பெண் தலைமை

0
1270
https-specials-images.forbesimg.com-dam-imageserve-503848805-960x0.jpgfitscale-3dfd3e90
பூக்கள் சூடும் பாவையின் நெஞ்சம்
பூமியில் என்றும் புனிதம் கொள்ளும்
உடலைப் படைத்து உதிரம் கொடுத்து
உயிரை காக்கும் உன்னத இறைவிகள்
மனதின் வலிமை ஆணிலும் பெரிது
மண்ணில் வாழும் பெண்மையே அரிது
வலிகளைத் தாங்கி வழிகள் காட்டும்
வல்லமை நிறைந்த அறிவின் சாகரம்
உருகும் மெழுகாய் உணர்வில் கரைவாள்
உரமாய் இருப்பாள் வெற்றியின் விதைக்கு
வாழ்வின் மேடையில் ஏற்றிடும் வேடங்கள்
வானை மிஞ்சிடும் பாசத்தின் கூடங்கள்
பொறுமையும் பெருமையும் நிரம்பிய பொருளாய்
பொங்கிடும் ஆளுமை அவளின் இயலுமை
தலைமுறை கடக்கும் தரணியின் வேரவள்
தன்னிகர் இல்லா தலைமைக்கு உரியவள்…
தெட்சணாமூர்த்தி கரிதரன்(சம்பூர் சமரன்)
0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments