தாயானவள் என் தமிழ்….

0
824

 

 

 

 

எம்மொழி கொண்டும் கவிதை
புனைந்தெழுத முயன்றாலும்;
என்மொழி செம்மொழி போல்
எதுவொன்றும் இனிக்காதே;

அகத்தியன் கண்ட தமிழ்
கம்பன் புரண்ட தமிழ்;
குமரிக்கண்டம் வாழ்ந்த என் மூதாதை
தொட்டிலிட்டு மகிழ்ந்த குழந்தை தமிழ்;

அடி காணா ஆழமிவள்
என் அன்னைக்கு அன்னையவள்;
சொலற்கரிய சொல்லிற்க்கும்
வியப்பூட்டும் கருத்துள்ளாள்;

கற்பனையில் என் தாயவளால்
கவி வடிக்க முனைந்தாலும்;
நிஜங்களை போல் அழகாக்குகிறாள்
நிமிடங்களில் என் மொழியியலாள்;

என் உள்ளத்தினுள்ளே உயிராகி
ஊற்றாகி உணர்வான தமிழே;
பண்ணாகி பாவாகி பூவாகி நீயும்
என்னுள் தீயாகி எரியும் தாயே;

புண்ணாகி புழுவாகி நெழிந்தாலும் கூட
மண்ணோடு மண்ணாகி மடிந்தாலும் கூட
என் ஆவி உன்னோடு ஒன்றாக வேண்டும்
அம்மா உன் மார் மீது தமிழுண்ண வேண்டும்,

உன்னை மட்டும் உயிராய் கொள்வேன்
எம்மொழி எதிர்ப்பினும் உன்னால் வெல்வேன்………………

 

 

 

 

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments