நீதானா

1
757

 

 

 

 

என் இதய அறையில்
என்னை அறியாமல் புகுந்தவன் நீதானா
விழியில் ஓர் உருவம்
நிழலாய் தொடரந்து காதல் மொழி பேசி
என் இதயத்தை திருடியது சரிதானா
காகிதம் எனும் மடலில் காதல் கடிதம் அனுப்பியது நீதானா

இறைவன் எனக்கென்று உறவாய்
உன்னை தான் படைத்தானா
இம் மண்ணில் உயிர்கள் உறங்க
நான் மட்டும் உறங்காமல் தவிக்க
என்னை சபித்தவன் என்னவனா
என் ஒவ்வொரு அசைவிலும் உன் ஞாபகம்
என்னை கொல்ல அடிமையாக்கியது நிஜம் தானா

என்னை அடக்கியாள பிறந்த இறை தூதனே
உன்னை காண என் மனம் துடிப்பது முறைதானா
அன்பினில் என்னை முழுவதுமாய் சிறை கொண்டு
பார்வையில் என்னை தின்று
பக்கத்தில் வெட்கம் கண்டு
இருளும் அஞ்ச என்னை கைது செய்தது நீதானா

இரவும் பகலும் ஒன்றாய் என்னை இரசித்திட
என் இமைகளை தீண்டியது கள்வனா
காதல் கண்ணை மறைக்க
ஆயுள் உள்ளவரை எனை சுமக்கும் ஜீவன் நீதானா
தேடல் தொடங்கி என்னை தொலைத்தேன் உன்னிடம் தானா
நீதானா என் உயிர் நிஜத்தினை உணர்த்திடு

 

 

 

 

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
1 கருத்து
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
அழகராஜ் பிரசாந்
அழகராஜ் பிரசாந்
4 years ago
இதை மதிப்பிடுங்கள் :
     

அருமையான காதல் கவி வரிகள்❤👍👍👌👌👌👌👌👌👌👌