பெண்களின் தொப்பையை குறைக்க எளிய வழிகள்!

0
2239
பெண்கள் தங்களின் உடல் பருமனை சீராக பராமரிக்க வேண்டும். உடல் உபாதைகளை தவிர்க்க, பிடித்த ஆடைகளை உடுத்த, அழகான தோற்றத்தில் காணப்பட, தொப்பை வராமல் பார்த்துக்கொள்வது முக்கியமானது. தினமும் அனைவரும் கண்ணாடியை பார்க்கும் போது, முதலில் முகத்தைப் பார்த்தப் பின் வயிற்றைத் தான் பார்ப்போம். அப்படி எப்போதெல்லாம் கண்ணாடியைப் பார்க்கிறோமோ, அப்போதெல்லாம் அனைவரது முகமும் சுருங்கும். ஏன் என்று தெரியுமா? உடலுக்கு ஏற்ற வயிறு இல்லாமல், கர்ப்பிணி போன்று வீங்கி இருப்பதாலே ஆகும். பலரும் தொப்பையைக்குறைக்க நடந்து, ஓடி, மாத்திரை, மருந்து என்று பலவற்றை நாடிக்கொண்டு இருக்கின்றனர். இவை யெல்லாவற்றையும் தாண்டி இயற்கையாக உணவும், செயலும் மருந்து எனும் அடிப்படையில், தொப்பையை குறைக்க எளிய வழிகள் சில இதோ உங்களுக்காக!
எண்ணெய்யில் பொறிக்கப்பட்ட உணவுகள், அதிக எண்ணெய் சேர்த்து தயாரிக்கப்பட்ட உணவுகளை தவிர்ப்ப து நல்லது. கொழுப்புச்சத்து அதிகமுள்ள உணவுகளையும் சாப்பிடக்கூடாது.
நன்கு தூங்கவும் நல்ல தூக்கத்துடன், தூங்கும் போது குப்புறப்படுத்து தூங்குங்கள். இதனாலும் தொப்பை குறையும். அதிலும் இரண்டே வாரங்களில் தொப்பை குறைய வேண்டுமானால், குப்புறப்படுங்கள். 
மென்மையான உணவுகளை உட்கொள்வது உகந்தது. அதிக குளிரான பானங்களை அருந்தக்கூடாது. அதே போல் பழங்கள் அதிகம் சாப்பிட வேண்டும்.
தண்ணீர் அதிகமாக குடிக்க வேண்டும். ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 3 லிட்டர் தண்ணீராவது குடிக்க வேண்டும். மேலும் மலச்சிக்கல் பிரச்னை இல்லாமல் பார்த்து கொள்வது அவசியம்.
ஒரு நாளைக்கு இரண்டு முறை குளிக்க வேண்டும். குளிப்பதற்கு பயன்படுத்தும் சோப்பை அடிக்கடி மாற்றக்கூடாது. இதனால் ஒவ்வாமை ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.
 
கோபம், மன அழுத்தம் இவற்றை குறைத்துக் கொள்ள வேண்டும். அதற்காக யோகா மற்றும் தியானப்பயிற்சிகள் மேற்கொள்வது நல்லது. தினம் யோகா செய்வதன் மூலம் உடலில் ரத்த ஓட்டம் சீராகி எல்லா உறுப்புகளும் பலம் பெறும்.
நெய் உடன் சின்ன வெங்காயத்தை வதக்கி அதனை நன்கு அரைத்து, அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து காலையும், மாலையும் ஒரு தேக்கரண்டி அளவிற்கு சாப்பிட்டு வந்தால் அடிவயிற்று சதை குறைந்து உடல் அழகாகும்.
0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments