நடைபயிற்சி – Walking

0
3175

நடைப்பயிற்சி என்பது நோயின்றி வாழ மிகவும் முக்கியமான ஓரு செயல்பாடாகும். உடற்பயிற்சி என்பது நகரத்து மக்களிடம் ஓரு நவீன பழக்கமாக மாறி வருகிறது. இன்னும் பலர் உடற் பயிற்சி மையம் செல்ல இயலவில்லை. எனினும், சைக்கிள் ஓட்டுதல் அல்லது நடந்து செல்வதனையோ கடைபிடிக்கின்றனர்.

சீனா, நெதர்லாண்ட், ஜப்பான் போன்ற நாடுகளில் வசதி இருந்தும்  கூட, நடந்து செல்வது சைக்கிளில் செல்வதனையே பழக்கபடுத்திக் கொண்டுள்ளனர். நடைப்பயிற்சி என்பது உடற்பயிற்சிகளில் ஒன்றாகும்.

நடைப்பயிற்சி எல்லா வயதினருக்கும் ஏற்ற ஒன்றாகும். ஒவ்வொரு முறையும் படிகளைப் பயன்படுத்தி ஏறி, இறங்குதல், வீட்டு வேலை செய்தல்  மூலமாக நடைப்பயிற்சியின் தேவையை சமன் செய்துக்கொள்ளாலாம். நடைப்பயிற்சியின் போது உடலிலுள்ள எல்லாத் தசைப்பகுதிகளும் இயங்குவதால் உடலுக்கு அதிகமான ஆக்ஸிஜன் தேவைப்படுகிறது. இதனால் மூச்சை சற்று அதிகப்படுத்துகிறோம். இரத்த சுழற்சியும் உடலின் எல்லா பாகங்களுக்கும் இயக்கத்தை அதிகபடுத்தி பின் சம நிலைக்கு வருகிறது. தொடர்ந்து நடைப்பயிற்சி செய்வதால் உடலில் தேவைக்கதிகமான எடை குறைகிறது. உடலிலுள்ள மூட்டுகளை பலப்படுத்துகிறது.

முதுமை அடைந்தவர்கள் கூட ஆரோக்கியமாக தங்களின் இயல்பான வேலைகளைச் செய்துகொள்ளும் அளவு ஆற்றல் அதிகரிக்கிறது.

நடைபயிற்சி துவங்கும் முன்பு: 

  • அதிகாலை நடப்பது நல்லது.
  • வெறும் வயிற்றில் நடக்கக் கூடாது.
  • ½ லி தண்ணீர் குடித்துவிட்டுத்தான் நடக்க ஆரம்பிக்க  வேண்டும்.
  • தளர்வான உடைகள் அணிந்து இருத்தல் அவசியம்.

நடைபயிற்சி மேற்கோள்ளும் இடம்:

    சுற்று சூழல் பாதிப்பில்லாத, காற்றோட்டமுள்ள இடம், மக்கள் நெருக்கடி இல்லாத பாதையாக இருத்தல் மிகவும் நல்லது. பூங்கா, மைதானம், பள்ளி-கல்லூரி மைதானம், கடைத்தெருக்கள்  போன்ற  இடங்களைத் தேர்வு செய்துக் கொள்வது நல்லது.

Slow Walking

நடைபயிற்சி செய்யும் முறை:

 

  • நெஞ்சை நிமிர்த்தி முன்னோக்கிப் பார்த்தவராக (தரையை பார்க்காமல் இருபது அடி முன்னோக்கியவாறு) நடக்க வேண்டும்.
  • நெஞ்சை உயர்த்தியவாறு தோள்களைச் சாதாரணமாகவும் கைகளைத்  தளர்வாகவும் வைத்து நடத்தல் வேண்டும்.
  • அடி வயிற்றைக் கெட்டியாகவும் உறுதியாகவும் வைத்த நிலையில் முதுகைச்  சமமாக நிமிர்த்தியவாறு உடலைச் சற்றே முன்புறம் சாய்ந்தவாறு நடக்க வேண்டும்.
  • ஓரே நேர்கோட்டில் நடப்பதை போலக் கற்பனை செய்துக் கொண்டு காலடிகளை அருகருகே வைத்து விரைவாக நடக்க வேண்டும்.
  • இயல்பாக சுவாசித்து, ஓரே சீரான வேகத்தில் சுவாசித்து காற்றை அதிக அளவில் உட்செலுத்துங்கள். வேகமாகவும், அதேசமயத்தில் மூச்சிறைக்கும் அளவிற்கு இல்லாமலும் பார்த்துக் கொள்ள வேண்டும்.
Slow Walk

நடைபயிற்சியின் வகைகள்: 

            இது இரண்டு வகைப்படும்.

மெதுவாக நடப்பது  எப்போதும் நடக்கும் சாதாரண வேகமின்றி, சிரமமின்றி நடப்பதாகும். இந்த வகை நடைப்பயிற்சி உடல் வலி, சோர்வுகளைப் போக்கும். உடம்பில் உள்ள தசைகளையும், எலும்பு இணைப்புகளையும் இதமாக்கி, காயம் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளும். உடல் பருமன் உள்ளாவர்களுக்கு ஏற்ற நடையாகும். நடப்பதால் உடம்பில் உள்ள கழிவுகள் எரிக்கப்பட்டு,

பவர் வாக்கிங்  கைகளையும், கால்களையும் வேகமாக வீசி நடப்பது. இப்படி வேகமாக 

 வியர்வை அதிகம் வெளியேறி உடல் சுத்தமாகும். தசைகளும் எலும்புகளும் அதிக வலுவைப் பெற்று தன்னம்பிக்கையை அளிக்கும். இந்த பவர் வாக்கிங் நீரிழிவுக்காரர்களுக்கு ஏற்ற நடையாகும்.

நன்மைகள்:

  • சுவாசம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் குணமடைய உதவுகிறது.
  • இரத்த ஓட்டம் சீரடையும்.
  • நரம்புத்  தளர்ச்சி நீங்கி, நரம்பு மண்டலம் சுறுசுறுப்படையும்.
  • நாளமில்லா சுரப்பிகள் புத்துணர்ச்சி பெறும்.
  • அதிகப்படியான கலோரிகளை  எரிக்க உதவுகிறது.
  • முதுகு நரம்புகளை உறுதியாக்குகிறது.
  • எலும்பு மூட்டு செயல்பாடுகளை எளிமையாக்குகிறது.
  • எலும்புகள் வளர்ச்சிக்கு ஊக்கமளிக்கிறது.
  • உடலை உறுதியாக வைத்திருக்க உதவுகிறது.
  • கெட்டக் கொழுப்புச்சத்தின் அளவை குறைக்கிறது.
Speed Walking
  • மாரடைப்பு-சர்க்கரை நோயினைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்து உடலையும் – மனதையும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்கிறது.
  • உடல் மற்றும் மனச்சோர்வினை குறைக்கிறது.
  • நன்கு தூங்கிட உதவுகிறது.
  • கண்பார்வையை செழுமைபடுத்துகிறது.
  • செரிமாணக் கோளாறு சீராகிறது.

இயற்கையோடு  இணைந்த பயிற்சிகளான நீச்சல், வேக ஓட்டம், மெது ஓட்டம், பளுதூக்குதல், தோட்ட வேலை, நாட்டியம், சைக்கிள் ஓட்டுதல், கடின உழைப்பு போன்றவை மிகச்சிறந்த பயிற்சிகள்.

 
0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments