வருகின்றான்
ராஜ வீதியிலே…

இணையற்ற இவ் ஜோடி
ஒன்றாகும் இந்நாளை
பண்டிகையாய் கொண்டாடுது
மக்கள் கூட்டம்
வீதியெங்கும் தோரணமாம்
வாசலெங்கும் பூரண கும்பமாம்
வர்ணங்கள் தூவி
வானவேடிக்கைகள் முழங்க
நாடே இன்பத் திளைப்பினிலாட
பன்னாட்டு வேதியர்கள் மந்திரம் ஓதிட
மங்கள வாத்தியங்கள் சேர்ந்தே ஒலித்திட
திங்களை சூடியோன் நல்லாசியுடன்
திருமகளை கரம் பிடித்தான்
தென்னாட்டு வேந்தன்!

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments