நீயாய் இரு…

0
499

இவ் அண்டவெளியில் அலங்காரமாய் உலவித்திரியும் பட்டாம் பூச்சி நான்.. வண்ணச்சிறகடித்து என் கடமை முடிக்க உலவும் வேளை என் விழிகள் அகல உற்று நோக்கினேன்  ஓர் பெரும் பருந்தை ஓர் நொடியில் சிதறியது என் களிப்பு…

என் சிந்தனை கலத்தில் பொங்கி வழிந்தது ஒப்பீடு என் சிறுமையை எண்ணி அங்கலாய்த்தேன் “பருந்தின் வாண் தொடும் சிறகின் வலிமைக்கு ஒப்பாகுமா என் வண்ணச்சிறகு”  என்றெல்லாம்…

காலங்கள் கடந்தன எதேச்சையாய் கண்டேன் ஓர் பருந்து இரை தேடும் போது இரை பெற தன்னுயிர் கொடுக்கத் துணிந்து போராடி இரை பெற்றது அது …

இது கண்டு வியந்து என் என் அறிவுக்கண் திறந்தேன் என் ஓப்பீடுகளெல்லாம் ஒளி கண்டு ஒளியும் இருளாய் ஒழிந்தது…

என் உள்ளத்தில் விதைக்கப்பட்டது இவ்வெண்ணம்

வண்ணச்சிறகு கொண்ட பட்டாம் பூச்சியினது நோக்கமும் வாண் தொடும் சிறகைக் கொண்ட பருந்தின் நோக்கமும் ஒன்றல்ல அது போல் அவரவர்க்கு அமைவதை போலவே அவரது வாழ்க்கை வேறுபடும்…

இவ்வுலகில் பட்டாம் பூச்சிக்கும் இடம் உண்டு பருந்திற்கும் இடம் உண்டு அது அதுவாய் இருக்கும் போது
உன் வாழ்வில் உயர்வு காண நீ நீயாய் இரு..

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments