புறப்படு

0
1847

உன் பயணம் எது என நினைத்தாய்?
உன் நிலையில் தரித்து
உண்மை மறுத்து
உன்னை வளர்த்து
காலத்தின் வேகத்தில்
அச்சாணி இல்லாத சக்கரமாய் சுழன்று
ஓர் நாள் தடம்புரண்டு
ஓய்வான கல்லறையில்
உறங்குவது என்றோ ?
உன் பயணம் எதுவென்றால்..
பிறர் வாழ்விற்கான அத்தியாயமாக
உன்னை செதுக்கி
தீமை மறுத்து
சவால்களை எல்லாம்
சந்தர்ப்பங்களாக மாற்றி
வாழ்ந்தால்
இவனைப் போல வாழ வேண்டும்
என பிறர் கூறும்
சரித்திர வாழ்க்கை பயணமே..

உன் பயணம் எதுவென அறிந்தால்
இன்றே புறப்படு!!
உன்னதமான இலக்குகள் என்றும்
இலகுவான பயணத்தில்
அடையப்படுவது இல்லை..
யாரும் பிறப்பது இல்லை
உன்னோடு துணை நிற்க
துணிவின் துணையுடன் இன்றே புறப்படு!!

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments