மொபைல் போலி ஆப் ,போலி விளம்பரங்கள் அதிகரித்து வருகிறது

0
1537

தற்போது உள்ள காலகட்டத்தில் மொபைல் மற்றும் இன்டர்நெட் பயன்படுத்துவோர் எண்ணிக்கை உச்சத்தில் உள்ளன.அதனால் பல்வேறு நிறுவனமும் டிஜிட்டல் விளம்பரத்தின் மீது ஆர்வம் காட்டி வருகின்றனர். மேலும் இதில் கோடிகணக்கான தொகையை முதலீடும் செய்து வருகின்றனர்.இதை சாதகமாக கொண்டு பல்வேறு நிறுவனங்கள் போலி விளம்பரங்கள் பரவுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

அமெரிக்காவில் உள்ள  eMarketer கணக்குகெடுப்பின் படி 2019 ஆம் ஆண்டின் விளம்பர செலவு $ 87 பில்லியனாக இருக்கும் என்று கூறியுள்ளது.கடந்த ஆண்டு முதல் முறையாக தொலைக்காட்சி விளம்பரத்துக்கான செலவை காட்டிலும் மொபைல் விளம்பர செலவு அதிகரித்துள்ளது.

இந்த வளர்ச்சிக்கு முதன்மையாக மொபைல் பயன்பாட்டு விளம்பரங்களில் பெரும் முதலீடு செய்வது தான்.மேலும் இது அடுத்த மூன்று ஆண்டுகளில் 2021 ஆம் ஆண்டில் உலகளாவிய செலவினங்கள் $ 201 பில்லியனை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனை மோசடி செய்பவர்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி வருகின்றனர் 2017 முதல் 2018 வரை ஒரு வருடத்தில் 159% மோசடி பயன்பாடுகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.மேலும் பலவிதமான போலி ஆப்களும் உலாவி வருகின்றனர்.இதனால்வணிகங்கள் பாதிப்பும் அடைகின்றனர்.

DoubleVerify இன் மோசடி ஆய்வகத்தின் தலைவரான ராய் ரோசென்ஃபெல்ட் உங்களுடைய நோக்கம் உங்கள் தயாரிப்புக்கு ஒருபோதும் கிடைக்காவிட்டால், வணிகமானது அதன் மார்க்கெட்டிங் என்பது மூலம் பல டாலர்களை வீணடித்துள்ளது என்றயே அர்த்தம்.

மொபைல் பயன்பாட்டில் அதிக கவனம் செலுத்துவதன் மூலம், விளம்பரதாரர்கள் தங்கள் நலன்களைப் பெறும் முயற்சிகளை குறைத்து வருகின்றனர். இந்த ஆபத்துக்களை புரிந்து கொண்டு பிராண்ட்கள் தங்கள் டிஜிட்டல் முதலீட்டிற்கான சரியான பாதுகாப்புகளை நிறுவவும்.

வலைப்பகிர்வு
நன்றி : டெக் தமிழ்

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments