பருவத்தே பயிர் செய்…

1
2445
black-eyes-girl-india

நம்ம வாழ்க்கைல எவ்வளவோ முக்கியமான விஷயங்கள் இருக்கு. அதில ஒண்டு தான் timing என்கிற காலம். எந்த விஷயமும் அந்த அந்த காலத்தில நடக்காம வேறொரு  காலத்தில நடக்கிறப்போ அது நடக்கிறதில அர்த்தமே இல்லாம போய்டுது. சில விதிவிலக்குகள் இருந்தாலும் ஒவ்வொரு விஷயத்துக்கும் காலம் எண்ட ஒண்டு இருக்கு. படிக்கிறதுக்கு ஒரு காலம்,சாப்பிடுறதுக்கு  ஒரு காலம், துள்ளி திரிய ஒரு காலம், ஏன்? காதலிக்கிறது, கல்யாணத்துக்கு கூட ஒரு காலம் இருக்கு. ஏன்? எல்லாம் எப்பவும் நடக்கலாம் தானே அது என்ன காலம் எண்டு யோசிக்கலாம் ஆனா எந்த விசயமும் அந்தந்த காலத்தில நடக்கிறப்போ கிடைக்கிற சந்தோஷம் வேற எந்த காலத்தில நடக்கிற போதும் கிடைக்கிறதில்ல. எப்ப வேணும்னாலும் படிக்கலாம் அதுக்கு என்ன காலம் எண்டு யோசிக்கலாம்.படிப்பு என்கிறது மனசு சம்பந்தப்பட்ட விஷயம். இளமைல இருக்கிற மன நிலையோ உடல் நிலையோ வேற எந்த கட்டத்திலையு‌ம் இருக்கிறது இல்ல. மனசோ, உட‌லோ வயசு போக போக பல சோலிகள் வந்திடுது எனவே படிக்கிறத இளமைலயே படிச்சிரணும்.

அதே மாதிரி தான் சாப்பாட்டு விஷயமும் இளமைல இருக்கிற மாதிரி நம்ம உடம்பு ஒரு கட்டத்துக்கு மேல நமக்கு ஒத்துழைக்கிறது இல்ல. இளமைல என்ன தான் கல்லு மாதிரி இருக்கிறதையு‌ம் கடிச்சு சாப்பிடுற பல்லு முதுமை காலத்தில சோறு சாப்பிடுறதுக்கே அல்லாடுது. செரிமானமமும் அப்படி தான் எவ்வளவு தான் சாப்பிட்டாலும் தாங்கிற நம்ம உடம்பு ஒரு கட்டத்துக்கு மேல ஒரு பிடி சாப்பாடே சாப்பிட முடியாத அளவுக்கு நிலைமை போய்டுது.

அன்பு, காதல் என்கிற விஷயங்களும் அப்பிடி தான். அன்புக்கு என்ன காலம் எண்டு யோசிக்கலாம். யாருமே எவ்வளவு காலம் இருக்கிற எண்டு யாருக்குமே தெரியுறது இல்ல. ஆகவே இருக்கிற காலத்தில சந்தோசமா அன்பா இருந்திடணும்.கைமீறி போன பிறகு கவலைப்படுறதில எந்த பயனும் இல்ல.

காதலுக்கு என்ன காலம் life long காதலிப்பம் எண்டு யோசிக்கலாம். ஆனா எல்லாம் காதலா இருந்தாலும் ஒவ்வொரு கட்டத்தில இருக்கிற காதலுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கு. இளமை காலத்தில என்ன கதைச்ச எண்டே ஞாபகம்  இல்லாம நிறைய கதைக்கிறது, ஒண்டா சுத்துறது, பாக்கிறது, ரசிக்கிறது, butterfly பறக்குது எண்ட மாதிரி இருக்கிற காதல் முதுமை காலத்தில ஒருத்தர மாறி ஒருத்தர் உடல் நிலைய கவனிக்கிறதில காதல் என்கிற விஷயம் மாறி போய்டுது. வயசு போனா பிறகும் நாங்க ஒண்டா சுத்துவம், ரசிப்பம், நிறைய கதைப்பம் எண்டு சொல்லலாம். ஆனா ரெண்டு உணர்வுகளுக்கும் இடையில எவ்வளவோ வித்தியாசங்கள் இருக்கு அப்போ பறந்த அந்த butterfly இப்போ பெரும்பாலும் செத்து போய் இருக்கும்.

அவ்வளவு ஏன் அன்றாடம் நம்ம வாழ்க்கை முறைலையே நிறைய இருக்கு. பொதுவா இளமை காலத்தில நாம போடுற ஆடைகள் இளமைல தான் போடலாம். ஏன் முதுமை காலத்தில போடேலாது எண்டு இல்ல. இளமை காலத்தில அந்த ஆடைகளை போடும் போது கிடைக்கிற அழகு முதுமைல கிடைக்கிறது இல்ல. பூ பூத்த உடன அர்ச்சனைக்கு போகாட்டி காலடில தான் விழணும். பனிக்காலத்தில ice ஐயும் காற்றடிக்கிற காலத்தில மாவையும் வியாபாரம் பண்ணுறது இல்ல அத தான் காலம் எங்கிறது. காலத்தால கிடைக்கிற நல்ல நண்பர்கள் திரும்பவும் கிடைக்கிறது இல்ல.  நல்ல நண்பர்கள தெரிய வைக்கிறதே காலம் தான். காலத்தில தான் காரியங்களோட வெற்றி, தோல்விகள் அடங்கி இருக்கு. அதிஷ்டம் எங்கிறது வேற ஒண்டும் இல்ல கிடைக்க வேண்டிய எ‌ல்லா‌ம் அந்த அந்த காலத்தில சரியா கிடைக்கிறது தான் ..

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
1 கருத்து
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Gobikrishna D
4 years ago
இதை மதிப்பிடுங்கள் :
     

So true lines…