சந்தன மரம்

0
2244
  • சந்தனம் என்பது மருத்துவப் பயன்பாடுடைய ஒரு மரமாகும். சந்தனக் கட்டையைச் சந்தனக் கல்லில் தேய்த்து வரும் சாந்தை கோடை வெப்பத்தைத் தணிக்க மார்பில் பூசிக்கொள்வது இந்திய மக்களின் வழக்கம் ஆகும்.
  • இந்திய மரங்களில் மிகவும் விலையுயர்ந்த மரம் சந்தனமரம். இதன் தாயகம் இந்தியா ஆகும். இந்தியாவின் கிழக்குப் பகுதி காடுகளில் மிகுந்து காணப்படுகிறது. குறிப்பாக கர்நாடகாவில் விளைகிறது. இது சுமாரான உயரத்திற்கு வளரும் இயல்பை கொண்டது. சந்தனத்தின் வளர்ந்த மரம் வாசனை நிரம்பியது ஆகும்.
  • மரத்தின் வைரம் பாய்ந்த கட்டைப் பகுதி எண்ணெய்ச் சத்து நிரம்பியது. இதிலிருந்து எடுக்கப்படும் ‘அகர்’ என்னும் எண்ணெய் மருத்துவப் பண்புகள் கொண்டவையும், சருமத்திற்கு குளிர்ச்சியளிக்கக் கூடியவையும் ஆகும்.மரத்தின் வைரம் பாய்ந்த நடுப்பகுதியும், வேர்களும் மிகுந்த மணம் கொண்டவையாகும்.
 

Sandalwood tree

  • சந்தன மரம் 12 முதல் 40 மீட்டர் உயரம் வரை வளரக் கூடியது. சந்தனமரம் தனித்து வளராது. வேறு மரத்திற்கு அருகில்தான் வளரும். மற்ற மரத்தின் வேரிலிருந்து தனக்கு வேண்டிய ஊட்டச் சத்துகளைப் பெற்றுக் கொள்கிறது. மரம் வளர்ந்து மூன்று ஆண்டுகளுக்கு பிறகு பழங்களை தருகிறது.
  • வெள்ளை சந்தன மரம் மரபணு சோதனை மூலம் மட்டுமே கண்டுபிடிக்கப்படக் கூடிய சாதாரண சந்தன மரங்களுள் சிறப்பு வாய்ந்த ஒன்று. பல லட்சம் மரங்களுக்கிடையில் ஒன்று அல்லது இரண்டு மரங்கள் மட்டுமே வளரும். இம்மரத்தில் செய்யப்படக்கூடிய முருகன், சிவன், வேல் முதலான சிலைகள் சிறப்பானவையாகக் கருதப்படுகின்றன.
  • உடல், மன ஆரோக்கியத்திற்கான பல பதிவுரிமை செய்யப்பட்ட மருந்துகள் சந்தனத்திலிருந்து தயாரிக்கப்படுகின்றன. கூந்தல் தைலங்கள், சோப்புகள், நறுமணப் பொருட்கள் என எல்லாவற்றிலும் சந்தனத்தின் தேவை இன்றியமையாதது.
0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments