மாதுளை (Pomagranate)

0
1471

மூலிகையின் பெயர்: மாதுளை    

மருத்துவப்  பயன்கள்: மாதுளம் பழத்தைச் சாப்பிடுவதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகிறது.

பயன்படுத்தும் முறைகள்: மாதுளம் பிஞ்சைக் கொண்டு வந்து புளித்த மோரில் அரைத்துக் கலக்கி செரியாக்கழிச்சல், சீதக்கழிச்சல், நீர்நீராய் கழிச்சல்கள் இதரக் கழிச்சல்கள் நிற்கும்.

 

  • மாதுளம் விதைகளைச் சாப்பிட்டால் நீர்த்துப் போன சுக்கிலம் கெட்டிப்படுகிறது. மேக நோயின் பாதிப்பு ஏற்பட்டவர்கள் மாதுளை விதைகளைச் சாப்பிட்டால் பிரமேகம் பாதிப்பிலிருந்து நிவர்த்தியாகும்.
  • இதயநோய்கள், இதய பலவீனம் நிவர்த்தியாகும். இரத்தவிருத்தி ஏற்படும். சீதபேதிக்கு மாதுளை சிறந்த நிவாரணம் அளிக்கிறது. தொடர்ந்து நோயின் பாதிப்பால் பலகீனம் அடைந்தவர்கள் மாதுளம்பழத்தைச் சாப்பிட்டால் உடல் தேறும், உடல் எடைக்கூடும்.
  • தொண்டை, மார்பகங்கள், நுரையீரல், குடலுக்கு அதிகமான வலிமையை உண்டாக்குகிறது.
  • மூக்கிலிருந்து குருதி வடிவதை நிறுத்த மாதுளம் பூச்சாற்றுடன் அறுகம்புல் சாற்றையும் சம அளவு கலந்து தரலாம்.
  • மாதுளம்பழச் சாறு ஒருடம்ளர் சாப்பிட்டால் விக்கல் உடனே நிற்கும். அதிக தாகத்தைப் போக்கும். நெஞ்சு  எரிச்சல், மந்தம், அடிக்கடிமயக்கம் போன்றவை நீங்கும்.
  • மாதுளம் பழத்தின் மேல்புறம் ஒரு துளையிட்டு, அதனுள் சாப்பிடும் பாதாம் எண்ணெய் 15 மில்லிக்குக் குறையாமல் செலுத்தி, அதனை ஒரு பாத்திரத்தில் வைத்து சூடு செய்தால் எண்ணெய்  முழுவதும்  பழத்தில் கலந்து விடும். இவ்வாறு தயாரிக்கப்பட்ட பழத்தைச் சாப்பிட்டால் கடுமையான இதயவலி நீங்கிவிடும்.
Pomagranate
  • மாதுளம் பழச்சாற்றில் தேன் கலந்து காலை ஆகாரத்துக்கு பின் தினமும் சாப்பிட்டால், ஒரு மாத உபயோகத்தில் உடல் ஆரோக்கியமும் தெம்பும் உண்டாகும். புதிய ரத்தம்  உற்பத்தியாகிவிடும்.
  • உடலுக்குத்தீங்கு விளைவிக்கும் வைரஸ் கிருமிகளை மிகத் துரிதமாகவும், அதிக அளவிலும் அழித்து விடுகிறது. அதனால் நோய் நீங்கி ஆரோக்கியமும் சக்தியும் அளிப்பதில் மாதுளை சிறந்த பலனைத் தருகிறது.

இனிப்பு மாதுளம்

இனிப்பு மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் இதயத்திற்கும், மூளைக்கும் மிகுதியான சக்தி கிடைக்கிறது. பித்தத்தைப் போக்குகிறது, இருமலை நிறுத்துகிறது.

புளிப்பு மாதுளை

புளிப்பு மாதுளையைப் பயன்படுத்தினால் வயிற்றுக் கடுப்பு நீங்குகிறது .ரத்த பேதிக்குச் சிறந்த மருந்தாகிறது. தடைபட்டசிறுநீரை வெளியேற்றுகிறது. குடற்புண்களை (அல்சர்) குணமாக்குகிறது.

மாதுளம்பூக்களை மருந்தாகப்பயன்படுத்தும் போது, இரத்தவாந்தி, இரத்தமூலம்வயிற்றுக்கடுப்பு,

உடல்சூடுதணியும்.

மாதுளம்பூக்களைத் தலையில் வைத்துக் கட்டிக் கொண்டால் தலைவலி தீரும். வெப்ப நோய்தீரும்.

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments