தொலைத்துவிட்டேன் நான் உன்னை!!!

0
1648

 

 

 

 

தொலைந்து விட்டேன் நான் 
என் உயிருக்கு நிகராக நினைத்த,பார்த்த, நேசித்த
ஒன்றைத் தொலைத்து விட்டேன்
என்னுடைய கவனயீனம் தான் அது……..

என் உயிரே நீ  தான் என்று நினைத்திருந்தேன்
பிரியவே கூடாதென்று ஆசைப்பட்டிருந்தேன்
வாழ்நாளை உன்னோடு கழிக்கவே ஆவல் கொண்டிருந்தேன்
ஏனோ இன்று உன்னைத் தொலைத்து விட்டேன்…..

நீ இல்லாமல் சிலநாள்
பிரிந்திருக்க முடிந்த எனக்கு 
உன்னை நினைக்காமல்
ஒரு நொடி கூட இருக்க இயலவில்லையடி 
இன்று இழந்து தவிக்குதடி என் மனம் தன் உயிரிலும் மேலான உன்னை …….

தொலைத்து விட்டேன் நான் 
உன்னைத் தேடித் தேடிக்  களைத்தும்
இன்னும் உன்னைத்  தேட துடிக்கிதடி என் மனம்
கண்ணீரண்டும்  வடிக்குதடி வெந்நீர்க் குளம்……

தேடும் வழியில் விழி வைத்து நான் கண்ட 
சிரமங்களும்,துன்பங்களும்,வேடிக்கை தரும் வேதனைகளும்
சொன்னால் புரியாது,புரிய வைக்கவும் முடியாது,
உன்னால் புரிந்து கொள்ளவும்  இயலாது…….

அதிக கோபம்
அதீத கவலை
அடிக்கடி யோசனை
இன்பமில்லை
புன்னகையில்லை
சிரித்துப் பேச முடியவில்லை
தவிக்கிறது என் உள்ளம்
தவம் கிடக்கிறது உன்னிடம்…….

மற்றவர் தொலைத்தவற்றைக் கண்டு 
சேர்க்கத் தெரிந்த எனக்கோ ,
ஏன் நான் தொலைத்த உன்னைத் 
தேடிப் பிடிக்க முடியவில்லை
நான் தான் தொலைத்து விட்டேனா
இல்லை நீயாக தொலைந்து விட்டாயா……???

உன் அசைவின் அர்த்தம் புரிய முடிந்த எனக்கு
ஏனோ உன் பிரிவின் அர்த்தம் அறிய முடியவில்லை
என் வார்த்தைகளின் வலியே புரியாத உனக்கு
என் அன்பின் அருமை
கண்ணீரின் ஆழம் என்று புரியும்…….?

நாள் முழுவதும் 
என்னை நினைத்திருந்த உனக்கு
என்று என்னை நினைக்க மறந்தாய் என்று மறந்திருக்கும்
தப்பில்லை கண்ணே,
தவறேதும்  நீ செய்யவில்லை 
உன்னைத்  தண்டிக்க எனக்கோ உரிமையில்லை……

பரவாயில்லை
பிரிவென்பது, நினைவினதும் உறவினதும் துவக்கமே தவிர 
அன்பின் முடிவல்ல
நாம் பிரிந்திருக்கவில்லை என்றால் ,
உன் மீது நான் கொண்ட வெறித்தனதமான அன்பின் ஆழத்தை
நானே  அறிந்திருக்க மாட்டேன் இன்றுவரை……

தொலைத்துவிட்டேன் நான் உன்னை
அந்நொடியே தொலைந்து விட்டேன் நான் உன்னில்…………

 

 

 

 

 

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments