பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் சேர்க்கப்பட்ட புதிய அம்சங்கள்

0
1326

சமூக வலை தளமான பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் புதிதாக முன்பதிவு  செய்யும் வசதி சேர்க்கப்பட்டுள்ளது.தற்போது இந்த புதிய மாற்றங்கள் மூலம் உலகளாவிய அனைத்து வணிகர்கள் மற்றும் அதன் வாடிக்கையாளர்கள் இடையே  நடக்கும் சந்திப்புகளை முன்பதிவு செய்ய அனுமதிக்கும் இது தங்கள் வேலையை இன்னும் சுலபமாக்கலாம்.

பேஸ்புக் இந்த அம்சத்தை நீண்ட நாட்களாக பரிசோதித்து வந்தது  மற்றும் மே 2018 ல் வணிகத்திற்கான “action button “யை அறிமுகம் செய்தது.

இப்போது  இந்த அம்சம் உலகம் முழுவதும் அனைத்து விதமான தொழில்களுக்கும் முன்பதிவு  செய்யும் வசதியை அளிக்கும்.

வணிகர்கள் தங்கள் பேஸ்புக் பக்கத்தில் இதை இணைப்பதற்கு edit profileஐ தேர்வு செய்து add action பெத்தனை கிளிக் செய்து book nowஐ செலக்ட் செய்ய வேண்டும்.இதன் மூலம் பயனர் book now அபிஷன் ஐ பொத்தானை சொடுக்கும் போது, ​​அவர்கள் தேதி, நேரம், மற்றும் அவர்கள் விரும்பும் சேவைகளை தேர்ந்தெடுக்க முடியும்.இந்த செயல்முறை பின்னர் வணிக நியமிப்பு கோரிக்கையை உறுதிப்படுத்தும் போது, ​​பயனர்கள் மெஸ்சேன்ஜ்ர் மூலமாக அறிவிக்கப்படுவார்கள்.

வணிக உரிமையாளர்களுக்கு பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் மூலம் அவர்களின் புக்கிங் மற்றும் அட்டவணைகளை நிர்வகிப்பது எப்படி பயனுள்ளதாக இருக்கும் என பேஸ்புக் நிறுவனத்தின் சி.ஓ.ஓ செரில் சேன்பெர்க் கூறுகையில்,  

இந்த புதிய அம்சம் அனைத்து தரப்பன வணிகர்களுக்கும் இலவசமாக வழங்கப்படும்.ஒவ்வொரு நாளும் 1 பில்லியனுக்கும் அதிகமானோர் பேஸ்புக்கில் நுழைகிறார்கள். இதன் விளைவாக மில்லியன் கணக்கான சாத்தியமான புதிய வாடிக்கையாளர்களுக்கு நேரடி அணுகல் உள்ளது. மேலும் இந்த புதிய சேவை வாடிக்கையாளர்களை எளிதாக ஈர்க்கும் மற்றும் உங்கள் பொன்னான நேரத்தை சேமிக்கும்.

வலைப்பகிர்வு
நன்றி : டெக் தமிழ்

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments