ஜன்னலோர பயணம்

0
1558
IMG-20200705-WA0169

மெல்ல வீசும் காற்றில் மெதுவாய் கரைந்தே சென்றேன்
ஜன்னலோரம் நான் அமர்ந்திருக்க
என்னுள் அலைமோதிக் கொண்டு நினைவுகள் மீண்டும்
என்னை முத்தம் இட தொலைந்தே போனேன்
நானும் காற்றோடு

இயற்கை எழில் கொஞ்சும் என்னோடு காதல் கதை பேச
காற்றின் அசைவில் மரங்களும் இன்னிசை பாட
என் கண்களோ காணாமல் போனது
என்னுள் நினைவுகள் அலைமோத ஜன்னலோரம் மீண்டும்
எனக்கு மீட்டிப் பார்க்க சொல்கிறது உன் நினைவுகளை

சில்லென்ற காற்றும் சிதறிவிடும் உன் சிரிப்பும்
சிக்கித்தவித்த வேளை அது
ஜன்னலோரத்தில் உன் கருங்கூந்தல் அசைய
என் கண்களோ உன்னை புகைப்படம் எடுக்க
தனிமையில் அமர்ந்து இருக்க
தயக்கத்தோடு நான் உன்னை வந்து நெருங்க
இருவரின் முதல் பார்வையிலும்
பரிமாற்றம் அடைந்தது அல்லவா நம் காதல்

கண்களும் பேசும் என அறிந்து கொண்டோம்
மௌனமாய் இமைகள் பேச
மூச்சுக்காற்றில் நீ பதில் சொல்ல
இதய பள்ளத்தாக்கில் முந்நூறு கவிதைகள்
நான் முணு முணுக்க
கண்ணுக்கு எட்டும் தூரத்தில் ஜன்னல் வழியே
மலைத்தொடர்கள்
பகுத்தறிவு அற்ற நாமும் பதறி துடித்தோம் அல்லவா
முதல் முதலாய் மெதுவாகக் கொல்லும் விஷத்தை அருந்தி
இவ்வுலகில் கிடைக்காத சொர்க்கத்தில் வாழ்ந்த
அந்த அழகிய நாளில் காலம் கடந்து சென்றாலும்
என் கவிதைகள் என்னை விட்டு கரைந்து சென்றாலும்
ஜன்னலோரம் நான் அமர்ந்து இருக்க
நீ என்னோடு இருப்பதாகவே உணரச் செய்து
உன் நினைவுகளை மீட்டிப் பார்க்கிறது
இந்த ஜன்னலோர பயணம்

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments