விட்டமின் E கேப்ஸ்யூலை முகத்திற்கு பயன்படுத்துவது நல்லதா?

0
1131

விட்டமின் E கேப்சூலானது பொதுவாக பச்சை மற்றும் கோல்டன் நிறத்தில் கிடைக்கும். விட்டமின் E ஒரு ஆக்ஸிஜனேற்றியாகும் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டதுமாகும். இது பல ஆண்டுகளாக தோல் பராமரிப்பு உற்பத்தியில் பிரபலமான ஒரு பொருளாக உள்ளது.

எண்ணெய்த் தன்மையுடைய முகத்திற்கு விட்டமின் E கொடுக்கும் பயன்கள்

  • சருமத்தை ஈரப்பதமாக்கி வளர்க்கிறது.
  • பளபளப்பை அதிகரிக்கிறது.
  • மென்மையாகவும் ஆரோக்கியமாகவும் ஆக்குகிறது.
  • ஆரோக்கியத்தை பராமரிப்பதைத் தவிர, ஹைப்பர் பிக்மென்டேஷன் மற்றும் சுருக்கங்களைக் குறைக்கும் என்றும் அறியப்படுகிறது.
  • தோலின் வயதான தோற்றத்தை தடுக்கிறது.

  • விட்டமின் E இல் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகின்றன.
  • சருமத்தை உறுதியாகவும் இளமையாகவும் வைத்திருக்கும்.
  • வறண்ட தோல் நிலைகளை மேம்படுத்துகிறது
  • விட்டமின் E எண்ணெய்யானது சருமத்தின் வறண்ட தன்மையை குறைக்கும் தடுக்கும் மாய்ஸ்சரைசராக செயற்படுகிறது.
  • லேசான தடிப்புத் தோல் அழற்சிக்கு சிகிச்சையளிக்க விட்டமின் E எண்ணெய் உதவக்கூடும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன
  • விட்டமின் E எண்ணெய் துளைகளில் இருந்து அழுக்கை நீக்கி உங்களுக்கு புத்துணர்ச்சியூட்டும் மற்றும் மென்மையான தோற்றத்தை அளிக்கும்.
  • இது முகப்பருவினால் ஏற்படும் குழிகளிலுள்ள அழுக்கை நீக்குகின்றது.

விட்டமின் E எல்லோரும் பயன்படுத்தலாமா?

விட்டமின் E எண்ணெய்யானது அனைத்து தோல் வகைக்கும் சாத்தியமில்லை. உங்களது சருமம் எண்ணெய் சருமம் என்றால், நீங்கள் பயன்படுத்த இது சிறந்த வழி அல்ல.

உங்கள் முகத்தில் விட்டமின் E எண்ணெயைப் பயன்படுத்துவதற்கு முன்னர் உங்கள் கையின் பின்புறத்திலோ அல்லது காதுகளுக்கு பின்புறமோ பேட்ச் டெஸ்ட் செய்யுங்கள். குறைந்தது 24 மணி நேரம் காத்திருங்கள். நீங்கள் விட்டமின் E பயன்படுத்திய பகுதியில் அரிப்பாகவோ அல்லது சிவப்பு நிறமாகவோ உணரவில்லை என்றால், அதை உங்கள் முகத்தில் தடவலாம்.

உங்கள் முகத்திற்கு விட்டமின் E எண்ணெயை எவ்வாறு பயன்படுத்துவது?

  • முதலில் உங்கள் முகத்தை மென்மையாக கழுவி உலர விடவும்.
  • ஒரு சூடான துண்டை எடுத்து 2-3 நிமிடங்கள் ஒற்றி எடுக்கவும். இப்படி செய்தால் விட்டமின் E எண்ணெயை முகத்தில் மஸாஜ் செய்யும் போது அது முகத்திற்குள் நன்றாக உள்வாங்கிக் கொள்ளப்படும்.
  • இப்போது விட்டமின் E கேப்சூலின் ஒரு நுனியில் சிறிது துளையிட்டு எண்ணெயை எடுத்துக் கொள்ளுங்கள். உங்கள் விரல்களால் எண்ணெயை உங்கள் தோலில் மெதுவாக தேய்க்கவும்.
  • உங்களது சருமம் உலர்ந்த சருமம் என்றால் இரவில் எண்ணெயை தடவிய் கொண்டு தூங்கி காலையில் எழுந்த பின்னர் முகம் கழுவிக் கொள்ள முடியும். ஆனால் உங்களது சருமம் எண்ணெய் சருமம் என்றால் 15 நிமிடங்களுக்குப் பிறகு முகத்தை கழுவவும்.
  • விட்டமின் E எண்ணெய் ஒட்டும் தன்மை உடையது. இது நாம் தூங்கும் போது நமது தலையணைகளை கறைபடுத்தக் கூடியது நீங்கள் ஒரு இரவு முழுவதும் விட்டமின் E எண்ணெய் பூசி விட்டு விட தீர்மானித்தால் உங்கள் தலையணையில் கறை படிவதை தவிர்க்க ஒரு மென்மையான துண்டை மேலே போட்டு விடலாம்.

முகத்திற்கு விட்டமின் E எண்ணெய் எவ்வளவு நேரம் அப்ளை செய்து கொள்ள முடியும்?

எந்தவொரு எண்ணெயையும் பயன்படுத்துவதற்கு முன்பு முதலில் நமது தோல் வகையை தீர்மானித்துக் கொள்வது அவசியம். விட்டமின் E எண்ணெய் ஆனது சருமத்திற்கு பல வழிகளில் பயன் அளித்தாலும் இது அனைத்து தோல் வகைகளுக்கும் பொருந்தாது. உங்களது சருமம் எண்ணெய் தன்மையுடையதாக இருந்தால் நீங்கள் அப்ளை செய்து 15 நிமிடங்களுக்கு பிறகு முகத்தை கழுவுதல் அவசியம்.

முகத்துக்கு விட்டமின் E எண்ணெய் ஒரு இரவு முழுவதும் அப்ளை செய்து கொண்டு உறங்க முடியுமா?

வறண்ட சருமத்திற்கு

விட்டமின் E எண்ணெயானது மென்மையான சருமத்தை மெருகூட்டி தருகின்றது. உங்களது சருமம் வறண்ட சருமமாக இருந்தால் நீங்கள் அதனை இரவு முழுவதும் அப்ளை செய்து கொண்டு உறங்க நினைத்தால் விட்டமின் E எண்ணெயை ஜோஜோபா எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் போன்ற கேரியர் எண்ணெயுடன் கலந்து பயன்படுத்துங்கள் தனியாக பயன்படுத்துவதாயின் நீண்ட நேரம் உங்கள் தோலில் அப்ளை செய்து கொள்ள வேண்டாம்

எண்ணெய் சருமத்திற்கு

உங்களது சருமம் எண்ணெய் தன்மையுடையது என்றால், நீங்கள் விட்டமின் E எண்ணெய் அப்ளை செய்த 15 நிமிடங்களுக்குப் பிறகு கழுவிக் கொள்ளல் அவசியம்.

பொதுவாக விட்டமின் E எண்ணெய் பயன்படுத்துவதாயின்,

  • விட்டமின் E எண்ணெய்யினை ஏதாவது எண்ணெயுடன் சேர்த்து அப்ளை செய்து கொள்வதே நல்லது. ஏனெனில் விட்டமின் E எண்ணெயில் எண்ணெய் தன்மையின் அடர்த்தி அதிகம்.
  • இதனை நீங்கள் தொடர்ந்து தினமும் பயன்படுத்தக்கூடாது.வாரத்திற்கு இரண்டு முறை பயன்படுத்துவதே சிறந்தது
  • உங்களது பேஸ் வாஷ், டோனர்,மாய்சரைஸர் ,கற்றாழை ஜெல்,ஷாம்பு ,சீயக்காய் போன்றவற்றுடன் இந்த விட்டமின் E எண்ணெய் கலந்து பயன்படுத்தலாம்
  • நம் தலைமுடி வளரவும் , மிருதுவாக இருக்கவும் உதவும். நாம் தலைக்கு பயன்படுத்தும் எண்ணெயுடன் 2 விட்டமின் கேப்சூல் பயன்படுத்தலாம் (கேப்சூல் நுனியில் சிறு துளையிட்டு அதிலிருந்து எண்ணெய் எடுத்து கொள்ளலாம்)
  • விட்டமின் E உணவு வகைகளையும் இத்துடன் உட்கொண்டால் மிகவும் நல்லது.
    சூரியகாந்தி விதைகள்
    பாதாம்
    வேர்க்கடலை
    வெண்ணெய்
    கீரை

 

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments