வா மழையே

1
731
1 (1)

 

 

 

 

வெண்பனி முகில்கள் மறைய
வான் அதிர மின்னல் மின்ன
பிரபஞ்சம் முழுவதும் காரிருள் சூழ
தட தட என பல்லாயிரம் வேதங்கள் முழங்க
பூமியை தொட்ட மழையே

விவசாயிகளின் மனம் குளிர
கடவுள் என்று வணங்கிட
மக்கள் பசி போக்கிட பயிர்கள் செழித்திட
வெப்பம் தணித்து உயிர்களை காத்திட
கருணை கொண்டு வா மழையே

பெரு வெள்ளமாய் மண்ணில் தவழ
காகிகத கப்பல் செய்து விளையாடிய பருவமது
வெப்பத்தில் மாந்தர் எல்லாம்
அல்லறுவதை கண்டு கலங்கிடாதே என்று
கண்ணீர் துடைத்த வா மழையே

செடி கொடி எல்லாம் உன் வரவை கண்டு
பெரு மகிழ்ச்சியில் திளைத்திட
இயற்கையின் பெரு செல்வமே
மரங்கள் எல்லாம் பூத்து குலுங்கிட வா மழையே

எட்டு திசையும் தாளங்கள் முழங்கிட
உன்னை உத்தமி அழைத்திட
இந்த பூமியில் செல்வங்கள் விழைந்திட வா மழையே
உன் வரவை காண ஏங்கும் மாந்தர்க்கு
வழி சொல்ல வா மழையே

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
1 கருத்து
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
அழகராஜ் பிரசாந்
அழகராஜ் பிரசாந்
4 years ago
இதை மதிப்பிடுங்கள் :
     

super lines👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌