ருசியான பேரீச்சை பர்ஃபி!

0
2040

தேவையான பொருட்கள்

பேரீச்சை – 20 (கொட்டை நீக்கவும்)
சர்க்கரை – 150 கிராம்
தேங்காய்த் துருவல் – 100 கிராம்
நெய் – 3 மேசைக்கரண்டி
முந்திரி – 20
ஏலக்காய்த்தூள் – கால் தேக்கரண்டி
செய்முறை

பேரீச்சையை மிகவும் மெல்லியதாக நறுக்கி வைக்கவும்.

வாணலியில் சிறிதளவு நெய்விட்டு முந்திரியை வறுக்கவும்.

பிறகு பேரீச்சையைச் சேர்த்து லேசாக ஒரு புரட்டுப் புரட்டவும்.

வெறும் வாணலியில் தேங்காய்த் துருவலைப் பொன்னிறமாக வதக்கவும்.

தேங்காய்த் துருவல், முந்திரி இரண்டையும் மிக்ஸியில் சன்னமாகப் பொடிக்கவும்.

பேரீச்சையும் உடன் சேர்த்துப் பொடித்து நன்கு கலக்கவும். பிரஷர் பான் (pressure pan) அல்லது அடிகனமான வாணலியில் சர்க்கரையுடன் நீர் சேர்த்துப் பாகு காய்ச்சவும்.

கம்பிப் பதம் வந்ததும் பொடித்து வைத்திருக்கும் கலவை, ஏலக்காய்த்தூள், மீதமுள்ள நெய் சேர்த்துக் கிளறி, பூத்து வரும்போது நெய் தடவிய தட்டில் கொட்டி வில்லைகள் போடவும்.

Source : வலைப்பகிர்வு

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments