சுத்தமான தக்காளி ஜூஸ் (Fresh Tomato Juice)

0
2159

தேவையான பொருட்கள்:

பழுத்த தக்காளி – 6

சர்க்கரை – தேவையான அளவு

எலுமிச்சை சாறு – 2 டீஸ்பூன்

உப்பு – ஒரு சிட்டிகை

ஐஸ் வாட்டர் – சிறிது

நன்மைகள்: நன்கு பழுத்த தக்காளி இரண்டு (அ) மூன்றை எடுத்து, சிறிது சிறிதாக அரிந்து, மிக்ஸியிலிட்டு, ஜூஸ் எடுத்து வெறும் வயிற்றில் காலையில் பருகி வந்தால்  தோல் சம்பந்தமான நோய்கள் குணமாகும்.

Fresh Tomato Juice
Fresh Tomato Juice

செய்முறை:

  • ஒரு பாத்திரத்தில்  தக்காளி எடுத்து உள்ளே இருக்கும் தண்டை நீக்கி, சூடான தண்ணீரில் அவற்றை போட்டு வேக விடவும்.
  • சிறிது நேரம் கழித்து தக்காளியைக் குளிர்ந்த நீரில் போட்டு தோல் உரித்து ஜாரில் போட்டு மசிக்கவும்.
  • பின் அவற்றை வடிக்கட்டி ஐஸ் வாட்டர், சர்க்கரை, உப்பு, எலுமிச்சைச் சாறு சேர்த்து கலந்து பரிமாறவும்.

உடலுக்கு குளிர்ச்சியும், புத்துணர்ச்சியும் தரக்கூடியது தக்காளி. தினமும் தக்காளி ஜூஸ் குடித்து வந்தால் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம்.

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments